தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2021 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)

2021-ஆம் ஆண்டுக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 
ஆங்கிலப் புத்தாண்டு பலண்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலண்கள்

2021-ஆம் ஆண்டுக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

சித்திரை மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் சமூகத்தில் உயர்ந்தவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். செய்தொழிலில் புதிய நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உங்கள் நண்பர்கள், உற்றார் உறவினர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து அவர்களுக்கு வழிகாட்டியாகவும் அமைவீர்கள். 

குடும்பத்தில் நிம்மதி நிறையும். பெற்றோருக்கு நெடுநாளாக இருந்த உடல் உபாதைகள் மறைந்து ஆரோக்கியம் மேம்படும். உங்கள் செயல்களை முன்கூட்டியே திட்டமிட்டு சரியாகச் செய்து முடித்து விடுவீர்கள். வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். 

ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். தெய்வ வழிபாட்டில் கவனம் செலுத்துவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றி விடுவீர்கள். அன்னை வழி உறவினர்களாலும் சில நன்மைகளைப் பெறுவீர்கள். பேச்சில் நளினமும், முகத்தில் பொலிவும் உண்டாகும். பொது நலக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.  

ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் சற்றும் பழகாத, முன் பின் தெரியாத நபர்கள் மூலம் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் மறுபடியும் குடும்பத்துடன் இணைவார்கள். சமுதாயத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். அந்தஸ்தான பதவிகள் கிடைக்கும். 

உடல் ஆரோக்கியம், மன வளம் இரண்டும் மேம்படும். உங்கள் செயல்திறன் கூடும். வருமானம் படிப்படியாக உயரும். நேர்மையுடன் செயல்படுவீர்கள். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். மழலை பாக்கியமும் உண்டாகும். உங்களின் மறைமுக எதிரிகளை இனம் கண்டு விலக்கிவிடும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் பிலவ தமிழ்ப் புத்தாண்டில் அலுவலக வேலைகளை முழுமையாக செய்து முடித்து விடுவீர்கள். வேலைப் பளு கூடும், ஆகையால் உங்கள் வேலைகளைப் பட்டியலிட்டு செயல்படுத்தவும். சிலர் விரும்பிய இடமாற்றங்களையும் பெறுவீர்கள். பணவரவு சுமாராக இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும், கவனமாக இருக்கவும். 

வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் படிப்படியாக முன்னேற்றத்தைக் காண்பீர்கள். புதிய சரக்குகளை வாங்கிக் கடையை விரிவுபடுத்துவீர்கள். கூட்டுத்தொழிலில் நன்மைகளைக் காண்பீர்கள். நேரடி எதிர்ப்புகளும் போட்டிகளும் தோன்றினாலும் அவை தாமாகவே விலகி விடும். 

விவசாயிகள் உளுந்து, எள், கடுகு, மிளகு ஆகிய பயிர்களை விளைவித்து மிதமான லாபம் அடைவீர்கள். மற்றபடி நெல், கோதுமை பயிர் செய்பவர்கள் அதிக வருமானத்தைக் காண்பார்கள். பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கும், கால்நடை பராமரிப்புக்கும் சற்று கூடுதலாக செலவு செய்ய நேரிடும். 

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தினர் புதிய பொறுப்புகளை அளித்து சோதிப்பார்கள். அதனால் எச்சரிக்கை உணர்வுடன் பணியாற்றி நற்பெயரைச் சம்பாதிக்கவும். மனதில் தோன்றும் எண்ணங்களை உடனுக்குடன் நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். தொண்டர்களின் ஒத்துழைப்பும் நன்றாக இருக்கும்.  

கலைத்துறையினரின் திறமைகள் பளிச்சிடும் காலமாகவே இந்த தமிழ்ப் புத்தாண்டு அமைந்திருக்கிறது. ரசிகர்களின் ஆதரவும் உங்களை ஊக்கப்படுத்தும். பட வாய்ப்புகளும் அதிகரிக்கத் தொடங்கும். 
பெண்மணிகளுக்கு பிள்ளைகளால் பெயரும் புகழும் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். ஆன்மிகத்திலும் நாட்டம் அதிகரிக்கும். கணவருடன் சுமுகமான உறவைக் கடைப்பிடிப்பீர்கள். பணிக்குச் செல்லும் பெண்கள் வருமான ஏற்றத்தைக் காண்பார்கள். புதிய ஆடை அணிகலன்கள் சேர்க்கை உண்டாகும். 

மாணவமணிகள் படிப்பில் இருந்த தடங்கல்களைத் தாண்டி நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். தாயாரின் அரவணைப்பில் சத்தான ஆகாரங்களை உண்டு மகிழ்வீர்கள். வெளி விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வெற்றிவாகை சூடுவீர்கள். 

பரிகாரம் - முருகப் பெருமானை வழிபட்டு வரவும்.

******

மகரம் (உத்திராடம் 2-ஆம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

சித்திரை மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். மகிழ்ச்சி நிறையத் தொடங்கும். உற்றார் உறவினர்களிடம் அனுசரித்து நடந்துகொண்டு அவர்களுடன் சிறப்பான உறவைப் பேணுவீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் சரியான திசையில் செல்லும்.  

செய்தொழிலில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். நண்பர்களுடன் இனிமையாகப் பேசி அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். உங்களின் தோற்றத்தில் பொலிவும், உடல் வலிமையும் கூடும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஆதாயம் தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும்.  

வீட்டிலும் வெளியிலும் இருந்த போட்டி பொறாமைகள் குறைந்துவிடும். குழந்தைகளைப் புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுபச் செய்திகள் வந்து உங்களைத் திக்குமுக்காடச் செய்யும் காலகட்டமிது என்றால் மிகையாகாது. 

ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் நீண்டகாலமாக இருந்த நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்வீர்கள். உங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாத உற்றார் உறவினர்களும் உங்களின் குணமறிந்து பக்குவமாக நடந்து கொள்வார்கள். 

சிறிய விஷயங்களையும் நல்லபடியாகப் புரிந்து திறம்படச் செயல்படுத்துவீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்கு அவர்களின் தேவைகளையும் மீறி அதிகமாக உதவி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் புகழ், கெüரவம் கூடும். தாய்வழி மூதாதையர்கள் வழியில் சொத்துகளின் பாகப்பிரிவினை உண்டாகி, அவைகளிலிருந்து வருமானம் வரத் தொடங்கும். உங்கள் பேச்சினால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். மற்றபடி வருமானத்தில் எந்தத் தடையும் உண்டாகாது. குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் குறையும். ஆன்மிக விஷயங்களில் உங்கள் ஈடுபாடு அதிகரித்து, அது சம்பந்தமான ஆலோசனைகளையும் வழங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் மற்றும் ஊதிய உயர்வும் கிடைக்கப் பெறுவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெற சந்தர்ப்பங்கள் உண்டாகும். நீங்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த வீட்டுக் கடன்கள் கிடைக்கப்பெற்று, வீடு கட்ட ஆரம்பிப்பீர்கள். 

வியாபாரிகள் சுகங்களை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டிய காலகட்டமாகும். கூட்டாளிகளை நம்பாமல் நீங்களே சிரத்தையுடன் செயல்படுவீர்கள். நம்பிக்கை மோசம் போகாமலிருக்க எச்சரிக்கை தேவை. எதிர்பார்த்த பணம் வருவது சற்று தாமதமாகும். 

விவசாயிகள் அரசாங்க உதவிகளைப் பெறுவார்கள். விளைச்சல் நன்றாக இருக்கும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் தேடி வரும். கருப்பு நிறப் பொருள்களை உற்பத்தி செய்பவர்
களும் நலமடைவார்கள். மஞ்சள் பயிரிட்டு அம்மன் கோயில்களுக்கு வழங்கி வர, விளைச்சலில் லாபம் அதிகரிக்கும். 

அரசியல்வாதிகள் தங்களைவிட வயதில் முதிர்ந்தவர்களிடம் ஆலோசனை கேட்டு அவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கையுடன் அனுப்பவும். எவருக்கும் வாக்கு கொடுப்பதையோ, முன் ஜாமீன் போடுவதையோ தவிர்க்கவும்.  

கலைத்துறையினர் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது நன்கு பரிசீலித்து கையெழுத்திடவும். எதிர்வரும் இடர்ப்பாடுகளைத் தங்கள் சாமர்த்தியத்தால் சமாளிப்பீர்கள். பணம் புழக்கத்திற்கு குறைவு வராது. 
பெண்மணிகளுக்கு கணவன்}மனைவி இடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் மறையும். இணக்கமான சூழ்நிலை உருவாகும். சகோதரர்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகள் மறையும். தெய்வ வழிபாட்டை கூட்டிக் கொள்ளவும். 

மாணவமணிகளுக்கு நினைவாற்றல் பெருகும். ஆசிரியர் கற்றுத்தரும் பாடங்களைக் காந்தம் போல் கவர்ந்து மூளையில் பதித்துக் கொள்வீர்கள். வெளி விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.  

பரிகாரம் -  பார்வதி பரமேஸ்வரரை வழிபட்டு வரவும்.

******

கும்பம் (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

சித்திரை மாதம் முதல் புரட்டாசி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் சக நண்பர்களின் ஆதரவால் பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும். வாக்குவன்மையாலும் ஆதாயங்களைப் பெறுவீர்கள். போட்டி பந்தயங்களிலும் தைரியத்துடன் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். 

மனதில் பணி சம்பந்தமான சிந்தனைகள் கூடும். குடும்பத்தில் அமைதி நிறையும். செய்தொழிலில் எதிர்பாராத தனவரவுகளால் சேமிப்புகள் உயரும். உங்களின் தனித்திறமையைக் கூட்டிக் கொள்வீர்கள். அதே நேரம் கையிருப்புப் பொருள்களின் மீது சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய காலகட்டம் இது. 

ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் அரசியலில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மனதிலிருந்த நெருடல்கள் மறையும். நண்பர்கள் உங்களிடம் அனுசரித்து நடந்து கொள்வார்கள். உடலில் ஏற்படும் ஆயாசத்தைத் தவிர்க்க யோகா, பிராணாயாமம் போன்றவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்.  

நுண்கலைகளில் ஆர்வமும், சாஸ்திரத்தில் தேர்ச்சியும் உண்டாகும். இதுவரை தாமதித்து நடந்த விஷயங்கள் யாவும் உடனடியாக நடக்கத் தொடங்கும். குழந்தைகளின் எண்ணங்களையும் உணர்வுகளையும் புரிந்து கொண்டு அதன்படி நடந்து கொள்வீர்கள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதால் அனுகூலம் உண்டாகும். பெற்றோர்களின் விருப்பங்களையும் பூர்த்தி செய்வீர்கள். உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைகளுக்கேற்ப மாற்றி அமைத்துச் செயல்படும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் தடை இராது. உடலில் சோர்வும் மனதில் தெளிவின்மையும் காணப்படும். உங்களுக்கு பாதுகாப்பு கொடுத்து வந்த மேலதிகாரிகளின் ஆதரவும் குறையும். ஆனாலும் உங்கள் கடமைகளைப் பதற்றப்படாமலும், நிதானத்துடனும் செய்து வருவீர்கள். 

வியாபாரிகளுக்கு இதுவரை தொழிலில் இருந்த போட்டியாளர்கள் விலகி விடுவார்கள். பிறருடைய தொழில் ரகசியங்களை நீங்கள் அறிய வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் படிப்படியான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நூதன யுக்திகளைப் புகுத்தி வியாபாரத்தைப் பெருக்க நினைப்பீர்கள். மொத்தத்தில் உங்களின் பழைய கால அனுபவங்கள் உங்களுக்கு கை கொடுக்கும். 

விவசாயிகளுக்கு இது சாதகமான காலகட்டமாகும். விளைச்சலைப் பெருக்கி லாபத்தை அள்ளுவீர்கள். பூச்சிக்கொல்லி மருந்துகளுக்காக அதிகம் செலவு செய்ய நேரிடும். விவசாயக் கூலித் தொழிலாளர்களைப் பரிவுடன் நடத்தி அவர்களையும் உங்களுடன் அரவணைத்துச் செல்லுங்கள். கால்நடைகளால் எதிர்பார்த்த வருமானங்களைப் பெறுவீர்கள். புதிய நிலங்களை வாங்கி விவசாயத்தைப் பெருக்கும் எண்ணம் மேலோங்கும். வருங்காலக் கனவுகள் பலிப்பதற்கான அறிகுறிகள் தென்படும். 

அரசியல்வாதிகளுக்கு பெயரும், புகழும் கூடத் தொடங்கும். கட்சி மேலிடத்திடம் சுமூகமான உறவு வைத்துக்கொள்வது அவசியம். நண்பர்களிடம் வீண் வாக்கு வாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். தொண்டர்களை அரவணைத்துச் செல்லவும். 

கலைத்துறையினருக்கு இந்த தமிழ்ப் புத்தாண்டில் புகழ் கூடும், செல்வாக்கு அதிகரிக்கும். புதிய வாய்ப்புகளைப் பெற சிறிய தியாகங்களைச் செய்ய வேண்டி வரும். ரசிகர்களின் ஆதரவு பெருகும். 

பெண்மணிகள் குடும்பத்தில் நடக்க வேண்டிய சுபநிகழ்ச்சிகளை மகிழ்ச்சியுடன் நடத்துவீர்கள். கணவருடன் ஒற்றுமையாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டிய காலகட்டம் இது. மனதில் பட்டதை உடனுக்குடன் பேசுவதைத் தவிர்க்கவும். 

மாணவமணிகள் படிப்பில் வெற்றி வாகை சூடுவீர்கள். உங்களின் படிப்பாற்றலும், ஞாபகசக்தியும், அறிவாற்றலும் பெருகும். விளையாடும் நேரங்களில் கவனமாக இருக்கவும். பெற்றோர்களின் ஆதரவுடன் உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். 

பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபட்டு வரவும்.

******

மீனம் (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

சித்திரை மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் பொருளாதாரம் படிப்படியாக உயரத் தொடங்கும். நீங்கள் சம்பாதிக்கும் பொருளைப் பத்திரமாக 
பாதுகாப்பீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை மனதிற்கினிய பயணங்களைச் செய்து மகிழ்வீர்கள். 

தடைபட்டிருந்த செயல்களை எப்பாடுபட்டேனும் குறைவில்லாமல் செய்து முடித்து விடுவீர்கள். நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் மறையும். வாழ்க்கையில் எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். திறமைக்கேற்ற பாராட்டுகளைப் பெறுவீர்கள். அதேநேரம் நண்பர்களிடம் வீண் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். 

ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். செய்தொழிலில் ஓய்வில்லாமல் உழைப்பீர்கள். அனைவரும் உங்களைப் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.  நெடுநாளாக மனதை வாட்டிக் கொண்டிருந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். 

செய்தொழிலை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவீர்கள். போட்டிகளில் சாதுர்யமாக செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்கும் புதிய வாய்ப்புகளை அளிப்பீர்கள். குலதெய்வ வழிபாட்டினை மேற்கொள்வீர்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களில் இருந்து வருமானம் வந்து சேரும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். குழந்தை இல்லாதோர்க்கு அத்தகைய பாக்கியம் உண்டாகும். 

உத்தியோகஸ்தர்கள் கடின உழைப்பின் மூலம் மேலதிகாரிகளின் கெடுபிடியில் இருந்து தப்பிப்பீர்கள். உங்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரமிது. சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். உங்கள் உழைப்புக்கு இரட்டிப்பு வருமானத்தைப் பெறுவீர்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். 

வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சமூகமாக இருந்தாலும் புதிய முதலீடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியிருக்கும். தன்னிச்சையாக செயல்படுவதைத் தவிர்த்து கூட்டாளிகளுடன் கலந்தாலோசித்த பிறகே உங்கள் எண்ணங்களை நிறைவேற்ற முற்படுங்கள். 

விவசாயிகளின் நிலங்களுக்குத் தேவையான நீர்வரத்து அதிகமாகக் காணப்படுவதால் தகுந்த நேரத்தில் பயிரிட்டு விளைச்சலைக் கூட்டிக் கொள்ள முற்படுங்கள். கால்நடைகளால் விரும்பிய பலனைப் பெற முடியாமல் போகலாம். சந்தையில் விளைபொருள்களின் விற்பனை மிகவும் நன்றாகவே இருக்கும். 

அரசியல்வாதிகள் எதிலும் எப்போதும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியிருக்கும். சமூகத்தில் அந்தஸ்தான பதவி கிடைக்கப் பெறுவீர்கள். எதிரிகளின் கை ஓங்கியே காணப்படும். கட்சியில் உங்கள் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படலாம். அதனால் வாயைக் கொடுத்து விவகாரத்தில் மாட்டிக் கொள்ள வேண்டாம். அதேநேரம் பயணங்களால் வெற்றியடைவீர்கள். 

கலைத்துறையினர் தங்கள் காரியங்களில் தடைகளைச் சந்திக்க நேரிடும். கடமைகளை சரிவர ஆற்றி நற்பெயர் சம்பாதிக்க கடும் முயற்சி செய்வீர்கள். சில சமயங்களில் உங்கள் செயல்களில் சிறிய தடுமாற்றத்தைச் சந்திக்க நேரிடும். பணவரவும் குறையும். கவனமாக இருந்து சாதுர்யமாக காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். 

பெண்மணிகள் குடும்பத்தில் அனைவரையும் அரவணைத்துச் செல்ல நேரிடும். முக்கியமான முடிவுகளை எடுக்கும்பொழுது நன்கு யோசித்து எடுக்கவும். பேசும்பொழுது கடும் சொற்களை உதிர்க்க வேண்டாம். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கவும்.  

மாணவமணிகள் படிப்பில் கவனத்துடன் இருக்க வேண்டிய காலகட்டமிது. உங்கள் திறமையை வெளிக்கொணர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாவீர்கள். நண்பர்களை அரவணைத்துச் செல்லுங்கள். 

பரிகாரம் - பைரவர் வழிபாடு உகந்தது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com