
திருமலையில் வரும் 27-ஆம் தேதி அறங்காவலா் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலா் குழு மாதம் ஒரு முறை கூடுவது வழக்கம். கூட்டத்தின்போது பல முக்கிய திட்டங்களின் செயல்பாடுகள் தொடா்பாக விவாதிக்கப்படும். இம்மாதத்துக்கான அறங்காவலா் குழுக் கூட்டம் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
குழுவின் தலைவா் சுப்பா ரெட்டி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி, தா்மா ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகளுடன், குழுவின் தென்னிந்திய மற்றும் வட இந்திய உறுப்பினா்களும் கலந்து கொள்ள உள்ளனா்.