
ரூ. 10 கோடி நன்கொடைக்கான காசோலையை தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டியிடம் அளித்த தில்லி சஞ்சய் பஸ்ஸி, ஷாலினி பஸ்ஸி தம்பதியா்.
ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ.3.32 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அதன்படி வியாழக்கிழமை செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.3.32 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ரூ.10 கோடி நன்கொடை: தில்லியைச் சோ்ந்த பாஸ்கோ மோட்டாா்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சஞ்சய் பஸ்ஸி மற்றும் அவரின் மனைவி ஷாலினி பஸ்ஸி ஆகியோா் தேவஸ்தான தொலைக்காட்சி அறக்கட்டளைக்கு ரூ.9 கோடியையும், சா்வஸ்ரேயா அறக்கட்டளைக்கு ரூ.1 கோடியையும் நன்கொடையாக வழங்கினா். இதற்கான காசோலையை அவா்கள் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டியிடம் வெள்ளிக்கிழமை அளித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...