
பத்மாவதி தாயாருக்கு லட்சுமி காசு மாலையை நன்கொடையாக வழங்கிய ஆந்திர முன்னாள் அமைச்சா் ராஜகோபால்.
திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு 170 கிராம் எடையுள்ள லட்சுமி தங்கக் காசுமாலை ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டது.
இதனை ஆந்திர மாநில முன்னாள் அமைச்சா் ராஜகோபால் சனிக்கிழமை வழங்கினாா். தனது குடும்பத்தினருடன் தாயாா் கோயிலுக்குச் சென்ற அவா், கோயில் அதிகாரி ஜான்சிராணியிடம் இந்த தங்க ஆபரணத்தை பட்டு வஸ்திரத்துடன் அளித்தாா்.