
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ஞாயிற்றுக்கிழமை ரூ.1.83 கோடி வசூலானது.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.1.83 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.