தேவ குருவின் பழமொழிகளும் ஜோதிடமும்

நம் பாரம்பரிய ஜோதிட சாஸ்திரத்தில் அதிக பழமொழிகள் பேச்சு வாக்கில் நாம் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
தேவ குருவின் பழமொழிகளும் ஜோதிடமும்

நம் பாரம்பரிய ஜோதிட சாஸ்திரத்தில் அதிக பழமொழிகள் பேச்சு வாக்கில் நாம் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம். நாம் முதலில் குருவின் பழமொழியோடு  ஜோதிடம் எவ்வாறு நம்மோடு ஒத்துப்போகிறது என்று பார்ப்போம். 

ஒருவன் வாழ்க்கையில் நல்ல காரகத்துவங்கள் என்றால் குரு அங்கு வந்து விடுவார். அவரின் காரகத்துவ செயல்கள் குழந்தை பாக்கியம், சுப பொருள்கள், நல்ல ஆசான், மந்திர ஜபம், தங்கம், வங்கி சேமிப்பு அனைத்தும் குரு சம்பந்தப்படுவார். அனைவராலும் சுபர் என்று கூறப்படும் குரு சில நேரங்களில் நல்லவர் ஒருவித விஷயங்களில் கெட்டவராகச் செயல்படுபவர். ராஜ கிரகமான குருவிற்கு ஒரு சில பழமொழிகள் ஜோதிடத்தில் பல மறைமுக சூட்சுமங்களைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. அவற்றில் ஒரு சில பழமொழிகளைப் பார்ப்போம்.

குரு நின்ற இடம் பாழ்!

குரு பார்க்க கோடி நன்மை!

பத்தில் குரு பதவிக்கு இடர் !

ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு

குரு கொடுப்பின் சனி தடுப்பார்; 

சனி கொடுப்பின் எவர் தடுப்பார்?

குரு எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த பாவத்தின் கொடுப்பினையை சரிவர செய்ய இயலாது. ஏனென்றால் அந்த பாவத்தின் நல்ல கர்மாவை முடக்கி அதைத் தடுக்கும் வண்ணம் செயல்படும். குரு தனித்து இருந்தால் அந்த பாவத்திற்கு வேண்டியதை செயல்படுவார். அதனால் அந்த பாவத்தின் கொடுப்பினையை எந்த காலத்திலும் ஜாதகர் கட்டாயம் எதிர்பார்க்கக்கூடாது. ஆனால் குருவின் சேர்க்கையோ பார்வையோ அதிக பலத்தைக் கூட்டியோ குறைத்தோ கொடுப்பார்.  குருவுடன் சந்திரன், சனி, கேது சேரும்பொழுது யோகமானது நல்ல செயல்களாக வெளிப்படும். ஆனால் அங்கு கோட்சர பாவிகள் சேரும்பொழுது உடல் உபாதைகள், குழந்தை தடை, குடும்பத்தில் சுப நிகழ்ச்சியின்மை, தொழில் தடைகள், தீராத கடன்கள் என்று அந்த தசா புத்திக்கு ஏற்ப செயல்கள் மாற்றம் ஏற்படும். குரு மற்ற பாவிகளோடு சேர்க்கை பெற்று இருக்கும் போது குருவின் பாகை குறைவாக இருந்தால் நோயின் தாக்கம் ஏற்படும். அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப நோயின் தீவிரம் மாறுபடும். முக்கிய நோயின் தாக்கம் குருவோடு கோச்சாரத்தில் பாவிகளுடன் தொடர்பு பெரும்பொழுது அதிகமாக ஆற்றல் குருவிற்கு உண்டு.

குரு இருக்கும் இடத்தை விடப் பார்க்கும் பாவம் பலம்பெறும் என்பது உண்மையே. எடுத்துக்காட்டாக ஜாதகர்களுக்கு குரு லக்னத்தில் இருந்தால் திக்பலம் என்று கூறுவோம். குரு நின்ற இடம் பாழ்! என்பது இங்கே செல்லுபடி ஆகும். ஆனால் அவரால் மற்றவருக்கு பயனாக இருக்கும். அதாவது அவர் மற்றவருக்கு குருவாக இருப்பார். மற்றவர் பேசுவதை கேட்கும் ஆற்றல் அவர்களுக்கு குறைவு. அவருடைய உழைப்பு மற்றும் அவர் செயல் திறன்கள் அவருக்கே பயன்படுத்த முடியாது.

குரு பார்க்க கோடி நன்மை! என்ற பழமொழிக்கு ஏற்ப லக்னத்தில் உள்ள குரு 5,9 பாவங்களை பலப்படுத்துவார். இந்த பாவம் பலம் பெரும்பொழுது தன்னால் அனுபவிக்க முடியாத நிலை இருக்கும். ஆனால் மற்றவர்களுக்காக அதாவது மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்தல், குடும்பம் மற்றும் குழந்தைகள் நன்மைக்காக சொத்து சேர்ப்பது, வாகனம் வாங்குவது, சேமிப்பு, பெற்றோர் நலனில் அக்கறை, கர்ம வினைப்பயனைக் கழிக்க செலவு செய்தல், களத்திர முயற்சிக்கு உதவுதல், தான தர்மம் அல்லது பரிகார செயல்களைச் செய்து பூர்வ புண்ணியத்தை குருவானவர் திக் பலம் மூலம் வேலை செய்யும்.“பத்தில் ஒரு பாவியாவது  இருப்பது நன்று” என்று ஒருபுறம் இருக்க அதற்கு எதிர்மாறாக ஒரு சுபர் இருக்கக்கூடாது என்பதற்கு ஏற்ப “பத்தில் குரு பதவிக்கு இடர்”.

இதனால் என் பதவி போய்விடுமா என்று பயப்படகூடாது. பத்தில் குரு வந்தால் பதவி பறிபோகும் என்பது எதிர்மறை ஆற்றல். அவற்றை நாம் நேர்மறையாக செயல் படத்தை வேண்டும். கோட்சரமுறைப்படி குரு பத்தில் வரும்பொழுது தொழிலில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்(உஷார்). புதிய தொழில்களில் தலையில் போட்டுக்கொள்ள கூடாது என்பது சூட்சுமம். காலபுருஷ தத்துவப்படி, இன்றைய கோச்சார நிலவரப்படி குருவும் சனியும் 9,10ல் நேர்கதி அல்லது வக்ர கதியில் சென்று கொண்டு இருக்கிறது. 

இந்த ஓரிரு வருடங்களாக எவ்வளவு மக்கள் தங்களுடைய சொந்த தொழில் என்ன செய்வது என்று புரியாத வண்ணம் குழம்பிய நிலையில் உள்ளார்கள் என்பது தொழிலாளர் மற்றும் உரிமையாளருக்கு தான் தெரியும். ஆனால் அங்கு சனியும் சேரும்பொழுது தொழிலில் கஷ்டம், நஷ்டத்தில் மாற்றம் ஏற்பட்டு சீர் தூக்கும் என்பது உண்மை. இதற்கு முதலீடு கடின உழைப்பு, தேவையற்ற செலவு என்று  இருந்துகொண்டு இருக்கும். ஆனால் ஒரு சில வருடம் நாம் கடவுளை நம்பி காத்திருக்க வேண்டும்.

இதுவே குரு தனித்து இல்லாமல் ஒரு பாம்பு கிரகத்தோடு இருக்கும் போது ஜாதகருக்கு வேறுவித பலன் கொடுக்கும். “பத்தில் பாம்பு இருந்தால் பணம் பறந்து வரும்” என்ற பழமொழி இங்கே ஒத்துப்போகும்.

"ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு" என்ற பழமொழி ஜோதிடத்தோடு எப்படி ஒத்துப் போகிறது என்று பார்ப்போம். பாரம்பரிய ஜோதிடத்தில் 1,5,9 என்று கூறப்படும் திரிகோணம் பலம் பெற்றால் ஜாதகர் உயர்வார். திரிகோணத்தில் முக்கியமான, ஒரு சிறந்த பாவம் 9 ஆகும். ஒன்பது என்பது வெளிநாடு மற்றும் தந்தை குறிக்கும் பாவம். ஒன்பதாம் பாவத்தில் அமர்ந்த குருவானவர் அந்த பாவத்தை செவ்வனே படுத்தவிடாமல் நாஸ்தி செய்வார். அதற்கு என்ன செயல்படுத்த வேண்டும் என்று ஜோதிட சூட்சமம் சொல்கிறது. வெளிநாடு என்பது ஒன்பதாம் பாவம் அதற்கு ஏற்ப ஜாதகர் நம் நாட்டை விட்டு வெளிநாடு செல்வது என்பது நன்று. ஓடிப்போனவன் என்றால் தான் தாய் மண்ணை விட்டு மற்றும் தந்தை என்ற உறவை விட்டுச் செல்வது என்பது ஒரு சூட்சும விதி.

குரு கொடுப்பின் சனி தடுப்பார்; சனி கொடுப்பின் எவர் தடுப்பார்? வெளிவட்ட கிரகங்களான குரு, சனி இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல. குரு சுபக் கிரகம் என்றும் சனி பாவி என்றும் ஜோதிடத்தில் கூறப்படுகிறது. ஆராய்ச்சியின் விளக்கப்படி எல்லா கிரகங்களும் நல்லவர் கெட்டவர் என்று இரு முகங்கள் உண்டு. பாவி என்பவர் பாவியாக இருப்பது என்பது தவறு அல்ல, ஆனால் ஹீரோக்கள் வில்லனாக மாறுவது நாடு தாங்காது. 

அதாவது ஒரு  சுபர் பாவியாக  மாறும்பொழுது ஜாதகரால் பலம் அற்ற நிலையில் துன்பங்களின் சூழலில் மாட்டிக்கொண்டு இருப்பார்கள். எடுத்துக்காட்டாக இந்த இடத்தில் குரு சுபர் என்றாலும் லக்கினத்திற்கு பாவியாக மாறிவிட்டாலும் அவ்வளவுதான் பெரிய இழப்பு அல்லது ஆயுள் பங்கம் என்று பல்வேறு துன்பங்கள் ஏற்படும். அவரவர் தசா புத்தியில் கர்மாவிற்கு ஏற்ப வீரியம் அதிகமாக இருக்கும். ஜாதகருக்கு யோகராக செயல்படும் நேரம் குருவானவர் தன்னிலையில் யோகத்தைத் தரும் நேரம் அவரை செய்யவிடாமல் தடுக்கும் குணம் சனிக்கு உண்டு. 

அப்பொழுது குரு அவயோகராக மாறிவிடுவார். குருவும் சனியும் சேர்வது நன்று என்று ஒரு பக்கம் இருக்க. அவர்களின் தாக்கம் என்பது இருவருக்கும் வெவ்வேறு கோணங்களில் மாறுபடும். அதுவும் அவரவர் ஜாதகத்தில் உள்ள பாகை அமைப்புபடி மாறுபடும். அதேபோல் நிழல் கிரகங்கள் குருவோடு சேரும்பொழுது நிறைய தடைகளைச் சந்திப்பார். முக்கியமாக நோயின் தன்மையை அதிகப்படுத்தும் ஆற்றல் குருவின் சேர்க்கை பாகை முறை பொறுத்து மாறுபடும்.

அனைத்து எதிர்மறை சக்திகளை எதிர்கொள்பவர்கள் "நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை" என்று நினைத்து நம் நற்செயல்களை கடவுளிடம் காலடியில் சமர்ப்பணம் செய்வது, நம்முடைய நேர்மறை ஆற்றலை எதிர்கொள்வோம்.

குருவே சரணம் 

- ஜோதிட சிரோன்மணி தேவி,  

Whatsapp message: 8939115647
Email : vaideeshwra2013@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com