நடுநிலை இல்லா வாழ்க்கை தருபவர்கள் - சுக்கிரனுடன் சேரும் ராகுவா?

ஒருவரின் இல்லற வாழ்க்கையில் அதிக சுகபோகங்களை தந்துவிட கூடிய முக்கிய கிரக அமைப்பு சுக்ரன் - ராகு ஆகும். 
நடுநிலை இல்லா வாழ்க்கை தருபவர்கள் - சுக்கிரனுடன் சேரும் ராகுவா?
Published on
Updated on
5 min read

ஒருவரின் இல்லற வாழ்க்கையில் அதிக சுகபோகங்களை தந்துவிட கூடிய முக்கிய கிரக அமைப்பு சுக்ரன் - ராகு ஆகும். 

முக்கியமாக அவர் சுபத்துவமான தொடர்பு நிலையில் இருக்க வேண்டும். இங்கே ஒரு சூட்சமமாக நாம் புரிந்துகொள்ள வேண்டியது "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்ற பழமொழி ஏற்ப நடந்துகொள்ள வேண்டும்.

ஒரு சிலருக்கும் இதே கிரக சேர்க்கை அசுப நிலையில் இருக்கும்போது மாறுபட்டுச் செயல்படும். இந்த அமைப்பு உள்ளவர்கள் வாழ்க்கை நிலை சீராக இல்லாமல்,  வெவ்வேறு ரூபத்தில் நோயின் தாக்கம், கடனின் உச்சநிலை, திருமணம் ஆகியும் சன்னியாச நிலை, நிரந்தர வேலை இல்லாமை என்று அசுப நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இவர்களுக்கு பல்வேறு சிக்கலுடன் தீர்வு சொல்ல முடியாத நிலை இருக்கும். இதனால் நம் வாழ்க்கை எப்போதுதான் விடியும் என்ற ஒரு தவிப்பு இருந்துகொண்டே இருக்கும்.

முதலில் ராகு என்பவர் மாய உலகை உணர்த்தும் தன்மை கொண்டவர். அவர் தனித்து இருக்கும்பொழுது அந்த பாவத்தின் அதிபதி வேலையை ஓரே சீராகச் சரியாகச் செயல்படுத்துவார். ராகு எங்கே இருந்தால் நன்மை என்ற  ஒரு கேள்வி இருக்கும். அசுப ராகு எங்கு இருந்தாலும் பிரச்னையே. அதுவே  3,6,10,11ல் மற்றும் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் இருக்கும்பொழுது தோஷத்தை குறைத்து பலனைச் செயல்படுத்துவார். ராகுவுடன் சேரும் கிரகத்தின் தன்மையை அதிகம் எடுத்து அவரைபோல பன்மடங்காகச் செயல்படுத்துவார். அதாவது சுப மற்றும் அசுப நிலையை வெளிப்படுத்துவார்கள். ராகு ஒரு பிரம்மாண்டம், புதிய கண்டுபிடிப்பு (new innovation), பல்வேறு நாட்டுத் தொடர்பு, சொத்துகள் சேர்க்கை (digital currency, bond). என ஒன்றை ரெட்டிப்பாக்கும் (multi person) தன்மை கொண்டுவர. இந்த ராகுவுடன் சேரும் ஆடம்பர சுகவாச கிரகமான சுக்கிரன் இருந்தால் அவரவர் வாழ்க்கையில் இரட்டிப்பு ஆக்கி அவர் பிடியில் வைத்துக் கொள்ளவார். அதனால் நன்மையும் தீமையும் எதாவது ஒன்று கட்டாயம் உண்டு.

ஜாதகருக்கு முக்கிய சுகபோக, ஆடம்பர வாழ்க்கைக்கு ஆயிரம் பாவ சக்கரம், கிரக சேர்க்கை இருந்தாலும்; சுக்கிரன் ராகு சேர்க்கை முக்கியமான ஒன்று என்று ஆராய்ச்சியில் புலப்படுகிறது.   முக்கியமாக இவர் 3,6,8,12 உச்சம் பெற்ற சுக்கிரனுடன் ராகு சேரும்போது பாதிப்பு அதிகம் இருக்கும். இந்த ராகுவுடன் சுக்கிரன் என்பது பாகை அடிப்படையில் மாறுபட்டு இருக்கும்.  இவர்களின் சேர்க்கை என்ன என்ன சுப அசுப பொது பலன்கள்  என்று பார்ப்போம்.

1. சுக்கிரன் சுபர் அவரோடு ராகு சேரும்பொழுது அவர் ஜாதகத்தில் நன்றாக அமைந்தால் பல்வேறு அழகிய வீடு,  வண்டி வாகனம், ஆடம்பரம், தேவைக்கு மேல் உன்ன உணவு, கவரும் பேச்சுத் திறன், சொகுசு வாழ்க்கைக்கு அழைத்துச் செல்வார். அதோடு ஆண் பெண் வாழ்க்கை தேவையான சந்தோஷத்தைக் கொடுப்பார். ஆனால் எதிரியை நிலைநிறுத்தி அவரைவிட மேலே செல்லவிடாமல் மனதைக் கட்டுக்குள் நிறுத்த வேண்டும். இவர்கள் சுகமாக இருக்கலாம், ஆனால் அடுத்தவரின் சுகத்தைப் பறிக்கக் கூடியவர்களாக மாறாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

2. ஜாதகருக்கு சுக்கிரன் ராகு தொடர்பு இருப்பவர்கள் மேலே மேலே உயரத்துக்குச் செல்வார்கள், ஒருசிலர் அடிமட்டத்தில் கீழேயும் தள்ளப்படுவார்கள். இந்த ஜாதக அமைப்பு இருப்பவர்கள் ஒன்றுக்கு இருமுறை யோசித்துச் செயல்பட வேண்டும்.

3. ஜாதகர்கள் அழகு சார்ந்த விஷயங்களிலும், தன்னை செயற்கை முறையில் அழகுபடுத்திக்கொள்ளவும் ஆசைப்படுபவர்கள். எதிரில் இருக்கும் நபரிடம் தன்னை உயர்த்திக்கொள்ளும் எண்ணம் இருக்கும். முக்கியமாக எதிர் பாலினத்தின் மீது ஈர்ப்பு இருக்கும். அதுவே அவருக்கு தலைவலியாக மாறிவிடும்.

4. காலபுருஷ தத்துவப்படி சுக்கிரனின் வீடு இரண்டுக்கும் ஏழுக்கும் உரியவர். ஒரு மனிதனுக்கு சுகத்தையும், போகத்தை ஆடம்பரத்தை அதிகமாக ஆசைப்பட வைப்பவர் சுக்கிரனும்;   ரெட்டிப்பான சுகத்தையும் அதற்கு ஏற்ப துக்கத்தையும் கொடுப்பார், அதுபோல ஒரு மனிதனுக்கு சுகத்தையும், போகத்தை ஆடம்பரத்தை அதிகமாக ஆசைப்பட வைப்பவர் சுக்கிரனும் ராகுவும். ரெட்டிப்பான சுகத்தையும் அதற்கு ஏற்ப துக்கத்தையும் கொடுக்கும் இந்த சேர்க்கை. சுக்கிரனுடன் ராகு சேரும்போது தன்னுடைய இல்லற வாழ்க்கை நெரியில் அசுப தன்மையும் தர வழிகாட்டவும் செய்வார்கள், அதுவும் 2,7,11 பாவ தொடர்பில் இருக்கும்போது நடைபெறும். இருதாரம் அமைப்பும் நிகழ வாய்ப்புகள் அதிகம். அதனால் ஒருவர் காம இச்சைகளுக்கு அடிமையாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சிறு குன்றின்மேல் விழுந்தாலும் அல்லது பெரிய மலையிலிருந்து விழுந்தாலும், அவரவருக்குக் காயங்கள் மாறுபடும்.

5. புதிய கண்டுபிடிப்பு (new innovation): ஒரு பொருளைப் பயனுள்ளதாக மற்றும் தன்மை சுக்கிரனிடம் உள்ளது. குரு என்ற தங்கத்தை உருக்கி புதிய நகையாக மாறும்போது அங்கு சுக்கிரனின் காரகன் செயல்படும். அதேபோல் ஒரு மாணவன் புதியன செயல்படுதல் மற்றும் புது வரவு, புதிய ஆராய்ச்சிக்கு ஊக்கியாக ராகுவின் துணை அவசியம் தேவை. மறைக்கப்பட்ட விஷயங்களை ஆராய்ச்சியின் மூலம் வெளியே கொண்டுவரும் திறன் ராகுவுடன் சேரும் சுக்கிரன் செய்வார். 

6. புதியன புகுதல்: ஒரு ஜாதகன் தன் தொழிலில் பன்மடங்கு பெறுக பன்னாட்டு முறையில் செயல்பட மற்றும் புதிய யுக்தியுடன் செயல்படுத்துபவனாக மற்றும் வழிகாட்டு துணையாக இருப்பவர்கள் ராகுவும் சுக்கிரனும் ஆவார். புதிய விஷயம் அதாவது சனி பார்வை இருந்தால் தொழில் சார்ந்த விஷயம் கற்பீர், அவற்றை பல்வேறு தொழிலாக மாற்றுவார்கள். பத்தில் ஒரு பாவியான ராகு இருப்பது நன்று என்று ஜோதிடத்தில் ஒரு கூற்று. தொழிலைச் சரிவரச் செயல்படுத்தாத நிலையில் இருந்தாலும், ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் 10-ல் இருக்கும் ராகு மற்றும் அதன் தொடர்பு கொண்ட சுக்கிரன் ஒருவரை ஊக்குவித்து, வழித்துணை நபரையும் தன்முன் காட்டுவார்.

7. ஒருவரை சினிமா துறையில் உள்ளே செல்ல வைப்பதும் சுக்கிரன் முக்கிய பங்கு. அவனை அளவிடமுடியாத பிரம்மாண்ட  அளவுக்கு தன்னை புகழ்ச்சியில் ஆழ்த்துவது அவரோடு சேர்ந்த ராகு ஆவார். அதுவும் அந்த ஜாதகருக்கு பிராரப்தத்தின் அடிப்படையில் - சுக்கிரன் மற்றும் ராகுவின் தசை நன்றாக இருந்தால் உலகையே திரும்பிப்பார்க்க வைப்பார். முக்கியமாகப் பேச்சுத்திறன், சமயோசித புத்தி, எதிர்பாராத தனவரவு, லட்சுமி கடாட்சம், உழைப்புக்கு அப்பாற்பட்ட செல்வங்கள் கிடைக்கும் இந்த துறையில் கிட்டும்.

8. இந்த சேர்க்கை உள்ளவர்கள் பணத்தை முதலீடு பார்த்துச் செயல்படுத்தவேண்டும். அதிலும் மாய அளவின்  தோற்றம் கொண்ட சொத்துகள் அதாவது டிஜிட்டல் முறையான பரிவர்த்தனை மீது மோகம் இருக்கும். இதற்கு புதன் உதவியும் தேவை.  முக்கியமாக  கிரிப்டோ கரன்சி வகைகள் (eg. bitcoin), முதலீட்டுப் பத்திரங்கள் (வங்கி, நிறுவனம், தங்கப்பத்திரம்), NFT( Non Fungible Token), பங்குச் சந்தை என்று நம்மை அடிமைப்படுத்தும். அதுவும் கெட்ட தசை புத்தி இருந்தால் தாங்கமுடியாத இழப்பிற்குத் தள்ளப்படும். முதலீடு செய்யும் முன் கவனம் தேவை.

9. பிணியின் உச்சம்: நோயின் தாக்கம் என்பது அவரவர் உடலில் குறை இருந்தாலும், அதன் தாக்கம் அவர்களாலே ஏற்படும். சுக்கிரன் நீர் தத்துவம் கொண்டதால் உடலில் உள்ள நீர் தங்கும் பாகங்கள் மற்றும் நீர் போன்ற அமைப்புகளால் பிரச்னை ஏற்படும்.  சிறுநீரக தொந்தரவு, சர்க்கரை நோய், கண்ணில் பிரச்னை முக்கியமாக இடது கண், கண்ணில்  பூ விழுதல், தலை காலில் நீர் கோத்தல், கபம், ஒவ்வாமை, கருப்பை தொந்தரவு, தோலின் நிற மாற்றம், வெண் குஷ்டம், பூஞ்சை தொந்தரவு, விந்து குறைபாடு, பிறப்புறுப்புகளில் பிரச்னை, உடலில் வெடிப்பு என்று பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துபவர் - சுக்ரனுடன் சேரும்  ராகு ஆகும். 

இந்த சேர்க்கையுடன் நெருப்பு கிரகத்தின் தொடர்பு பெற்றால் விந்து குறைபாடு, நரம்பு தளர்வு ஏற்படுத்தும். அதுவே கடைசியில் நீண்ட மருத்துவ முறை அல்லது அறுவை சிகிச்சைக்கு  அழைத்துச் செல்லவும் வைக்கும். உச்ச சுக்ரன் உடன் ராகு   அல்லது நீச்ச சுக்கிரனோடு ராகு சேரும்போது பாவத்திற்கு ஏற்ப உடலில் உள்ள பாகங்கள் பாதிப்பு இருந்தே ஆகும்.

10. பாவத்தின் பங்கு முக்கியம் என்பதை ஒரு உதாரண ஜாதகம் மூலம் விளக்குகிறேன்.  ஜாதகர் ஒருவர் அளவுக்கு மேல் கடன், ஆடம்பர செலவாளியாக, கட்டுப்பாடு அற்ற உணவுப் பழக்கம். மேலே சொன்ன கூறுகளால் நோய்களும் வெவ்வேறு ரூபத்தில் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. அவர் பிறந்தது 27 மே 1969.  இவருக்கு துலா லக்கினம் உச்ச சுக்கிரனோடு ராகு 6ல், உடலைக் குறிக்கும் சந்திரன் கேது 12ம் வீடான கன்னியில் அமர்ந்து செயல்படும். இவருக்கு பாதகாதிபதி சூரியன் 8ல் அவருடன் நட்பான புதன் அஷ்டமத்தில். இவருடைய ரோகாதபதி அஷ்டமாதிபதி உள்ள சாரதிபதி புத்தி கோசாரம் 6,8,12 தொடர்பு கொள்ளும் நேரம் நோயின் தாக்கம் அதிகம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை அல்லது ஆயுளைத் தொட்டுவரும் தருணமாக இருக்கும். இவருக்கு 4க்கு மேல் அறுவைசிகிச்சை, சக்கரை நோயின் உச்சம், மூளை சிதைவு, எலும்பு பிரச்சனை என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவருக்கு உதவும் கிரகங்களும் நீச்சமாக, அஸ்தங்கமாக இருப்பது இவருடைய விதி. இவரின் தொழிலில் அதிக முதலீடு, வீடு தேடி வந்த கடன், சுற்றி உள்ளவர்களால் ஏமாற்றம், தொழிலாளி தொந்தரவு என மனஅழுத்த நிலைக்குத் தள்ளப்பட்டார். இவர் பிரச்னைக்கு இவரே காரணம். இவர் எதிரில் இருப்பவரை நம்பியது, தொழிலில் அகலக் கால் வைத்தது இவருக்கு மனம் உடல் பாதிப்பு அதிகம் அதனால் நோயின் தாக்கமும் அதிகம்.

11. அனைத்து செயல்களும் இருவரின் தசை புத்தி, கோசார ராகு தொடர்பு இருக்கும்பொழுது நடைபெறும். புலிப்பாணி தன் பாடலில் ராகு திசையில் சுக்கிர புத்தி காலத்தில் சாதகனுக்குப் பெண்களால் இன்பம் விளையும். பூமி லாபம் ஏற்படுதலும் நிறைவான பொருள் சேர்க்கையும் புகழ்மிக்க அரசர்களால் சுப சந்தோஷங்களும் ஏற்படும். எனினும் நோய் பீடிப்பதும் அதன் காரணமாக காரியக்கேடு ஏற்படுதலும், அரசனால் கலகம் விளையும் என்று தன் பாடலில் அழகாகக் கூறியுள்ளார்.

12. இந்த அமைப்பு உள்ளவர்கள் யோசித்துச் செயல்படவேண்டும், பேராசை பெரு நஷ்டம்  என்ற தாரக மந்திரத்தை மனதில் பதித்து வைத்துச் செயல்பட வேண்டும். இந்த சேர்க்கை உள்ளவர்கள் உடல் இயங்க எல்லாவித சத்துக்களும் சரியான விகிதசார அடிப்படையில் இருக்க வேண்டும்.  எந்த புரத பொருளும் அதிகமாகவோ குறைவாகவோ  இருக்கக் கூடாது.  இந்த அமைப்பு உள்ளவர்கள் முக்கியமாக எதிர் இனத்தின் மீது காதல்,  மற்றும் மோகம்  அதிகம் ஏற்படுத்தும். சிலநேரம் அவரவர் துன்பத்திற்கு அவரே காரணமாக மாறுவார். 

மேலே குறிப்பிட்ட அனைத்தும் பொதுப்பலனே. சுப அசுப கிரக பார்வை பெறும்போது இந்த பலன் விகிதசாரம் மாறுபடும்.

ராகு கேது பிடியில் உள்ள கிரகங்கள் மாய வட்டத்துப் பிடியில் இருப்பார்கள். ஜாதகரின் வாழ்க்கையின் தத்துவத்தை மற்றும் பிரிவை உணரவைக்கும். இந்த கிரக சேர்க்கையுடன் சனி குரு தொடர்பு பெற்றால் ஒருவன் எல்லா சுகத்தையும் அடைந்து பின்பு சன்னியாச நிலை அடைவார். மகா பெரியவா ஜாதகத்தில் மாறுபட்டு இந்த சேர்க்கை இருக்கும். சிம்ம லக்கினம், 8ல் சுக்கிரன் ராகு, அங்கு சுக்கிரன் குரு பரிவர்த்தனை, குரு சனி கேது பார்வை, குரு அதிக சுபத்துவம் பெற்று சுக்கிரன் நிலை செயல்படாமல் இருக்கும். அதனால் தான் மகாப்பெரியவர் நாக்குக்குச் சுவை கொடுக்காமல், எதற்கும் ஆசைப்படாத நிலையில், இல்லற நிலைக்கு செல்லாமல் மற்றவருக்கு உதவும் குருவாக நம்மில் நிலைத்து உள்ளார்.

Whatsapp: 8939115647
Email : vaideeshwra2013@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com