திருத்தணி முருகன் கோயிலில் திருப்படி திருவிழா தொடக்கம்!

திருத்தணி முருகன் கோயிலில் திருப்புகழ் திருப்படி திருவிழா இன்று தொடங்கியுள்ளது. 
திருத்தணி முருகன் கோயிலில் திருப்படி திருவிழா தொடக்கம்!

திருத்தணி முருகன் கோயிலில் திருப்புகழ் திருப்படி திருவிழா இன்று தொடங்கியுள்ளது. 

அறுபடை வீடுகளில் ஒன்றான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தமிழகம் மட்டும் இல்லாமல் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கா்நாடாக, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனா். இக்கோயிலில் முக்கிய விழாவாக ஓா் ஆண்டைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ள 365 திருப்படிகளுக்கு மலா்கள் வைத்து, கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து பக்தா்கள் பூஜைகள் செய்து முருகப் பெருமானை வழிபடும் விழா திருப்புகழ் திருப்படி திருவிழாவாகும்.

நிகழாண்டிற்கான திருவிழா  இன்று(டிச.31)ஆம் தேதி காலை 8 மணிக்கு சரவணப் பொய்கையில் தொடங்கியது. காலை 11 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி மலைக்கோயில் மாடவீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனர். மாலை 4 மணி முதல் ஜனவரி 1-ஆ ம் தேதி இரவு 9 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும். இந்த நேரத்தில் பக்தா்கள் தொடர்ந்து கோயிலுக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்யலாம் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. 

விழாவிற்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் உதவி ஆணையா் விஜயா மற்றும் கோயில் அலுவலா்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com