மகமாயி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மார்ச் 13 முதல் பூச்சொரிதல் விழா

சென்னை, புழலில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மகமாயி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வரும் 13-ஆம் தேதி முதல் ஏப்ரல் 10 வரை நடைபெறுகிறது. 
மகமாயி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மார்ச் 13 முதல் பூச்சொரிதல் விழா

சென்னை, புழலில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மகமாயி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வரும் 13-ஆம் தேதி முதல் ஏப்ரல் 10 வரை நடைபெறுகிறது. 

கிழக்கு காவாங்கரையில் உள்ள ஸ்ரீ மகமாயி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் 13-ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. இந்த விழாவானது மார்ச் 13-ம் தேதி முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை தினமும் காலை 10.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அம்மனுக்குப் பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெற உள்ளது. ஆகையால் பக்தகோடிகள் தங்கள் இல்லத்தில் இருந்து புஷ்பங்கள் கொண்டு வந்து மூலவருக்கு தாங்களே சமர்ப்பிக்கலாம். 

பூச்சொரிதல் விழா நடைபெறும் காலங்களில் அம்மன் பக்தர்களுக்காக விரதம் இருப்பதால் உப்பில்லா பிரசாதங்கள் மட்டும் நிவேதனத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும், அதாவது இளநீர், கரும்பு, பானகம், நீர் மோர், வெள்ளரிப்பிஞ்சு, பனை வெல்லப் பானகம், துள்ளு மாவு ஆகியவை நிவேதனமாக வழங்கலாம். 

இதைத்தொடர்ந்து சித்திரைத் திருவிழா ஏப்ரல் 17, 18, 19, 20 ஆகிய தேதிகளில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com