பங்குச் சந்தை யாருக்கெல்லாம் கைக்கொடுக்கும்?

ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில், பின்வரும் அத்தனை காரணிகளையும் கண்டுதான் பங்குச் சந்தையில் லாபம் காண்பது பற்றி அறிய முடியும்.
பங்குச் சந்தை யாருக்கெல்லாம் கைக்கொடுக்கும்?

ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில், பின்வரும் அத்தனை காரணிகளையும் கண்டுதான் பங்குச் சந்தையில் லாபம் காண்பது பற்றி அறிய முடியும்.

லக்கினம் ஜாதகரின் ஆளுமை தன்மை
இரண்டாம் வீடு / அதிபதி  செல்வம் சேரும் இடம்/ வீடு.
5 ஆம் வீடு / அதிபதிஅந்நிய செலவாணி / லாட்டரி / பங்கு வர்த்தகம் / ஊகம் அடிப்படையில் லாபம் ஈட்டல் / பங்குச்சந்தை.
8 ஆம் வீடு / அதிபதி திடீர் லாபம் / பணவரவு.
9 ஆம் வீடு/ அதிபதிஅதிர்ஷ்டம் / பாக்கியம்  வீடு.
10 ஆம் வீடு / அதிபதி வேலை / தொழில்
11 ஆம் வீடு / அதிபதிவருமானம் தரும் / லாபம் தரும் வீடு. 
3 / 6 / 12 வீடுகள் அதன் அதிபதிகள் நஷ்டம் தரும் வீடுகள்.
குரு     செல்வதை அருளுபவர் , ஜோதிடத்தில் தன காரகர்.
சந்திரன் 
 மனதை ஆளுபவர் ,   ஜோதிடத்தில் மனோகாரர்கள்.
புதன் உணர்ச்சிகளையும் ஆன்மாவையும் கட்டுப்படுத்துபவர், ஜோதிடத்தில் புத்திமான்.
ராகு   திடீர் நிகழ்வு நடத்துபவர்.

பங்கு சந்தையில், வெற்றி தரும் சில கிரக சேர்க்கைகள் / கிரக இணைவுகள் : -

2,5,11ஆம் அதிபதிகள் இணைவுகள் அல்லது சேர்க்கைகள் அல்லது தொடர்புகள் இருப்பின், அந்த ஜாதகர் நிச்சயம் பங்குச் சந்தையில் மிளிருவார் என்பதால் சந்தேகம் வேண்டாம்.

2,4,9,11ஆம் வீடுகள் மற்றும் அதிபதிகள், நல்ல இடத்திலிருந்தும், பாவிகளின் (இயற்கை பாவிகளான சூரியன்/ செவ்வாய் / சனி / தேய்பிறை சந்திரன் / ராகு / கேது மற்றும் லக்கின பாவிகள் பாதகாதிபதி/ மாரகாதிபதி / அஷ்டமாதிபதி) தொடர்பு இல்லாமல் இருந்தால், நிச்சயம் பங்குச் சந்தையின் வெற்றியாளர்கள் எனலாம்.

இதுபோல் பல கிரக இணைவுகள் தொடர்புகள் சொல்லிக்கொண்டே போகலாம்.

பங்குச் சந்தையில், எச்சரிக்கை தரும் / நஷ்டத்தைத் தரும் கிரக இணைவுகள்/ தொடர்புகள் 

சந்திரன் அதிகமாகப் பாதிக்கப்பட்ட ஜாதகர்கள், அவர்களின் மனம் நிலையற்ற சூழலை எதிர்கொள்வதால், அப்படிப்பட்ட ஜாதகர்கள் இந்த பங்குச் சந்தையைத் தவிர்க்கலாம். 

8ஆம் அதிபதி, ஒருவரின் ஜனன ஜாதகத்தில் 4/5/9/10ஆம் இடங்களில் இருப்பின், பங்குச் சந்தையில் தோல்வியைத் தழுவுவர்.

ஒருவரின் ஜனன ஜாதகத்தில், சூரியன் ராகு இணைவு, 1/5/9 ஆம் வீடுகளில் இருந்தால், நிச்சயம் பங்கு சந்தையில் பேரிழப்பை சந்திப்பார்கள்.

5,9,11ஆம் அதிபதிகள் ஒருவரின் ஜனன ஜாதகத்தில் 12 ஆம் இடத்தில் இருந்தால், அவர்களுக்கு நிச்சயம் பங்குச் சந்தையில் இழப்பைச் சந்திப்பர்.

6 மற்றும் 11ஆம் அதிபதிகள் வக்கிரமடைந்து 12ல் இருந்தால், பங்குச் சந்தையில் நஷ்டம் ஏற்படுத்தும்.

ஒருவரின் ஜனன ஜாதகத்தில், கேந்திர ஸ்தானங்களில் (1,4 7 10) காலியாக எந்த கிரகமும் இல்லாமல் இருந்து, சந்திரன் 6/8/12ல் இருந்தால், ஜாதகர் பங்குச்சந்தையில் அதிக நஷ்டத்தைப் பெறுவார்.

பங்குச் சந்தையில் வெற்றி பெறும் தசைகள்

1. 8ஆம் அதிபதியின் மகா தசையில் ஒரு ஜாதகருக்கு, பங்குச் சந்தை வெற்றியையும், லாபத்தையும் தரும்.

2. 5,9,11ஆம் அதிபதிகளின் மகா தசையில் ஒரு ஜாதகர் பங்குச் சந்தை வர்த்தகம் மூலம் நல்ல லாபத்தை அடைவார்.

3. குரு மற்றும் ராகுவின் கோச்சாரம் பாக்கிய மற்றும் லாப ஸ்தனங்களின் மேல் செல்லும் போது பங்குச் சந்தை லாபத்தைத் தரும்.

பங்குச் சந்தையில் நஷ்டத்தைத் தரும் தசைகள் 

1. பாதகாதிபதியின் தசைகள் (சர லக்கினத்திற்கு, 11 ஆம் அதிபதி. ஸ்திர லக்கணத்திற்கு 9 ஆம் அதிபதி தசை, உபய லக்கினத்திற்கு, 7 ஆம் அதிபதியின் தசை)

2. எல்லா லக்கணத்திற்கும், அஷ்டமாதிபதியுடன் தொடர்புகொண்ட பாதகாதிபதியின் தசை. 

இன்னும் நிறைய விதிகள் உள்ளது, அவற்றை ஜோதிடரிடம் கேட்டு அறிந்துகொள்ளவும். ஓரளவு மட்டுமே இந்த கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. 

தொடர்புக்கு : 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com