எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி டிசம்பர் 20-ஆம் தேதி (புதன்கிழமை) மாலை 5.23க்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் சனி பகவான்.
எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி டிசம்பர் 20-ஆம் தேதி (புதன்கிழமை) மாலை 5.23க்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் சனி பகவான்.

மேஷம்  - லாப சனி - அதிக முயற்சிக்குப் பிறகு லாபம் அதிகரிக்கும். 

ரிஷபம் - தொழில் சனி - தொழிலில் சிறிது சிறிதாக முன்னேற்றம்.

மிதுனம் - பாக்கிய சனி - தந்தை, தந்தை வழி உறவினர்களுடன் கருத்து மோதல் - பணப் பிரச்னை. 

கடகம் - அஷ்டம சனி - அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை.

சிம்மம் - கண்டக சனி - வாகனங்களில் செல்லும் போது கவனம், வாழ்க்கைத் துணையுடன் தேவையற்ற மன சஞ்சலம்.

கன்னி - ரண ருண சனி - உடல்நலத்தில் கவனம் தேவை.

துலாம் - பஞ்சம சனி - குழந்தைகளுடன் தேவையில்லாத வாக்குவாதம்.

விருச்சிகம் - அர்த்தாஷ்டம சனி  - வீடு மனை வாகனம் ஆகியவற்றை வாங்குவதற்கு தடை.

தனுசு - தைரிய வீர்ய சனி - தைரிய அதிகரிக்கும், மதியூகம் வெளிப்படும்.

மகரம் - வாக்குச் சனி - வாக்கு கொடுக்கும் போது அதிக கவனம் தேவை.

கும்பம் - ஜென்ம சனி - அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை.

மீனம் - விரைய சனி   - வீண் விரையம் ஏற்படுதல்.

சனி ஸ்லோகம்

நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸனைச்சரம்!

அர்த்தம்

கண்ணின் மை போன்று கருமை நிறம் கொண்டவனே! சூரியனின் மைந்தனே! எமதர்மனின் சகோதரனே! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே! மெதுவாகச் சஞ்சாரம் செய்பவனே! சனிபகவானே! உன்னைப் போற்றுகிறேன்.

பொதுவான பரிகாரங்கள்

  • தினமும் வினாயகர் - ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது சிறந்த பலனைத் தரும்.
  • தினமும் வினாயகர் அகவல் - ஹனுமான சாலீசா - சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது நல்ல பலன்களைப் பெற்று தரும்.
  • அடிக்கடி மஹாகணபதி ஹோமம் அல்லது பஞ்சமுக ஆஞ்சநேயர் ஹோமம் செய்வதும் நிறைவான மாற்றத்தைக் கொடுக்கும்.
  • தினமும் முன்னோர்கள் வழிபாட்டைச் செய்வது - குறைந்தபட்சம் அமாவாசை தினத்தன்றாவது முன்னோர்களை வழிபடுவது பலம் சேர்க்கும்.
  • தினமும் காகத்திற்கு சாதம் வைப்பது மிகச் சிறந்த பரிகாரமாகும்.

பொது பலன்கள்

சனி ஆட்சியாக மாறுவதால் சுப நிகழ்ச்சிகளில் தடை அகலும். திருமணம் சம்பந்தப்பட விஷயங்களில் தொய்வு ஏற்படும். ஆனால் பொருளாதார நிலைமை சீரடையும். அதிக அளவில் விரையங்கள் ஏற்பட்டாலும் மீண்டும் பொருளாதார நிலைமை எழுச்சியடையும். அரசாங்கம் புதுப்புது வரிகளை விதிக்கும். அதேபோன்று தனிநபர் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார நிலைமை கொஞ்ச கொஞ்சமாக உயரும்.  அவரவர் தகுதிக்கேற்ற மாதிரி கடன் உருவாகும்.

இடி மின்னல் அதிகம். இயற்கையின் சீற்றத்தால் சேதங்கள் அதிகரிக்கும். தனியார் உடைமைகளுக்கும் சேதம் ஏற்படலாம். அதற்கு நிதியுதவி செய்யும் வகையில் பெருமளவில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் செலவுகள் ஏற்படலாம். உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் மூலம் மத்திய அரசு அதிகளவில் கடன்கள் வாங்குவது அதிகரிக்கும்.

புராதன ஆலயங்கள் மற்றும் கட்டிடங்களில் சேதமும் நஷ்டமும் உண்டாகும். அதே வேலையில் புராதன ஆலயங்களுக்கு அரசாங்கம் கும்பாபிஷேகம் செய்து வைத்தலும் நடைபெறும். மடாதிபதிகள் மற்றும் சந்நியாசிகளுக்கு புதிய விதிமுறைகளை அரசாங்கம் உருவாக்கும். பல முக்கிய வழக்குகளுக்கு இந்த ஆண்டு எதிர்பார்த்த தீர்ப்பு நல்ல முறையில் வரும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com