காதலில் வெற்றியடைய இதெல்லாம் செய்யலாம்!

காதலில் வெற்றியடை ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற்றிருப்பது அவசியம். 
காதலில் வெற்றியடைய இதெல்லாம் செய்யலாம்!
Published on
Updated on
1 min read

காதலில் வெற்றியடை ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற்றிருப்பது அவசியம். 

காதல் ஒரு இனம்புரியாத இன்ப மயமான உணர்வு. அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் இனிமை. தமிழ் கடவுள் முருகனே காதல் திருமணம் செய்தவர் தானே. தெய்வங்களையும் விட்டுவைக்கவில்லை இந்த காதல். காதலின் அடுத்த கட்ட நகர்வு தான் திருமணம். ஆண் பெண் இருவருடைய ஜாதகத்திலும் லக்னாதிபதி, ஐந்தாம் அதிபதி, ஏழாம் அதிபதி, சந்திரன், சுக்கிரன் நன்றாக வலுப்பெற்று சுபர் பார்வையில் இருக்க, காதல் வெற்றி பெறும். பொதுவாக பருவ வயதில் வரும் ராகு தசையும், சுக்கிர தசையும் இயற்கையிலேயே காதல் எண்ணங்களைத் தோற்றுவிக்கும்.

சுக்கிரன் ஒருவருக்கு வலுவாக இருந்தால் இயற்கையிலேயே காதல் எண்ணம் மேலோங்கும். காதல் மன்னகளாவே அவர்கள் காணப்படுவார். அதேநேரத்தில் சுக்கிரன்  வலுவாக இருந்தால் மட்டுமே காதல் ஜெயித்துவிடாது. மன உறுதியைக் குறிக்கும் சந்திரனும் வலுவாக இருக்க வேண்டும். எந்த ஒரு பலனும் லக்கினத்தை அடிப்படையாக வைத்தே என்பதால் லக்னம், லக்னாதிபதி வலுப்பெற வேண்டும்.

சுக்கிரனுக்குரிய பரிகாரம் செய்வதன் மூலம் நமக்குக் கிடைக்க வேண்டிய யோகங்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.

காதலில் வெற்றியடைய செய்யவேண்டியவை...

• வெள்ளிக்கிழமை விரதம் இருந்து அம்பாள் கோயிலில் நெய் விளக்கேற்றி வழிபடலாம்.

• பௌர்ணமி அன்று அம்பாளுக்கு விரதமிருந்து மொச்சை சுண்டல் நிவேதனம் செய்து பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கலாம்.

• ஸ்ரீ ரங்கம் ரங்கநாதரைத் தரிசிக்கலாம்.

• கஞ்சனூரில் உள்ள சுக்கிர தலத்திற்குச் சென்று வழிபடுவதால் திருமணத் தடை நீங்கும். பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேருவர்.

• சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் உள்ள வெள்ளீச்சரம் கோயில் சுக்கிரனுக்கு உரியத் தலம். இங்குள்ள சுக்ரேஸ்வரரை வழிபடுவதால் கண் தொடர்பான கோளாறுகள் நிவர்த்தியாவதோடு, காதலும் நிறைவேறும். 

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் பொதுவான பரிகாரங்களே தவிர, அவரவர் ஜாதகத்தின்படி மாற்றங்கள் ஏற்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com