ரிஷபம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் 2023

இந்த சனிப்பெயர்ச்சியில் பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கங்கள் மாறி சமநிலை உண்டாகும்.
ரிஷபம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் 2023
Published on
Updated on
2 min read

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

குடும்பத்தில் நிம்மதி பூத்துக் குலுங்கும். பொறுமையும் பொறுப்பும் உயரும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கங்கள் மாறி சமநிலை உண்டாகும். சிறிய முதலீடுகளைச் செய்வீர்கள். 

தொழிலில் பெரிய மாற்றங்களைச் செய்ய வேண்டாம்.  சிறு அலைச்சல்களுக்குப் பின்னரே செயல்கள் சாதகமாக முடிவடையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சரியான நேரத்தில் ஆகாரத்தை எடுத்துக் கொள்வீர்கள். பெற்றோர் வழியில் மருத்துவச் செலவுகள் இருக்காது. உடன்பிறந்தோருடன் இணக்கமாகப் பழகுவீர்கள்.  போட்டிகளால் பாதிப்பு இருக்காது. அரசு வழியில் தொடர்ந்த கெடுபிடிகள் குறையத் தொடங்கும். மனதுக்கு இனிய மகிழ்ச்சி தரும் பயணம் இருக்கும்.  வசிக்கும் வீட்டை மாற்றுவீர்கள்.

சுறுசுறுப்புடன் விவேகத்துடன் காரியங்களைச் செய்து வெற்றி பெறுவீர்கள். பண விஷயங்களில் எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். புதிய கடன்கள் என்று எதுவும் ஏற்படாது. வழக்கு விஷயங்களில்  விட்டுக் கொடுத்து நடந்தால், வெற்றி பெறுவீர்கள். உங்களின் தனித்துவச் செயல்களால் நீங்களும்

உங்களைச் சார்ந்தவர்களும் பயனடைவீர்கள்.  சமுதாயத்தில் உயர்ந்தவரைச் சந்தித்து அவர்கள் மூலம் செய்தொழிலை  விரிவுபடுத்துவீர்கள்.  அரசாங்கத்தில் இருந்து எதிர்பார்த்தச் சலுகைகளும் கிடைக்கும். அதே நேரம் உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களிடம் சிறிது கண்டிப்புடன் நடப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள்: பண வரவும் ஊதிய உயர்வும் நன்றாக இருக்கும். நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு குறையும் என்பதால், அவர்களைப் பற்றி பிறரிடம் பேசாமல்  மௌனமாக இருப்பது நல்லது.  அலுவலக ரீதியான பயணம் அனுகூல பலன்களைத் தரும்.  புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

வியாபாரிகள்: வியாபாரத்தை முனைப்புடன் செய்து, லாப இலக்கை அடைவீர்கள்.  கூட்டாளிகளும், நண்பர்களும் ஒத்துழைப்பார்கள்.  கடன் கொடுக்காமல் கறாராகப் பேசி, வியாபாரத்தை விரிவுபடுத்தவும். பொருளாதார வளம் நன்றாக இருக்கும்.

விவசாயிகள்: விளைச்சலில் பெருக்கத்தைக் காண்பார்கள். திறமைகள் வீண்போகாது. சக விவசாயிகளுக்கு உதவி செய்வீர்கள்.  உப தொழில்களிலும் கவனம் செலுத்துவீர்கள்.

அரசியல்வாதிகள்:  தைரியமும் ஆற்றலும் மிகுதியாகும். கொடுத்த வாக்கை நிறைவேற்ற பாடுபடுவீர்கள்.  கட்சித் தலைமையிடம் நற்பெயரை எடுப்பீர்கள். வழக்கு, விவகாரங்களில் சாதகமாகத் தீர்ப்பைக் காண்பீர்கள்.

கலைத்துறையினர்: புதிய ஒப்பந்தங்களால் மன நிம்மதி அடைவீர்கள். வருமானம் கூடுதலாகும். கடமைகளில் கண்ணும் கருத்துமாய் இருப்பீர்கள். தன்னம்பிக்கையுடன் சுறுசுறுப்பாகப் பணியாற்றுவீர்கள்.

பெண்கள்: உறவினர்களிடம்  அன்புடன் நடக்கவும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். கணவருடன் அன்பும் பாசமும் அதிகரிக்கும்.   உங்கள் கடமைகளை சரிவர ஆற்றுங்கள். ஆன்மிகத்தில் மனதைச் செலுத்துங்கள். பணம் மிகுதியாகவே வரும்.

மாணவர்கள்: உடல் வலிமை பெற உடற்பயிற்சிகளையும், மன வலிமை பெற யோகா போன்றவைகளையும் மேற்கொள்வீர்கள்.  விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.  புத்தாண்டில் மனநிறைவுடனே வாழ்வீர்கள்.

பரிகாரம்: துர்கையை வழிபடவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com