கும்பம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் 2023

உடல் ஆரோக்கியம், மன வளம் பாதிப்பில்லாமல் சீராகவே இருக்கும் இந்த சனிப்பெயர்ச்சியில்... 
கும்பம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் 2023
Published on
Updated on
2 min read

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பதற்றம் ஆகாமல் உங்களது வேலைகளை முடித்து விடுவீர்கள். உடல் ஆரோக்கியம், மன வளம் பாதிப்பில்லாமல் சீராகவே இருக்கும். நேரம் பாராது கடுமையாக உழைக்க வேண்டிவரும். உறவினர்கள், நண்பர்களுடன் இணக்கமான உறவு தொடரும்.  

உங்கள் பேச்சையும், கருத்தையும் மற்றவர்கள் கேட்டு நடப்பார்கள். உங்களின் திறமைகளைத் தன்னம்பிக்கையுடன் வெளிப்படுத்துவீர்கள். நண்பர்கள் போல் பழகும் விரோதிகளை இனம் கண்டு ஒதுக்கி விடுவீர்கள். சமுதாயப் பணிகளில் உங்கள் ஈடுபாடு கூடும்.

குழந்தை இல்லாதவர்களுக்கு மழலைப் பாக்கியமும் கிடைக்கும். இல்லத்துக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். சில அவசிய விஷயங்களுக்குக் கடன் வாங்க நேரிட்டாலும், தவணைகளை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்திவிடுவீர்கள். 

உத்தியோகஸ்தர்கள்: படிப்படியான வளர்ச்சி உண்டாகத் தொடங்கும். புதுப்புது அனுபவங்கள், பாடங்களைக் கற்றுக் கொள்வீர்கள். கடினமான வேலைப் பளு இருந்தாலும், பக்குவமாக  சமாளிக்கத் தொடங்குவீர்கள். எவரையும் நம்பி எதையும் பகிராதீர்கள். மௌனம் சிறந்தது. தான்உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கத் தொடங்குங்கள். அதே நேரம் சிலருக்கு வெளிநாடு சென்றுவரும் பாக்கியங்களும் உண்டாகும்.

வியாபாரிகள்: கூட்டாளிகளுடன் சேர்ந்து வியாபாரம் செய்வது உகந்ததல்ல. கணக்கு விஷயங்களில் சற்று கூடுதல் கவனம் தேவை.  பழைய சேமிப்பை முதலீடு செய்து வியாபாரத்தைப் பெருக்க நினைக்காதீர்கள். வியாபாரத்தில் கடுமையாகப் போட்டிகள் இருந்தாலும், முயற்சிகள் படிப்படியாக வெற்றிகளைத் தேடித் தரும்.

விவசாயிகள்: விவசாயத் தொழிலாளர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். கடுமையான வாக்குவாதங்களைத் தவிருங்கள். நல்ல விளைச்சல் இருந்தாலும் லாபம் சிறிதளவே காண்பார்கள். புதிய குத்தகைகளில் சற்று கவனம் தேவை.
அரசியல்வாதிகள்: புகழ், பெயரைத் தக்க வைத்துக் கொள்ளப் பாடுபடுவீர்கள். புதிய பதவிகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். எனினும், தொண்டர்களை அனுசரித்து அரவணைத்துச் செல்லுங்கள். பேசும் பேச்சில் மிகுந்த கவனம்  தேவை.

கலைத்துறையினர்: மனதில் திட்டமிட்டாலும் செயலாற்றும்போது சற்று தாமதம் ஏற்படும். புகழும் பாராட்டும் கிடைப்பதில் மிகுந்த தாமதமாகும். சக கலைஞர்களிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காததால், அவர்களிடம் சற்று கவனம் தேவை.

பெண்கள்: மருத்துவச் செலவுகள் கூடுதலாகவே இருக்கும். எதிலும் கூடுதல் கவனம் தேவை. குளிர்ச்சியான உணவுப் பொருள்களைத் தவிர்த்திடுங்கள். கணவரிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நன்று. வாக்கில் கவனம் தேவை. மொத்தத்தில் சிக்கனமாய் நடந்துகொள்ளுங்கள். ஆன்மிகத் தேடல்கள் 
அதிகரிக்கும்.

மாணவர்கள்: பாடங்களில் மிகுந்த கவனம் தேவை. பெற்றோர், உறவினர்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்ளுங்கள். மிகுந்த கவனத்துடன் காரியமாற்றுங்கள்.  விளையாடும்போது கவனம் தேவை. வெளிநாடு சென்று படிக்கும் முயற்சியில் வெற்றியடைவீர்கள். நல்லதொரு படிப்பினையும் கற்றுத் தரும். முன்னேற்றத்துக்கு வித்திடும்.

பரிகாரம்: ஸ்ரீசிவபெருமானை வழிபடவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.