சிம்மம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் 2023

எந்த ஒரு செயலிலும் அவசரமின்றி நிதானத்துடன் செயல்படுவர்கள் இந்த ராசிக்காரர்கள். 
சிம்மம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் 2023
Published on
Updated on
2 min read

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

எந்த ஒரு செயலிலும் அவசரமின்றி நிதானத்துடன் செயல்படுவீர்கள். தேவையில்லாத மனபயங்கள் விலகிவிடும். நண்பர்கள் ஆதரவை நல்குவார்கள். உறவினர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் குறையும்.

உங்களின் செயலாற்றத் திறமையால் பெருமையாகப் பேசப்படுவீர்கள். பெற்றோரின் நலத்தைப் பேணுவீர்கள். நிலம், பூமி வகையிலும் எதிர்பாராத லாபம் அடைவீர்கள். மனதில் புதிய மாற்றங்கள் உண்டாகும். ஆன்மிகத்திலும், ஆலயத் திருப்பணிகளிலும் ஈடுபாடு அதிகரிக்கும். தூரத்து உறவினர்களின் எதிர்பாராத சந்திப்பு குடும்பத்தில் புதிய மலர்ச்சியை உண்டாக்கும்.

நேர்முக, மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொண்டு விலக்கி விடுவீர்கள். பழைய காலத்தில் விற்க முடியாமல் இருந்த சொத்துகள் நல்ல விலைக்கு விற்பனையாகும். பாகப் பிரிவினை தொடர்பான விஷயங்களிலும் தைரியமாக முடிவு எடுப்பீர்கள். நல்ல வருமானம் வரும் சேமிப்புத் திட்டங்களிலும் சேர்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள்: அலுவலகத்தில் நிலவும் இணக்கமான சூழ்நிலைகளில் இருந்து சற்று விலகி, சகஜமான நிலை உண்டாகும்.  உங்களது திறமைகள் பளிச்சிடும். சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். வேலைகளில் உள்ள குறைகளைக் குறைத்துக் கொள்வீர்கள். சிலர் விரும்பத்தகாத பணியிட மாற்றங்களையும் சந்திக்க நேரிடும். பயணங்களால் சில அனுபவங்கள் ஏற்படும். பழைய நிலுவைத் தொகைகள் சிறிது சிறிதாக வந்து சேரும்.

வியாபாரிகள்: கொடுக்கல்} வாங்கலில் சராசரியான லாபங்களைக் காண்பீர்கள். பழைய கடன்களைத் தீர்த்து விடுவீர்கள். கூட்டாளிகளிடமும், நண்பர்களிடமும் குடும்பத்தினரிடமும் கலந்தாலோசித்த பிறகே அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவும்.

விவசாயிகள்: செலவு குறைந்த மாற்றுப் பயிர்களை பயிர் செய்வதன் மூலம் வரும் இழப்பை ஈடுகட்டலாம். நீர்வரத்து அதிகமாக இருப்பதால், பாசன வசதிகள் பெருகும். சேமிப்பை எடுத்து செலவு செய்யவும் நேரிடலாம்.

அரசியல்வாதிகள்: ஆட்சி மேலிடத்தின் பார்வை உங்கள் மீது விழும். அனைவரையும் அரவணைத்துச் செல்லுங்கள். உங்களுக்கு மறைமுக எதிரிகளினால் சில தொல்லைகள் ஏற்பட்டு விலகும். அதே நேரம் தொண்டர்களின் ஆலோசனைகளைக் கேட்ட பின்பே புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும். பேசும் பேச்சில் கவனம் தேவை.

கலைத்துறையினர்: கிடைத்திருக்கும் ஒப்பந்தங்களில் உங்களின் முழுத் திறமையைப் பயன்படுத்தி செய்து முடிப்பீர்கள். சக கலைஞர்களின் உதவி இந்தக் காலக்கட்டத்தில் எதிர்பார்க்க முடியாது.  அவர்களிடம் பொறுமையாக சற்று அனுசரித்து நடக்கவும். பண வரவில் எந்தவொரு குறையும் இருக்காது.

பெண்கள்: உங்களின் பொறுப்பறிந்து நடந்து கொள்வீர்கள். கணவருடனான வாக்குவாதங்கள், நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் சற்று குறையும், சகோதர, சகோதரி உறவில் விரிசல்கள் மறைந்து சீர்படும். உடல் உபாதைகளில் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. வாகன வசதி ஏற்படும்.  பண வரவில் மாற்றம் இல்லை. 

மாணவர்கள்: உடற்பயிற்சிகளைத் தவறாது செய்து சுறுசுறுப்பைக் கூட்டிக் கொள்ளுங்கள். புத்தி கூர்மையாகும். நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கு வாய்ப்பு உண்டாகும். பெற்றோர் சொல் கேட்டு நடப்பீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீ நரசிம்மரை வழிபடவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com