
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும். தோற்றப் பொலிவு மேம்படும். குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து நடந்து உங்கள் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்வீர்கள். மற்றபடி உங்களை மறைமுகமாக இடித்துப் பேசியவர்கள் அடங்கிவிடுவார்கள். வெளியூர் பயணங்களால் வெளிவட்டார நட்பு மேம்படும்.
சுப காரியம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நல்லெண்ணங்களை வளர்த்துக் கொள்வீர்கள். ஆன்மிக ஈடுபாடு, ஆலயத் திருப்பணிகளிலும் ஈடுபடுவீர்கள். குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.
அனைவரிடமும் இணக்கமாகப் பழகினாலும், உங்கள் தனிப்பட்ட விஷயங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். புதிய கடன்களை வாங்கி சொத்துகள் வாங்குவதை முடிந்தவரைத் தள்ளிப் போடவும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நல்லுறவு ஏற்படும்.
அரசு சலுகைகள் உங்களைத் தேடி வரும். நெடுநாளைய ஆசை திடீரென்று நிறைவேறும். உங்களின் சமயோஜித அறிவால் சிக்கலான சூழ்நிலைகளிலிருந்து விடுபட்டு விடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள்: இடையூறுகளைப் பொருட்டாகவே கருத மாட்டீர்கள். உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் எந்தத் தடையும் இருக்காது. அலுவலகத்தில் வீண் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாதீர்கள். விரும்பிய பணியிட மாறுதல்களைப் பெறுவீர்கள். உங்களின் வேலைத்திறன் பளிச்சிடும்.
வியாபாரிகள்: வங்கிக் கடன் சரியான நேரத்தில் கிடைக்கும். புதிய யுக்தியினால் வேகமாக விற்பனையாகும் பொருள்களை லாபத்துக்கு விற்பனை செய்வீர்கள். உங்கள் திட்டங்கள், எண்ணங்களை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். போட்டிகளைச் சமாளித்து வெற்றி அடைவீர்கள்.
விவசாயிகள்: அரசு நிர்ணயித்த மானியங்கள் சரியான நேரத்தில் வந்தடையும். விவசாயத் தொழிலாளர்களை அரவணைத்துச் செல்லவும். பழைய கடன்களை திரும்ப அடைக்கும் முயற்சிகள் பெருமளவு வெற்றியடையும். கொள்முதலில் நல்ல லாபம் கிடைக்கும். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.
கலைத்துறையினர்: சக கலைஞர்கள், ரசிகர்கள் உதவிக்கரமாக இருப்பார்கள். பேசும் நேரத்தில் அநாவசிய வார்த்தைகளை விடக் கூடாது. மறைமுக குத்தல் பேச்சுகளுக்கு செவி சாய்க்காதீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அதிக வருமானத்தைப் பெற்றுத் தரும்.
அரசியல்வாதிகள்: கட்சியில் உங்கள் செல்வாக்கு கூடும். பேச்சில் கண்ணியம் குறையாது பேசுங்கள். பொதுச்சேவையில் ஈடுபடுங்கள். உங்களுக்கு எதிராகப் போடப்பட்ட வழக்குகளில் சாதகமாகவே தீர்ப்பாகும். எதிர்க்கட்சியினரிடம் சாதுர்யமாக நடந்துகொள்ளுங்கள்.
பெண்கள்: குடும்பத்தில் ஒற்றுமை நிறையும். உங்கள் பேச்சை உறவினர்கள் குறை கூறுவார்கள். ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். மழலைச் செல்வத்தால் பெருமைப்படுவீர்கள்.
மாணவர்கள்: கடுமையாக உழைத்துப் படித்து சாதனை புரியும் காலமாகும். உழைப்புக்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் பேச்சைக் கேட்டு நடக்கவும். உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறும் எண்ணம் மேலோங்கும்.
பரிகாரம்: ஸ்ரீகிருஷ்ணரை வழிபடவும்.