
சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் திருக்கோயிலில் மாசி மகம் தீர்த்தவாரி உற்சவம் இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.
பாரிமுனையின், தம்பு செட்டித் தெருவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கடடேஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகம் தீர்த்தவாரி உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், இந்தாண்டுக்கான மாசி மகம் தீர்த்தவாரி உற்சவம் இன்று காலை 9.00 மணியளவில் கடற்கரையில் பக்தர்கள் சூழ அம்மனுக்கு தீர்த்தவாரி கோலாகலமாக நடைபெற்றது.
தீர்த்தவாரி உற்சவத்தில் பெரும்பாலான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து இன்று மாலை 6.30 மணிக்கு அலங்காரம், ஆராதனையும் வீதி உலா புறப்பாடும் நடைபெறுகிறது.
இவ்விழாவினை அறங்காவலர் குழுத் தலைவர் பிரம்மஸ்ரீ.எஸ்.சர்வேஸ்வரன் ஆச்சாரி, திருமதி.எஸ்.ஷர்மிளா ஆகியோர் இணைந்து நடத்துகின்றனர்.
இதையும் படிக்க: தொடர்ந்து 3வது நாளாக 42 ஆயிரத்தில் நீடிக்கும் தங்கம் விலை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.