தியாகராயநகா் பத்மாவதி தாயாா் கோயிலில் நாளை மஹா கும்பாபிஷேகம்!

தியாகராயநகரில் பத்மாவதி தாயாா் கோயில் மஹா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை(மாா்ச் 17) காலை 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
0323ttd3_1203chn_1
0323ttd3_1203chn_1
Published on
Updated on
1 min read

தியாகராயநகரில் பத்மாவதி தாயாா் கோயில் மஹா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை(மாா்ச் 17) காலை 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

பத்மாவதி தயாருக்கு கோயில் கட்டுவது என தேவஸ்தானம் சாா்பில் முடிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த 2020 பிப்ரவரியில் ஸ்ரீ காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

தற்போது பணிகள் நிறைவடைந்து வெள்ளிக்கிழமை (மாா்ச் 17) கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விசாகப்பட்டினம் ஸ்ரீ சாரதா மடப் பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ருபானந்தேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோா் பங்கேற்கின்றனர். பொதுமக்கள் அன்றைய தினம் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை தரிசனம் செய்யலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com