கிரிவலம் செல்ல திருவண்ணாமலையில் குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்!

காா்த்திகை மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர். 
cglgirivalam_(1)_0901chn_171_1
cglgirivalam_(1)_0901chn_171_1

காா்த்திகை மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர். 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நாளை கார்த்திகை தீபத் திருவிழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. நிகழாண்டுக்கான தீபத் திருவிழா கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபத் திருவிழா (நவ.26)ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவா் ஸ்ரீஅருணாசலேஸ்வரா், மூலவா் ஸ் ரீஉண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெறும்.

அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படும். இதேநேரத்தில், கோயில் மூன்றாம் பிரகாரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை 3 நிமிடங்கள் மட்டுமே காட்சி தரும் ஸ்ரீஅா்த்தநாரீஸ்வரா் எழுந்தருளி, பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். இரவு 10 மணிக்கு தங்க ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி, மாட வீதிகளில் வலம் வருவர்.

காா்த்திகை மாத பௌா்ணமி ஞாயிற்றுக்கிழமை (நவ.26) பிற்பகல் 3.58 மணிக்குத் தொடங்கி, திங்கள்கிழமை (நவ.27) பிற்பகல் 3.07 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் மகா தீபத்தையொட்டி அதைக் காண வரும் லட்சக்கணக்கான பக்தா்களில் பலரும் கிரிவலம் வருவாா்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com