ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2023: தனுசு

தனுசு ராசிக்கான ராகு-கேது பெயர்ச்சிப் பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார். 
ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2023: தனுசு
Published on
Updated on
2 min read

தனுசு ராசிக்கான ராகு-கேது பெயர்ச்சிப் பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார். 

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

கிரகநிலை

ராகு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

கேது பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்

இந்த ராகு -  கேது பெயர்ச்சியில் எடுத்த முயற்சிகள் கைகூடும். வரவுக்கேற்ற செலவு ஏற்படும். எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் உண்டாகும். மனோதைரியம் கூடும். மற்றவர்களால் குற்றம் சாட்டப்படலாம். எனவே கவனம் தேவை. கண் நோய், பித்தம், வாதம் சம்பந்தப்பட்ட நோய் ஏற்பட்டு நீங்கும். வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். திடீர் கோபம் உண்டாகும்.

தொழில், வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் கீழ் வேலை செய்பவர்களின் செயல்களால் உங்களுக்கு கோபம் உண்டாகலாம். நிதானமாக அவர்களிடம் பேசுவது நன்மை தரும். பழைய பாக்கிகளை  வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகம் தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளிடம் வீண் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.

கணவன், மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதம் ஏற்படும். கவனமாக பேசுவதன் மூலம் நெருக்கம் அதிகரிக்கும். விருந்தினர் வருகை குடும்பத்தினரின் ஆரோக்கிய குறைவு ஆகியவற்றால்  செலவு அதிகரிக்கும். சில்லறை சண்டைகள் அக்கம், பக்கத்தினருடன் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்நோக்கியிருக்கும் சவால்களையும் முடிப்பீர்கள். சுவாரசியமான நபர்களை சந்திக்கும் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் திறமைகளை அவர்களிடம் எடுத்துக் காட்டுவதன் மூலம் நல்ல வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் மாறும். அதிக கவனத்துடன் பொறுப்புகளை கையாள வேண்டும். மேலிடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். நீங்கள் செய்த வேலைகளை மற்றவர்கள் செய்ததாகக் கூறி நற்பெயர் எடுத்துக் கொள்வார்கள். கவனம் தேவை.

பெண்கள் வலிய சென்று உதவுவதன் மூலம் வீண் பழி ஏற்படலாம். கவனம் தேவை. கோபத்தை தவிர்ப்பது நல்லது.

மாணவர்கள் எந்த வேலை செய்தாலும் கவனமாக செய்வது நல்லது. பாடம் தொடர்பான சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு படிப்பது நல்லது.

மூலம்

இந்த ராகு -  கேது பெயர்ச்சியில் வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று கூட தோன்றலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்படலாம். பிள்ளைகள் கல்விக்கான செலவு அதிகரிக்கும். அத்துடன் தேவையானவற்றையும் வாங்கி தருவீர்கள். பெண்கள் அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் வரலாம். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் கை கூடி வரும். அதிகமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டி வரும். அரசியல்துறையினர் எதிர்பார்த்த பதவிகளை அடைவீர்கள். மாணவர்கள் மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். வீண் விவகாரங்களை விட்டு விலகுவது நல்லது.

பூராடம்

இந்த ராகு -  கேது பெயர்ச்சியில் நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உங்களது பேச்சை மற்றவர்கள் சரியாக புரிந்துகொள்வார்கள். எந்த ஒரு காரியமும் இழுபறியாக இருந்து முடிவில் சாதகமான பலன்தரும். வீட்டைவிட்டு வெளியில் தங்க நேரலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகாரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டாகும். வேலைப்பளு குறையும். திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

உத்திராடம் 1ம் பாதம்

இந்த ராகு -  கேது பெயர்ச்சியில் மனதில் துணிச்சல் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். அரசியல்துறையினர் அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது வேகம் பெறும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள். காரியங்களில் இருந்த தாமதம் நீங்கும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நன்மை தரும். விருப்பத்திற்கு மாறாக சில காரியங்கள் நடக்கலாம். எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது.

பரிகாரம்

சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவது கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com