செங்கல்பட்டில் தசரா திருவிழா: விதவித அலங்காரத்தில் அம்மன் ஊர்வலம்!

செங்கல்பட்டில் தசரா திருவிழாவின் 11ஆம் நாளான இன்று விதவித அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பெரிய ரதங்களில் மின்விளக்கு அலங்காரங்களுடன் ஊர்வலம்  நடைபெற்றது.
செங்கல்பட்டில் தசரா திருவிழா: விதவித அலங்காரத்தில் அம்மன் ஊர்வலம்!

செங்கல்பட்டில் தசரா திருவிழாவின் 11ஆம் நாளான இன்று விதவித அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பெரிய ரதங்களில் மின்விளக்கு அலங்காரங்களுடன் ஊர்வலம்  நடைபெற்றது.

செங்கல்பட்டு நகரில் 150 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாரம்பரிய தசரா திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி திருவிழாவையொட்டி 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவில், 11ஆம் நாள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் பல்வேறு அலங்காரத்தில் சாமிகள்  எழுந்தருளி ஊர்வலம் மேளதாளங்கள் முழங்க வானவேடிக்கையுடன் நடைபெற்றது.

சாமிகள் அலங்காரத்தில் வீற்றிருக்க தசரா விழா கமிட்டியினர், கோயில்களில் இருந்து ஜ.எஸ். சாலை வழியாக அண்ணா சாலை பஜார் வீதி அண்ணா சாலை வழியாக ஊர்வலமாக வந்து அனுமந்த புத்தேரி அண்ணா சாலை முக்கூட்டில் வன்னி மரம் குத்தி, சின்ன கடை சாமி, அண்ணா சாலை முத்து மாரியம்மன் கோவில், பூக்கடை சாமி, ஜவுளிக்கடை சாமி, மளிகைக் கடை சாமி, கவரை தெரு பலிஜ குல சாமி, ஜீவானந்தம் தெரு அங்காளம்மன் கோயில்,

சின்ன நத்தம் சுந்தர விநாயகர் கோவில், பெரிய நத்தம் ஓசூர் அம்மன் கோயில், மதுரை வீரன் கோயில், நாகாத்தம்மன் கோயில், மார்க்கெட் சின்ன அம்மன் கோயில், மேட்டு தெரு திரௌபதி அம்மன் கோயில், புதுஏரி செல்வ விநாயகர் முத்துமாரியம்மன் கோயில், கோட்டைவாயில் கடும்பாடி அம்மன் கோயில் உள்ளிட்ட தசரா விழா கமிட்டி குழுகள்  சார்பில் சுமார் பதினைந்திற்கும் மேற்பட்ட மகிஷாசூரமர்த்தினி, சிவன் பார்வதி முப்பெரும் தேவியர்களான வராகி பிரித்திங்கரா தேவி பராசக்தி அங்காளம்மன் என பல்வேறு அலங்காரங்களில் சாமிகள் ஊர்வலத்தில் வரிசையாகச் சென்றது.

ஊர்வலத்தில் வரும் சுவாமிகளை வரவேற்கும் விதமாக மேட்டுத்தெரு செங்கழுநீர் விநாயகர் கோயிலில் காமாட்சி அம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்து வீற்றிருக்க 27ஆம் ஆண்டாக 300 கிலோ அரிசி கொண்டு சமைத்து அன்னதானம் வழங்கப்பட்டது. மதுராந்தகம் வாலாஜாபாத் பாலூர் ஆத்தூர் திம்மாவரம் கூடுவாஞ்சேரி சிங்கப்பெருமாள் கோவில் மறைமலைநகர் மதுராந்தகம், கல்பாக்கம், திருக்கழுக்குன்றம் திருப்போரூர் மாமல்லபுரம் உள்ளிட்ட உள்ளூர் வெளியூர், சுற்று மக்கள் சாதி மத பேதமின்றி  ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் குழந்தைகளுடன் குடும்பத்துடன் நண்பர்களுடன் செவ்வாய்க்கிழமை  இரவே வந்து கடைவீதிகள் கேலிக்கை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்து புதன்கிழமை  காலை சாமி ஊர்வலத்தைத் தசரா திருவிழா கண்டும் திருவிழா கடைகளில் பொருள்கள் வாங்கியும், கேளிக்கை நிகழ்ச்சிகளில் விளையாடியும்  மகிழ்ந்தனர். செங்கல்பட்டில் 11 நாள் திருவிழாவாக தசரா திருவிழா பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com