சந்திர கிரகணம்: நடை சாத்தப்படும் கோயில்களின் விவரம்!

சந்திர கிரகணம்: நடை சாத்தப்படும் கோயில்களின் விவரம்!

நடப்பாண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நள்ளிரவு நிகழவுள்ளது. பெரும்பாலான கோயில்களில் பூஜை நேரம் மாற்றப்பட்டு, முன்னதாகவே கோயில் நடை சாத்தப்படுகிறது. 

நடப்பாண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நள்ளிரவு நிகழவுள்ளது. பெரும்பாலான கோயில்களில் பூஜை நேரம் மாற்றப்பட்டு, முன்னதாகவே கோயில் நடை சாத்தப்படுகிறது. 

பகுதிநேர சந்திர கிரகண நிகழ்வு சனிக்கிழமை(அக்.28) இரவு 12.57 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.28 மணி வரை சந்திரகிரகணம் நடைபெற உள்ளது.

சந்திர கிரகணம் என்றால் என்ன?

சூரியனுக்கும், நிலவுக்கும் இடையில் பூமி பயணிக்கும்போது, பூமியின் நிழலானது நிலவினை மறைப்பதால் சந்திர கிரகணம் நிகழ்கிறது. சந்திர கிரகணமானது எப்போதும் பௌர்ணமி நாள்களில்தான் நிகழும்.

எங்கெல்லாம் தெரியும்?

ஆசியா, ரஷியா, ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆர்டிக், அண்டார்டிக்கா உள்ளிட்ட பகுதிகளில் கிரகணத்தைக் காண முடியும். இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் கிரகணம் தென்படும். தில்லியின் தென்மேற்கு பகுதியில் கிரகணத்தைக் காணலாம். 

கோயில் நடை சாத்தப்படும் விவரம்

சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை இன்று இரவு 7.05 மணி முதல் 29-ம் தேதி அதிகாலை 3.15 மணி வரை நடை அடைக்கப்படுகிறது. 

பழனி முருகன் கோயிலில் இன்று இரவு 8 மணிக்கு அர்த்தசாம பூஜை செய்து கோயில் நடை அடைக்கப்படுகிறது. நாளை அதிகாலை வழக்கம்போல் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்படும். 

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் இன்று மாலை 5 மணிக்கு சாயரட்சை பூஜை முடித்து 6 மணிக்கு நடை சார்த்தப்படுகிறது. நாளை காலை 5.3-க்கு நடை திறக்கப்படும். 

பண்ணாரி மாரியம்மன் கோயில் நடை இன்று மாலை 6 மணிக்கு நடை சாத்தப்பட்டு, மீண்டும் அதிகாலை 5 மணியளவில் கோயில் நடை திறக்கப்படும். சந்திர கிரகணத்தால் 28-ஆம் தேதி முன்னதாகவே மாலை 5 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெறும் எனக் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் இன்று இரவு 7 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. மீண்டும் நாளை காலை 5 மணிக்கு தரிசனத்துக்கு மக்கள் அனுமதிக்கப்படுவர். 

சிவன் மலையில் உள்ள புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நடை சாத்தப்படும். பின்னா் வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை காலை கோயில் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும். 

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் இன்று மாலை 5.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. மீண்டும் நாளை காலை 6 மணிக்கு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும். 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று இரவு 8 மணிக்கு திருக்கோயில் நடை திருக்காப்பிடப்படுகிறது. இரவு 10 மணிக்கு மீண்டும் திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு, 10.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையாகி, இரவு 11 மணிக்கு சுவாமிக்கு பட்டு சாத்தி, நடைதிருக்காப்பிடப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் இன்று இரவு 7 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. நாளை காலை 5.30 மணிக்கு ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறும். 

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் கிரகண புண்ய காலத்தை முன்னிட்டு அன்னாபிஷேகம் முதல் சாயரட்சை பூஜை வரை நடைபெற்றதும் இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கிரகணாபிஷேகம் நடைபெற்றதும், அா்த்தஜாம பூஜை, திருப்பள்ளி எழுச்சி, ஸ்படிகலிங்க பூஜை, திருவனந்தால் பூஜை ஆகியவை நடைபெறும். நாளை காலை 6 மணிக்கு மேல் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com