மேஷம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் 2023

நெடுநாளாக குழந்தைப் பிறக்காமல் தவித்தவர்களுக்கு மழலை பாக்கியம் கிடைக்கும்.
மேஷ ராசி
மேஷ ராசி
Published on
Updated on
2 min read

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவீர்கள். வீட்டிலும் வெளியிலும் மதிப்பு உயரக் காண்பீர்கள்.  தொழிலை விரிவுபடுத்துவீர்கள். முகத்தில் பொலிவும் மிடுக்கும் உண்டாகும். குழந்தைகள் வழியில் நன்மைகள் கூடும். 

நெடுநாளாக குழந்தைப் பிறக்காமல் தவித்தவர்களுக்கு மழலை பாக்கியம் கிடைக்கும்.  இல்லத்துக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.  வெளியூர், வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்திகள் வந்து சேரும். பூர்விகச் சொத்து விஷயங்களில் இருந்த பிரச்னைகள் விலகும். செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள்.  

குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்; உங்கள் இல்லத்திலும் நடத்தி மகிழ்வீர்கள்.  பெற்றோரிடம் இணக்கமாகப் பழகி, ஆசியைப் பெறுவீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். உடல் நலம், மன வளம் மேம்பட யோகா, பிராணாயாமம் போன்றவற்றை செய்வீர்கள். குழப்பமான சூழ்நிலையில் சரியான முடிவெடுப்பீர்கள். தொட்டது துலங்கும் என்பது போல, திட்டங்கள் முழு வெற்றி பெறும்.

உத்தியோகஸ்தர்கள்: மேலதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும்.  வெளிநாட்டு வேலை, பயணம், பதவி உயர்வு கிடைக்கும். கோபத்தைக் குறைத்து நிதானத்துடன் செயல்பட்டு சரிவர வேலைகளைத் திட்டமிட்டு செய்தால், மேலதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள் என்பது உறுதி.

வியாபாரிகள்: நல்லவர்களுடன் கூட்டு சேர்ந்தால் நஷ்டம் வராது.  வாராக் கடன்கள் திரும்ப வந்து சேரும். கணக்கு வழக்குகளில் எந்த தவறும் நேராமல் பார்த்துக் கொள்வீர்கள். சமுதாயத்தில் செல்வாக்கு உயரும்.

விவசாயிகள்: பொருளாதார ரீதியான நெருக்கடி குறையும். புதிய குத்தகைகள் தேடி வரும்.  நீராதாரங்களைப் பெருக்குவீர்கள். புதிய கால்நடைகளை வாங்கும் காலம் இது. தொல்லைகள் தொலைந்து, நிம்மதியாக வேலைகளைச் செய்வீர்கள்.

அரசியல்வாதிகள்: நம்பிக்கை வைத்து மேலிடம் அளிக்கும் சில முக்கியமான பணிகளை செவ்வனே செய்து முடிப்பீர்கள்.   உங்களின் திட்டங்களைச் சிரமமின்றி செய்து முடித்து கட்சிப் பணிக்காகப் புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.

கலைத்துறையினர்: திறமைகள் பளிச்சிடும்.  அதிகம் உழைத்து, வெற்றிக் கனியை  எட்டிப் பிடிப்பீர்கள். பிறருடன் பழகும்போது கவனம் தேவை. பிற கலைஞர்களுடன் அன்போடு பழகவும்.

பெண்கள்: கணவருடனான கருத்து வேறுபாடு ஏற்படாது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களுடன் விரிசல் ஏற்படாது. விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். உடல் நலம் தேறும். கலைகளை கற்பீர்கள். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறும்.

மாணவர்கள்: முயற்சி, உழைப்பை பாடங்களைப் படிப்பதற்கே பயன்படுத்தவும்.  வெளிநாடு சென்று கல்வி கற்கும் வாய்ப்பு தேடிவரும். ஆசிரியர்களுடன் மதிப்பும் மரியாதையும் கூடும். பெற்றோர்களை அரவணைத்து செல்லவும்.  நினைத்ததைச் சாதித்து வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: மகாலட்சுமியை வழிபடவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com