
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
உங்கள் அறிவாற்றலும் தன்னம்பிக்கையும் கூடும். செயற்கரிய காரியங்களைச் சுலபமாகச் செய்து முடித்து நற்பெயரை எடுப்பீர்கள்.
சமுதாயத்தில் உயர்ந்தோரின் அன்பும் ஆசியும் கிடைக்கும். வாழ்க்கைத் தரம் உயரும். அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். செய்தொழிலை சீர்படுத்துவீர்கள். இதனால் வருமானம் உயரத் தொடங்கும். தாறுமாறாக இருந்த முதலீடுகளை முறைப்படுத்துவீர்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். செய்தொழிலில் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். எதிர்வரும் வாய்ப்புகளைத் தவறவிடாமல் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றிவிடுவீர்கள்.
பெரிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். அதே நேரம் அவைகளில் கையொப்பமிடும் முன் அனைத்து ஷரத்துகளையும் புரிந்துகொண்டு கையொப்பமிடுங்கள். மற்றபடி சமுதாயத்தில் உங்கள் மதிப்பு, கௌரவம் உயரும். பேச்சில் கண்ணியம் காப்பீர்கள்.
உடல் அசதிகளைப் பொருள்படுத்தாமல் மன மகிழ்ச்சியுடன் பணியாற்றுவீர்கள். உடன்பிறந்தோர் உங்கள் மனமறிந்து நடந்துகொள்வார்கள். வருங்காலத்தை வளமானதாக்க வலுவான அடித்தளங்களை அமைத்துக் கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள்: நன்றாக உழைத்தாலும், மேலதிகாரிகள் குறைகளைக் கண்டு சுட்டிக் காட்டுவார்கள். அலுவலகத்தில் கொடுத்திருந்த கடன் விண்ணப்பங்கள் சற்று தாமதமாகும். சற்று தாமதமாகவே பண வரவு வரும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு புதுப்புது அனுபவங்கள் கிடைக்கும்.
வியாபாரிகள்: லாபம் பெருகினாலும் கடும் போட்டிகளைச் சந்திக்க நேரிடும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசவும். முன்கோபத்தைத் தவிருங்கள். கூட்டாளிகளிடமும் நண்பர்களிடமும் ரகசியங்களை வெளிப்படுத்த வேண்டாம். புதிய முதலீடுகளில் கவனம் தேவை.
விவசாயிகள்: பழைய கடன்களை அடைத்து, புதுக் கடன்கள் கூடும். புதிய யுக்திகளைப் புகுத்தி லாபம் அடைந்தாலும் கால்நடைகளுக்கான பராமரிப்புச் செலவுகள் செய்ய நேரிடும். கருப்பு நிறப் பயிர்களால் சிறிது லாபம் கிடைக்கும். மனச் சோர்வைத் தவிர்க்கவும்.
அரசியல்வாதிகள்: இக்கட்டான தருணங்களில் சமயோஜித புத்தி கைகொடுக்கும். முயற்சிகளைக் கூட்டி, பல சாதனைகளைச் செய்து காட்டுவீர்கள். தொண்டர்களை அரவணைத்துச் செல்லுங்கள்.
கலைத்துறையினர்: சக கலைஞர்களின் ஆதரவால் நன்மைகளை அடைவீர்கள். அவர்களை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். படிப்படியான வளர்ச்சியைக் காண்பார்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். சிக்கனமாக இருக்கப் பழகிக் கொள்ளவும்.
பெண்கள்: தெய்வப் பலத்தைக் கூட்டிக் கொள்ளுங்கள். உடல் நலம் சுமாராகவே இருக்கும். போதும் என்கிற மனநிலையில் நிறைவைக் காண்பீர்கள். சகோதர, சகோதரி வழியில் பெரிய நலன்களை எதிர்பார்க்க முடியாது. அநாவசியப் பேச்சுகளைத் தவிர்க்கவும்.
மாணவர்கள்: நன்றாகக் கடின உழைப்பைக் கொடுத்து படித்து சிறந்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். கல்வி ரீதியான சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வீர்கள். நினைவாற்றல் கூடும். சக மாணவர்களிடம் ஒற்றுமையைப் பேணுங்கள். எதிலும் நிதானத்துடன் செயல்பட்டு ஆனந்தம் அடைவீர்கள்.
பரிகாரம்: ஸ்ரீ தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...