ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மிதுனம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் 2023

குடும்ப நிலை உயரத் தொடங்கும். ஏமாற்றங்கள் மறைந்து ராஜப் பாட்டையில் பயணிக்கத் தொடங்குவீர்கள் இந்த ராசிக்காரர்கள்.

News image
Updated On :13 ஜனவரி 2023, 12:42 pm

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

குடும்ப நிலை உயரத் தொடங்கும். ஏமாற்றங்கள் மறைந்து ராஜப் பாட்டையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பொருளாதாரமும் உயரும். குடும்பத்துடன் புனித தலங்களுக்கு சுற்றுலா சென்று வருவீர்கள். தேவையில்லாத சிந்தனைகளைத் தவிர்த்து, தெளிவானதை மட்டுமே சிந்திப்பீர்கள். புதியவர்களின் நட்பால் நன்மைகள் ஏற்பட்டாலும், அவர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். 

தொழிலில் மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். சமூகப் பணிகளில் இருப்போருக்கு அந்தஸ்தான பதவிகள் கிடைக்கும், பூர்விகச் சொத்து விஷயங்களில் சுமுகமான பாகப் பிரிவினை உண்டாகும். தெய்வ வழிபாட்டுடன் சாதுக்கள் தொடர்பும் உண்டாகும். பங்கு வர்த்தகத்தில் வருமானம் கிடைக்கும்.  சொத்துகளை வாங்க முயற்சிகள் பலிதமாகும். உடன்பிறந்தோருக்கு கேட்காமலேயே உதவிகளைச் செய்வீர்கள். கெட்டவர்களின் சகவாசம் தானாகவே கழன்றுவிடும். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

Story image

உத்தியோகஸ்தர்கள்: இடையூறுகளைத் தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். வார்த்தைகளில் கவனம் தேவை. சக ஊழியர்களை நம்பி வெளிப்படையாகப் பேச வேண்டாம்.  பணிகளைப் புரிந்து கொண்டு செயலாற்றுவார்கள், தாமதமானாலும் மேலதிகாரிகள் உங்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வார்கள்.  உத்தியோக மாற்றம், ஊர் மாற்றம்,  ஊதிய மாற்றம் அனைத்தும் கைகூடி மகிழ்ச்சியில் திளைப்பீர்கள்.

வியாபாரிகள்: வியாபார யுக்திகளை செயல்படுத்தும்போது ஏற்படும் இடையூறுகள் தவிடுபொடியாகும். புதிய முயற்சிகளில் வெற்றி பெற்றாலும் கொடுக்கல் வாங்கலில் சமநிலையையே காண்பார்கள். எனினும், பழைய பாக்கிகள் அடையும். கூட்டாளிகளை நம்ப வேண்டாம்.

விவசாயிகள்: மகசூல் நன்றாக இருக்கும். பாசன வசதிகளைச் செய்வதற்காகச் சில செலவுகளைச் செய்ய வேண்டி வரும். கால்நடைகளால் லாபம் உண்டாகும்.  கடின உழைப்பால் பழைய குத்தகை பாக்கிகளை அடைப்பீர்கள்.

அரசியல்வாதிகள்; உங்களின் சுறுசுறுப்பும் கூடும். பணியாற்றும் திறனைக் கண்டு கட்சி மேலிடம் பாராட்டும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் வெளியூர்ப் பயணங்களை மேற்கொண்டு வெற்றி அடைவீர்கள்.

கலைத்துறையினர்: புதிய ஒப்பந்தங்கள் கை கூடி வரும். மனம் புதுப்பொலிவுடன்  அனைத்திலும் தீவிர கடின உழைப்புடன் மேலும் புகழைத் தக்க வைத்துக் கொள்ள சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள்.

பெண்கள்: குடும்பத்தினரிடம் அன்பு காட்டுவீர்கள். கணவரின் பேச்சை மதித்து நடக்கவும். பொருளாதாரச் சிக்கல்கள் விலகும். உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பதால், பல சச்சரவுகளைத் தவிர்க்கலாம் சுப விரயங்கள் ஏற்படும். சொத்து சேர்க்கையும் உண்டாகும்.

மாணவர்கள்: படிப்பில் மிகுந்த ஆர்வம் உண்டாகும். எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு தொடர்ந்து நன்றாகவே இருக்கும். வெளிநாட்டுக் கல்வி கைகூடும். மனதுக்கு இனிய நிகழ்வுகள் நடந்தேறி மகிழ்ச்சியில் திளைப்பீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீஅனுமனை வழிபடவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.