துலாம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் 2023

நெருக்கடியான சூழ்நிலைகளை புத்தி சாதுர்யத்துடன் சமாளித்து வெற்றி பெறும் ஆற்றல் கொண்டவர்கள் நீங்கள். sani peyarchi 2023 thulam
துலாம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் 2023
Published on
Updated on
2 min read

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

நெருக்கடியான சூழ்நிலைகளை புத்தி சாதுர்யத்துடன் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியைக் காண்பீர்கள்.  உங்கள் எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கிடைக்கும்.

தொழிலில் சிறப்பான வாய்ப்புகள் உண்டாகும்.  அதிர்ஷ்ட வாய்ப்புகளின் மூலம் வருமானம் கூடும். புதிய சேமிப்புத் திட்டங்களிலும் சேர்வீர்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உடன்பிறந்தோருடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். உற்சாகமான பயணங்களையும் செய்ய நேரிடும்.  

வீட்டிலும் வெளியிலும் பெயரும் புகழும் கூடும். நடக்காது என்று நினைத்திருந்த காரியங்கள் விரைவில் நடந்து முடிந்துவிடும். மனதில் இருந்த அழுத்தங்கள் விலகி தெளிவு காண்பீர்கள்.   சிறிய மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடும். தொழிலில் சிறப்பான ஸ்திரத்தன்மை உண்டாகும்.

சிலர் புதிய வீடு, வாகனங்களை வாங்குவார்கள். மழலை பாக்கியத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும்.  உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களிடம் பெருந்தன்மையாக நடந்துகொள்வீர்கள்.  அதே நேரத்தில் செய்நன்றியை மறக்க மாட்டீர்கள். முக்கியமான செயல்களைச் செய்யும்போது, அவைகளை உங்களின் நேர்பார்வையிலேயே செய்யுங்கள்.

உத்தியோகஸ்தர்கள்:  கடின உழைப்பை தாரக மந்திரமாகக் கொண்டு உழைக்கவும்.  சக ஊழியர்களிடம் பழகும்போது,  நல்ல முறையில் பேசிப் பழகவும். மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். வருமானத்துக்கு குறைவு வராது. அலுவலக ரீதியான பயணங்களில் நல்ல அனுகூலத்தைப் பெறுவீர்கள்.

வியாபாரிகள்: கூட்டாளிகள் நட்புடன் பழகுவார்கள். கொடுக்கல்} வாங்கலில் சற்று கவனம் தேவை.  நண்பர்களுடன் பழைய பிணக்குகளை மறந்து நட்புடன் பழகுவீர்கள்.  பொருளாதாரத்தில் தொய்வு ஏற்படாது.  உங்கள் பொருள்களை மற்ற சந்தைகளில் விற்க முயற்சித்து, ஓரளவு வெற்றியும் காண்பீர்கள்.  அரசு வகையில் கஷ்டங்கள் வராது.  புதிய முதலீடுகளை பெரிய அளவில் செய்ய வேண்டாம்.

விவசாயிகள்: குடும்பத்தில் சுப காரியங்களை நடத்துவார்கள். உழைப்புக்கேற்ற பலன்களைப் பெறுவார்கள். பணவரவு சீராக இருந்தாலும், புதிய குத்தகைகளை நாடி செல்ல வேண்டாம். விவசாயத் தொழிலாளர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள்.  அரசு வழியில் இருந்த இடைஞ்சல் விலகி, காரியங்கள் கைகூடும்.

அரசியல்வாதிகள்: வழக்குகள் சாதகமாகவே முடிவடையும்.  கட்சி மேலிடத்துக்குத் தகவல் அனுப்பும்போது, எச்சரிக்கையாகவே இருக்கவும்.  தொண்டர்களின் ஆதரவு நன்றாக இருக்கிறது.

கலைத்துறையினர்: அனுகூலத்திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும் பணமும் ஒருங்கே வந்து சேரும். ரசிகர்களுக்காகத் திட்டங்களை முன்னின்று நிறைவேற்றுவீர்கள். சோம்பலைத் தவிர்த்து, காரியங்களில் சுறு
சுறுப்பைக் கூட்டவும்.

பெண்கள்: கணவருடனான உறவு சீர்படும்.  குடும்பத்தில் சந்தோஷம் காணப்படும். உறவினர்களுடன் உறவு மேம்படும். தெய்வ பலம் கூடும். உடல் ஆரோக்கியம் பேணவும். வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும்.

மாணவர்கள்: கடுமையாக முயற்சித்து, தடைகளை உடைத்தெறிந்து வெற்றி வாகை சூடுவீர்கள். விளையாட்டிலும் வெற்றி பெறுவீர்கள்.  மகிழ்ச்சி உண்டாகும்.

பரிகாரம்: ஸ்ரீவிநாயகரை வழிபடவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com