கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
வழக்கு விஷயங்களில் வெற்றிகரமான திருப்பங்கள் உண்டாகும். கூட்டாளிகள், நண்பர்கள் தேவையான ஆதரவை நல்குவார்கள். உங்கள் மீதான நம்பிக்கையும் பலப்படும். வெளிநாடு தொடர்பான வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள்.
விவாதங்களில் சாதுர்யமான பேச்சினால் உங்கள் எண்ணங்களை சிறப்பாக வலியுறுத்துவீர்கள். பணப் புழக்கமும் அதிகரிக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் பலம், பலவீனம் இரண்டையும் புரிந்துகொண்டு திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். குடும்பத்துக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியம், மனவளம் இரண்டும் நல்ல நிலையிலேயே தொடரும்.
குழந்தைகளின் வளர்ச்சி மனதுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். சொத்து தொடர்பான ஆவணங்களில் இருந்த குறைகளைச் சரிசெய்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்களும் கிடைக்கும். உங்கள் நிர்வாகத் திறமை பளிச்சிடும்.
இல்லத்திலும் சுபகாரிய முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் நீங்கும். அரசு அதிகாரிகளும் உங்களுக்குச் சாதகமாகச் செயல்படுவார்கள். இக்கட்டான தருணங்களில் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையுடன் செயல்படுவீர்கள். அனைத்து செயல்களிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும்.
உத்தியோகஸ்தர்கள்: அலுவலகத்தில் அனுகூலமான சூழலில் இருப்பீர்கள். சக ஊழியர்களும் நட்பு பாராட்டுவார்கள். இடையூறுகளைத் தகர்த்து முயற்சிகளில் சாதனைகளைப் படைப்பீர்கள். உழைப்புக்குத் தக்க ஊதியத்தைப் பெறுவதில் எந்தத் தடையும் இருக்காது. வீண் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டாம். உங்கள் வேலைத் திறன் பளிச்சிடும். விரும்பிய பணியிட மாறுதல்களையும் பெறுவீர்கள்.
வியாபாரிகள்: லாபம் மேம்படும். கூட்டாளிகளை நம்பாமல் தனித்தே ஈடுபடுங்கள். புதிய வியாபாரத்தையும் தொடங்குவீர்கள். கடினமாக உழைக்க வேண்டி இருக்கும்.
விவசாயிகள்: விளைச்சல் அபரிதமாக இருக்கும். இடைத்தரகர்களைத் தவிர்த்து பொருள்களை உயரிய நிலைக்கு விற்பீர்கள். பழைய குத்தகை பாக்கிகள் வசூலாகும். பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். நெருக்கடியான சூழ்நிலைகளில் இருந்து மாற்றம் உண்டாகும்.
அரசியல்வாதிகள்: கட்சி மேலிடத்திலிருந்து பாராட்டுகள் குவியும். உங்கள் பணிகளைத் திட்டமிட்டு வகுத்துக் கொண்டு செயலாற்றுவீர்கள். வழக்கு விவகாரங்களில் கவனத்துடன் ஈடுபடவும். கூடுமானவரை சட்ட சிக்கல்களுக்குச் செல்லவேண்டாம்.
கலைத்துறையினர்: புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். சிறப்பாகவே இருக்கும். பிறருக்கு உதவிகளைச் செய்வீர்கள். முன்னேற்றம் உண்டாகும்.
பெண்கள்: குடும்பத்தில் சிறு பிரச்னைகள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பிறரிடம் நியாயமாக நடந்துகொள்ளவும். விலை உயர்ந்த ஆடைகள், ஆபகரணங்களை வாங்குவீர்கள்.
மாணவர்கள்: படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுடன் தேவைகள் பூர்த்தியாகும். சக மாணவர்கள் ஆதரவை அளிப்பார்கள். வீண் விவாதங்களைத் தவிர்த்துவிடுங்கள். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
பரிகாரம்: ஸ்ரீராமபிரானை வழிபடவும்.