சனியின் தாக்கம் குறைய ராசிப்படி செல்ல வேண்டிய கோயில்கள்!

2023 பெயர்ச்சியாகவிருக்கும் சனிப்பெயர்ச்சியில் 12 ராசிக்காரர்களும் செல்லவேண்டிய கோயில்கள் பற்றி இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. 
சனியின் தாக்கம் குறைய ராசிப்படி செல்ல வேண்டிய கோயில்கள்!
Published on
Updated on
2 min read


2023-ஆம் ஆண்டு நிகழப்போகும் சனிப் பெயர்ச்சி சுபகிருது வருடம், உத்திராயணம் ஹேமந்த ருது, தை மாதம் 3-ஆம் தேதி (17.1.2023) கிருஷ்ண பட்சம் (தேய்பிறை)  தசமி, செவ்வாய்க்கிழமை விசாக நட்சத்திரம், 4}ஆம் பாதம், விருச்சிக  ராசி, கண்ட நாம யோகம், பவ கரணம் கூடிய யோக சுப தினத்தில் கடக லக்னத்தில் விருச்சிக ராசியில்,  சிம்ம நவாம்சத்தில்,  கடக நவாம்ச ராசியில் சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

சனிபகவான் ஒவ்வொரு இடத்திற்கு மாறும் போது ஒவ்வொரு சனியாக சஞ்சரிக்கின்றார். அதாவது.....நான்காம் இடத்தை பார்த்தால் அர்த்த அஷ்டம சனி என்றும், எட்டாம் இடத்தை அஷ்டம சனி என்றும் கூறுவர். சனி பகவானின் சச்சரவுகள் குறைய உங்கள் ராசிப்படி எந்தக் கோயிலுக்குச் செல்லலாம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

மேஷம்

ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோவிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆதிகேசவப் பெருமாளையும், ஸ்ரீராமானுஜரையும் வழிபட்டு வர, சனிப்பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் நன்மைகள் அதிகரிக்கும். மேலும் ஸ்ரீ விநாயகர், குல தெய்வம், ஸ்ரீ பெருமாள் ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

ரிஷபம்

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகாவில் இருக்கும் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டால் மிகுதியான நன்மைகளைப் பெறலாம். மேலும் ஸ்ரீ சிவன், இஷ்ட தெய்வம், ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

மிதுனம்

கோவை மாவட்டம், காரமடை அருகே இருக்கும் இருளர்பதி என்னும் ஊரில் அருள்பாலிக்கும் சுயம்பு பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபட்டால், நல்ல பலன்களைப் பெறலாம். மேலும் ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ மஹாலட்சுமி, ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

கடகம்

திருக்கொள்ளிக்காடு ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் சனீஸ்வர பகவானையும், சிவபெருமானையும், அம்பாளையும் வணங்கி வந்தால் மேலும் சிறப்பான பலன்களைப் பெறலாம். மேலும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

சிம்மம்

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகாவில் இருக்கும் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டால் மிகுதியான நன்மைகளைப் பெறலாம். திருவண்ணாமலை கிரிவலம் சென்று வந்தால் வாழ்க்கை மேன்மையுறும். மேலும் ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ துர்கை ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

கன்னி

வேலூர் மாவட்டம், பெரிய மணலியில் இருக்கும் நாகரத்தினசுவாமி திருக்கோவிலுக்குச்சென்று நாகேஸ்வரசுவாமியை வழிபட்டால், நல்ல பலன்களைப் பெறலாம். மேலும் ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ பைரவர், ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

துலாம்

பெரம்பலூர் மாவட்டம், வெங்கனூரில் அமைந்திருக்கும், அருள்மிகு விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரரை வணங்கி வரலாம். திருக்கொள்ளிக்காடு ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் சனீஸ்வர பகவானையும், சிவபெருமானையும், அம்பாளையும் வணங்கி வந்தால் மேலும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

விருச்சிகம்

திருக்கடையூர் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரரையும், அபிராமியையும் வணங்கி வந்தால், சிறப்பான பலன்களைப் பெறலாம். மேலும் ஸ்ரீ சனீஸ்வர பகவான், ஸ்ரீ பார்வதி ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

தனுசு

தேனி மாவட்டம், சின்னமனு}ர் அருகேயிருக்கும் குச்சனூரில் சுயம்புவாக அருள்பாலிக்கும் சனீஸ்வரரை வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம். மேலும் ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

மகரம்

விழுப்புரம் மாவட்டம் கோலியனு}ரில் இருக்கும் வாலீஸ்வரரை வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம். மேலும் ஸ்ரீ நவக்கிரகம், ஸ்ரீ ஐயப்பன் ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

கும்பம்

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் இருக்கும் ஸ்ரீபூமாதேவி சமேத ஆதிவராகப் பெருமாளை வழிபட்டால், மேலும் சிறப்பான பலன்களைப் பெறலாம். மேலும் ஸ்ரீ சிவன், ஸ்ரீ பார்வதி ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

மீனம்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே இடையாற்று மங்கலத்தில் இருக்கும் லட்சுமி நாராயணனை வணங்கி வந்தால், மேலும் சிறப்பானப் பலன்களைப் பெறலாம். மேலும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com