தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜூன் 30 - ஜூலை 6) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பண நெருக்கடிகளைக் குறைப்பீர்கள். சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் பிறருக்கு உதவிகளைச் செய்வார்கள். வியாபாரிகள் மறைமுகப் போட்டிகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். விவசாயிகளுக்கு கொள்முதலில் கூடுதல் லாபம் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் தொண்டர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பார்கள். கலைத்துறையினருக்கு வருவாய் கூடும். பெண்களுக்கு கணவருடன் அன்பு அதிகரிக்கும். மாணவர்கள் கவனம் சிதறாமல் படிப்பார்கள்.
சந்திராஷ்டமம் - ஜூன் 30, ஜூலை 1, 2.
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சுபகாரியங்களை நடத்த முயற்சிப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களின் செயல்திறனை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். வியாபாரிகள் சாதகமான திருப்பங்களைக் காண்பார்கள். விவசாயிகள் புதிய கால்நடைகளை வாங்குவார்கள்.
அரசியல்வாதிகள் பொறுமை, நாவடக்கத்துடன் கட்சிப் பணியாற்றுவார்கள். கலைத்துறையினர் விருதுகளைப் பெறுவார்கள்.
பெண்கள் உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பார்கள். மாணவர்கள் நண்பர்களிடம் விட்டுக் கொடுத்து பழகுவார்கள்.
சந்திராஷ்டமம் - ஜூலை 3,4.
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
தொழிலில் புதிய வளர்ச்சியை எட்டுவீர்கள். பூர்விகச் சொத்துகளில் வருவாய் வரத் தொடங்கும். வெளிநாட்டிலிருந்து தகவல் வந்து சேரும். இல்லத்தில் மழலைச் செல்வம் உருவாகும்.
உத்தியோகஸ்தர்கள் எடுத்த காரியங்களை குறித்த காலத்துக்குள் முடித்து விடுவார்கள்.
வியாபாரிகளுக்கு வருவாய் கூடும். விவசாயிகள் புதிய குத்தகைகளை நாடிப் பெறுவார்கள். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவார்கள். மாணவர்கள் ஒருமித்த மனத்துடன் படித்து மதிப்பெண்களை அள்ளுவார்கள்.
சந்திராஷ்டமம் - ஜூலை 5,6.
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
நண்பர்களைப் போல் பழகும் எதிரிகளை அறிந்துகொள்வீர்கள். பழைய கடன்களை அடைப்பீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும்.
உத்தியோகஸ்தர்கள் கடினமாக உழைப்பார்கள். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள். விவசாயிகள் புதிய பயிர்களைப் பயிரிடுவார்கள். அரசியல்வாதிகள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவார்கள்.
கலைத்துறையினர் பிறரிடம் இயல்பாகப் பழகுவார்கள். பெண்கள் புதிய ஆடைகளை வாங்குவார்கள். மாணவர்கள் உடற்பயிற்சிகளைத் தவறாது ஈடுபடுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
உடல் ஆரோக்கியத்தில் இருந்த குறைகள் நீங்கும். புதிய மனைகளை வாங்குவார்கள். உறவினர்கள் மனம் திருந்தி இணக்கமாவார்கள். அரசு உதவிகள் சாதகமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் புதிய வேலை முயற்சிகளில் வெற்றி பெறுவார்கள்.
வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். விவசாயிகள் நவதானியங்களைப் பயிரிடுவார்கள். அரசியல்வாதிகள் கடினமான வேலைகளையும் எளிதாகச் செய்வார்கள்.
கலைத்துறையினருக்கு பழைய பாக்கி வசூலாகும். பெண்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். மாணவர்கள் சிறு குழப்பங்களைச் சந்திப்பார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
கலைசார்ந்த பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். ஆர்வத்துடன் தொழிலில் ஈடுபடுவார்கள். பயணங்களால் நன்மை அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்கள் புதிய ஊக்கத்துடன் பணிபுரிவார்கள். வியாபாரிகள் திட நம்பிக்கையுடன் செயல்படுத்த முனைவீர்கள். விவசாயிகளுக்கு அதிக மானியம் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு முக்கியஸ்தர்கள் அறிமுகம் கிடைக்கும். கலைத்துறையினரின் சமூகப் பணிகளில் ஆதரவான சூழல் ஏற்படும். பெண்கள் விருப்பமான பொருள்களை வாங்கி மகிழ்வார்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் சிதறாமல் இருப்பார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)
நிதானமாக முடிவை எடுப்பீர்கள். தொழிலில் போட்டி, பொறாமை எதுவும் இருக்காது. வழிபாடுகளில் நம்பிக்கையுடன் இருப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடப்பார்கள். வியாபாரிகளுக்கு சுமாரான லாபம் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு விவசாயப் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள். அரசியல்வாதிகள் சிறிய வாக்குவாதங்களைச் சந்திப்பார்கள்.
கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பெண்களின் குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். சமுதாயத்தில் உங்கள் பெயர் கூடத் தொடங்கும். கவர்ச்சியான பேச்சால் பிறரைக் கவர்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு தவிர்க்க முடியாத சில செயல்களைச் செய்ய வேண்டி வரும்.
வியாபாரிகள் சம்பந்தமில்லாத பொருள்களை விற்பனை செய்ய வேண்டாம். விவசாயிகள் கவனத்துடன் இருக்கவும். அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினருடன் போட்டிகளைச் சந்திக்க நேரிடும்.
கலைத்துறையினர் உழைப்புக்கு வருவாய் கிடைக்கும். பெண்களின் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மாணவர்கள் விரோதப் போக்கைத் தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
பெற்றோரை அனுசரித்து நடப்பீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். செல்வாக்கு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும்.
வியாபாரிகளுக்கு கடன் பிரச்னைகள் குறையும். விவசாயிகள் சாதுர்யமான பேச்சால் இழுபறிகளை முடித்துகொள்வார்கள்.
அரசியல்வாதிகளுக்கு புதிய அனுபவம் கிடைக்கும். கலைத்துறையினர் சோதனைகளைக் கடந்து சாதனைகளைப் படைக்கத் துடிப்பீர்கள். பெண்கள் கணவருடன் இணக்கமாக நடந்துகொள்வார்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் செலுத்தி வெற்றியடைவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
மனதில் துணிச்சலும் தைரியமும் கூடும். நெருக்கடிகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் உண்டாகாது. உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். விவசாயிகளும் சிறிது செலவழிக்க நேரிடும். அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் மிகுந்த கவனத்துடன் இருக்கவும்.
கலைத்துறையினர் மகிழ்ச்சி தரும் பயணங்களைச் செய்ய நேரிடும். பெண்கள் பெரியோர்களிடம் ஆசி பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் நாட்டம் அதிகரிக்கக் காண்பார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள். பங்குச் சந்தைகளின் மூலம் வருவாய் கிடைக்கும். சேமிப்பைக் கூட்டுவீர்கள். செல்வாக்கு உள்ளவர்களின் தொடர்பால் முன்னேற்றம் காண்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் இருந்த சிரமங்கள் குறையும். வியாபாரிகள் கடன்களை அடைப்பீர்கள். விவசாயிகள் கொள்முதலில் லாபம் பெறுவார்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள்.
கலைத்துறையினருக்கு வருவாய் கூடும். பெண்கள் கணவரால் மகிழ்ச்சி அடைவார்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் கவனம் செலுத்துவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
தொழிலை புதிய உயரத்துக்கு இட்டுச் செல்வீர்கள். குடும்பத்தில் அந்தஸ்து கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் கனிவுடன் நடப்பார்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் கவனத்துடன் இறங்குவார்கள்.
விவசாயிகளுக்கு புதிய குத்தகை தேடி வரும். அரசியல்வாதிகள் அநாவசிய சிந்தனைகளைக் குறைத்துக் கொண்டு திறமையைக் காட்டுவார்கள்.
கலைத்துறையினர் தங்களின் திறமையை வெளிப்படுத்துவார்கள். பெண்கள் உறவினர்களிடம் ஜாக்கிரதையாகப் பழகுவார்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.