

சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா மே-4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ஆறாம் நாளான நேற்று காலை முதல் சூர்ணாபிஷேகம், ஆனந்த விமானப் புறப்பாடும், இரவு யானை வாகன புறப்பாடும் நடைபெற்றது.
பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவான இன்று திருத்தேர் விழா நடைபெற்றது. காலை 7 மணிக்கு பெருமான் தேரில் எழுந்தருளப் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.