இந்த வாரம் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: வாரப் பலன்கள்!

இந்த வாரம் எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலன்கள்....வாங்க தெரிஞ்சிக்கலாம்.
monthly predictions
monthly predictions

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஏப்ரல் 12 - 18) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

உடல் ஆரோக்கியமும் மன வளமும் சீராக இருக்கும். கவலைகளை மறப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளை நடத்த முயற்சிப்பீர்கள். இனிமையாகப் பேசுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் நஷ்டத்தைச் சமாளிப்பீர்கள். விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் கட்சித் தலைமையிடம் நற்பெயரைப் பெறுவீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.

பெண்களுக்கு கணவருடனான அந்நியோன்யம் அதிகரிக்கும். மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

மறைமுகத் தடைகளைப் புரிந்துகொள்வீர்கள். எதிர்மறை விமர்சனங்கள் குறையும். தற்பெருமை பேச்சுகளைக் குறைத்துக்கொள்வீர்கள். முயற்சிகளை நேராகச் சிந்திப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் தங்களது கடமைகளைச் சரியாக ஆற்றுவீர்கள். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் நன்மை உண்டாகும்.

அரசியல்வாதிகள் யோசித்துச் செயல்படவும். கலைத் துறையினருக்கு வருவாய் கிடைக்கும்.

பெண்கள் ரகசியங்களைக் காப்பீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் அமைதி நிறையும். உடன்பிறந்தோரிடமிருந்து உதவிகள் கிடைக்கும். சொத்துகளில் இருந்து வருவாய் வரத் தொடங்கும். தொடர் பயணங்களைச் செய்ய வேண்டிவரும்.

உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் மாற்றுக்கட்சியினரிடம் வம்பு பேச மாட்டீர்கள். கலைத் துறையினருக்கு ஆற்றல் அதிகரிக்கும்.

பெண்கள் கணவரிடம் அன்புடன் நடப்பீர்கள். மாணவர்கள் பாடங்களை ஈடுபாட்டுடன் படிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

தன்னம்பிக்கை பிறக்கும். வழக்குகளில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உடனிருப்போர் உங்களைப் புரிந்துகொள்வார்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவைச் சுலபமாகப் பெறுவீர்கள். வியாபாரிகள் கூட்டு வியாபாரத்தில் ஈடுபட வேண்டாம். விவசாயிகளுக்கு திட்டமிட்ட பணிகள் தாமதமாகவே நடக்கும்.

அரசியல்வாதிகள் நிதானத்துடன் நடப்பீர்கள். கலைத் துறையினர் புதிய முயற்சிகளில் கவனம் செலுத்துவீர்கள். பெண்கள் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

பிறருடன் ஒற்றுமையாக இருப்பீர்கள். பொருளாதாரம் சிறப்பாகவே இருக்கும். அரசு விஷயங்கள் சாதகமாகவே முடிவடையும். மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளை முறைப்படி செய்வீர்கள். வியாபாரிகளுக்கு வாராக் கடன் வசூலாகும். விவசாயிகள் உபகரணங்களை வாங்குவதில் கூடுதலாகச் செலவு செய்வீர்கள்.

அரசியல்வாதிகள் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவார்கள். கலைத் துறையினருக்கு வருவாய் சீராக இருக்கும். பெண்களுக்கு கணவருடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். மாணவர்கள் நன்கு படிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

நினைத்த காரியங்கள் நடந்தேறும். வருமானம் படிப்படியாக உயரும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் வியாபாரத்தில் நேரடியாக ஈடுபடுவீர்கள். விவசாயிகள் விளைச்சலில் உயர்வைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகளின் கௌரவம் கட்சியில் உயரும். கலைத் துறையினர் திறமையுடன் செயல்படுவீர்கள். பெண்கள் குடும்பத்தில் பொருளாதார நிலை உயரக் காண்பீர்கள். மாணவர்கள் யோகா கற்று கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

எதிர்கால முன்னேற்றத்துக்காக, சில முயற்சிகளைச் செய்வீர்கள். சேமிப்புகளைப் பெருக்குவீர்கள். தொழிலில் புதிய யுக்திகளைக் கற்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் உழைப்புக்கேற்ற பலனைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கூட்டுத் தொழிலைத் தவிர்க்கவும். வியாபாரிகளின் மகசூல் திருப்தியாகவே இருக்கும்.

அரசியல்வாதிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகளால் வருமானம் பெருகும். பெண்களுக்கு கணவர் வழி குடும்பத்தினரால் நற்பெயர் கிடைக்கும். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஏப். 12, 13.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பொருளாதாரம் ஏற்றமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். போட்டியாளர்களின் பலம் குறையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் அன்பு மேலோங்கும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். விவசாயிகள் கால்நடைகளால் லாபம் அடைவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் பாராட்டுகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு பிறர் உதவுவார்கள். பெண்கள் நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். மாணவர்கள் உற்சாகமாய் இருப்பார்கள்.

சந்திராஷ்டமம் - ஏப். 14, 15.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சவாலான பணிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். அரசு விஷயங்களில் பொறுமை தேவை.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவையும் பாராட்டையும் பெறுவீர்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள். விவசாயிகள் மிகுந்த பலனைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் அமைதியாகத் தொண்டாற்றுவார்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வீர்கள். பெண்கள் குடும்பத்தாருடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

சந்திராஷ்டமம் - ஏப். 16,17.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். திட்டமிட்ட வேலைகள் நல்லபடியாக முடிவடைந்துவிடும். மருத்துவச் செலவுகள் ஏற்படாது.

உத்தியோகஸ்தர்கள் பிறரின் வேலைகளைப் பகிர்ந்துகொள்வீர்கள். வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடிச் செல்வீர்கள். விவசாயிகள் புதிய உபகரணங்களை விளைச்சலைப் பெருக்குவீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு உதவி செய்வீர்கள். கலைத்துறையினர் காரியங்களைச் சாதிப்பீர்கள். பெண்கள் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஏப். 18.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

திட்டமிட்ட பணிகளைச் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். வெகுநாளைய எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்திலும் மகிழ்ச்சி நிறையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பணிப் பளு அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம் விறுவிறுப்பாகவே நடக்கும். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுக்க வேண்டாம்.

அரசியல்வாதிகள் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் ஆன்மிகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் பெற்றோர் ஆலோசனையைக் கேட்டு நடப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

தொழிலில் பிரச்னைகள் குறையும். குடும்பத்தில் மதிப்பு உயரும். தந்தை வழியில் ஆதரவு மேம்படும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் மந்த நிலை அகலும். விவசாயிகள் நிலப் பிரச்னைகளில் கவனம் தேவை.

அரசியல்வாதிகளை மேலிடம் பாராட்டும். கலைத் துறையினர் பிறர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பெண்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவும். மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடும்போது பொறுமையாக இருக்கவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.