
வில்லியனூர் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற ஆடிப்பூர தேரோட்டத்தில் அமைச்சர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற வில்லியனூர் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோியிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தது.
இந்நிலையில் ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமிகள் வைக்கப்பட்டு, திருத்தேரோட்டம் நடந்தது.
இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான சிவா ஆகியோர் வடம்பிடித்து இழுத்துத் தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். நான்கு மாட வீதிகளின் வழியாகச் சென்ற தேர் மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.