வரம் தரும் வாரம்!

இந்த வாரம் 12 ராசிக்கும் என்னென்ன பலன்கள் என்று தெரிந்துகொள்ளலாம்...
வார பலன்கள்
வார பலன்கள்

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஆகஸ்ட் 2 - 8) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

1. மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

தொழிலில் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தோர் பாசத்துடன் இருப்பார்கள். பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் வசூலாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரிகள் கடையை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் மாற்றுப்பயிர்களைப் பயிரிடுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கலைத் துறையினர் உயர்ந்தோரின் அறிமுகத்தைப் பெறுவீர்கள். பெண்கள் குழந்தைகளின் தனித்திறன்களைக் கண்டறிவீர்கள். மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

2. ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். எடுத்த காரியங்களை முடிப்பீர்கள். மகிழ்ச்சியான காரியம் நடந்தேறும். பணப்புழக்கம் இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளுடன் அனுசரித்து நடப்பீர்கள். வியாபாரிகளின் முயற்சிகள் சாதகமாக முடியும். விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் விளைச்சல் பெருகும்.

அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். கலைத் துறையினருக்கு சமூகத்தில் பெயரும் புகழும் கூடும். பெண்கள் ஆன்மிக சுற்றுலா சென்றுவருவீர்கள். மாணவர்களின் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

3. மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

கடின உழைப்பும், விடாமுயற்சியும் கைகொடுக்கும். பொருளாதாரம் சிறக்கும். பூர்விக சொத்துகள் கிடைக்கும். புதிய பாதைகள் தென்படும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பயணம் செய்ய நேரிடும். வியாபாரிகளுக்கு கொடுக்கல்} வாங்கலில் முன்னேற்றம் உண்டாகும். விவசாயிகளுக்கு மகசூல் குறைவாகவே இருக்கும்.

அரசியல்வாதிகள் கவனமாக இருக்கவும். கலைத் துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களின் நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேறும். மாணவர்கள் பாடங்களில் கூடுதல் கவனத்தைச் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

4. கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

தொழிலில் வளர்ச்சியைக் காண்பீர்கள். பொறுமையுடன் செயல்படுவீர்கள். மதிப்பும் மரியாதையும் உயரும். கடன்களைத் திரும்பச் செலுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். வியாபாரிகள் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளைத் திறமையாகக் கையாள்வீர்கள். கலைத் துறையினர் யோசித்துச் செயல்படுவீர்கள். பெண்கள் குழந்தைகள் விஷயத்தில் கூடுதல் கவனத்தோடு இருப்பீர்கள். மாணவர்கள் பிறரிடம் இணக்கமாகப் பழகுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

5. சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

திட்டமிட்ட செயல்கள் வெற்றி பெறும். மனம் ஒருமித்து செயல்படும். சேமிப்புகளை ஆதாயம் பெறும் வகையில் முதலீடு செய்வீர்கள். ஆன்மிக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரிகள் திறமையுடன் செயல்படுவீர்கள். விவசாயிகளுக்கு நிலுவைப் பணம் வசூலாகும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களை அனுசரித்துச் செல்லவும். கலைத் துறையினரின் புதிய ஒப்பந்தங்கள் தாமதமாகும். பெண்கள் உடன்பிறந்தோரை அனுசரித்துச் செல்வீர்கள். மாணவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - ஆகஸ்ட் 23.

6. கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

தன்னம்பிக்கை உயரும். திறமைகள் பளிச்சிடும். உங்களது பேச்சை மதிப்பார்கள். சமுதாயப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றத்துக்குத் தடையாக இருப்பவர்களை விலக்கி விடுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் இணக்கமாக இருப்பீர்கள். விவசாயிகளின் கடன்கள் தீரும்.

அரசியல்வாதிகள் நற்பெயரை எடுப்பீர்கள். கலைத் துறையினரின் முயற்சிகள் நல்ல பலன்களைத் தரும். பெண்களுக்குச் சுபச் செலவுகள் ஏற்படும். மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்று பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஆகஸ்ட் 24, 25.

7. துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

தத்துவ ஞானம் பெருகும். ஆத்ம விசாரணை நிலையை உயர்த்தும். மன வலிமை அதிகரிக்கும். உங்கள் திட்டங்களில் தடை ஏற்பட்டாலும் வெற்றியடையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பிறர் உதவுவார்கள். வியாபாரிகளுக்கு எதிரிகளால் தொல்லை உண்டாகும். விவசாயிகள் கையிருப்புப் பொருள்களில் கவனம் செலுத்தவும்.

அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். கலைத் துறையினர் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். பெண்கள் எச்சரிக்கையாக இருக்கவும். மாணவர்கள் ஆத்ம பலத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - ஆக. 26,27.

8. விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

உறவினர்களிடம் அன்பு அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். மனச்சஞ்சலங்கள் தோன்றி மறையும். போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரிகளை கூட்டாளிகள் நல்ல முறையில் ஆதரிப்பார்கள். விவசாயிகள் நீராதாரங்களைப் பெருக்குவீர்கள்.

அரசியல்வாதிகள் கவனமாக இருக்கவும். கலைத் துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெண்களால் குடும்பத்தின் ஆரோக்கியம் மேம்படும். மாணவர்கள் விளையாட்டுகளில் ஈடுபட்டு உற்சாகம் அடைவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஆகஸ்ட் 28, 29.

9. தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

செயல்களில் புனிதத் தன்மை வெளிப்படும். பிறர் மதிப்பளித்து நடப்பார்கள். புகழ்ச்சிகளைக் கண்டுகொள்ள மாட்டீர்கள். வருமானம் உயரத் தொடங்கும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் கருத்துவேறுபாடுகளை நீக்கிக் கொள்வீர்கள்.வியாபாரிகளுக்கு கொடுக்கல்} வாங்கல் சிறக்கும். விவசாயிகளுக்கு கடன்கள் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். கலைத் துறையினருக்கு நன்மைகள் கிடைக்கும். பெண்கள் கவனமாக இருக்கவும். மாணவர்கள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

10. மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

முயற்சிகள் பல மடங்கு லாபத்தைக் கொண்டுவரும். பழைய நண்பர்கள் நட்பைப் புதுப்பித்து கொள்வார்கள். ஆன்மிக பலம் கூடும். பயணங்களால் நன்மை அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் புதிய பொருள்களை வாங்குவீர்கள். விவசாயிகள் கால்நடைகளைச் சரியாகப் பராமரிப்பீர்கள்.

அரசியல்வாதிகளின் சங்கடங்கள் குறையும். கலைத் துறையினருக்கு விருதுகள் தேடி வரும். பெண்களுக்கு குடும்பத்தில் மரியாதை அதிகரிக்கும். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

11. கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பணவரவு நன்றாக இருக்கும். சுபச் செலவுகள் உண்டாகும். யாருக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டாம். குறைகூறுவோரை பெரிதுபடுத்த வேண்டாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபாரிகள் தேவைக்கேற்ற சரக்குகளை வாங்கி விற்கவும். விவாயிகளுக்கு நீர்ப்பாசன வசதி பெருகும்.

அரசியல்வாதிகளுக்கு பயணங்கள் கைகூடும். கலைத் துறையினருக்கு சுகபோக வாழ்க்கை அமையும். பெண்கள் புதிய ஆடைகள், அணிகலன்களை வாங்கும்போது கவனம் தேவை. மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

12. மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொருளாதாரம் சிறக்கும். தாறுமாறாக இருந்த முதலீடுகளை முறைப்படுத்துவீர்கள். கல்வியில் சிறந்துவிளங்குவீர்கள். உயர்ந்தோரின் நட்பும் ஆதரவும் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு உண்டு. வியாபாரிகள் கடன்களை அடைப்பீர்கள். விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு மேலிட ஆதரவு கைகூடும். கலைத் துறையினர் பொறுப்புடன் பணிகளை முடிப்பீர்கள். பெண்கள் குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.