ஆங்கிலப் புத்தாண்டுக்கான பொதுப்பலன்கள் - 2025

2025-ஆண்டில் பொதுவாக நிகழக்கூடியவை பற்றி..
பொதுப்பலன்கள்
பொதுப்பலன்கள்
Published on
Updated on
2 min read

எண்ணியது இனிதாய் நடக்கப்போகும் 2025 ஆங்கிலப் புத்தாண்டுக்கான பொதுப் பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார். 

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீப்லவ வருஷம் - தக்ஷிணாயம் - ஹேமந்த ரிது - மார்கழி மாதம் 16ம் நாள் பின்னிரவு 17-ம் நாள் முன்னிரவு அன்றைய தினம் தினசுத்தி அறிவது சுக்லபக்ஷ ப்ரதமை - செவ்வாய்க்கிழமை பின்னிரவு புதன்கிழமை முன்னிரவு - பூராடம் நக்ஷத்ரம் - சித்தயோகம் - கன்னியா லக்னம் - தனுர் சந்திரா லக்னம் - ரிஷப நவாம்சம் - விருச்சிக சந்திர நவாம்சமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நள்ளிரவு 12.00 மணிக்கு 2025ம் ஆண்டு பிறக்கிறது.

ராசிநிலை - பாதசார விபரம்:

லக்னம் - ஹஸ்தம் 2ம் பாதம் - சந்திரன் சாரம்

சூரியன் - பூராடம் 1ம் பாதம் - சுக்கிரன் சாரம்

சந்திரன் - பூராடம் 4ம் பாதம் - சுக்கிரன் சாரம்

செவ்வாய்(வ) - பூசம் 1ம் பாதம் - சனி சாரம்

புதன் - கேட்டை 4ம் பாதம் - புதன் சாரம்

குரு(வ) - ரோகிணி 3ம் பாதம் - சந்திரன் சாரம்

சுக்கிரன் - அவிட்டம் 4ம் பாதம் - செவ்வாய் சாரம்

சனி - சதயம் 2ம் பாதம் - ராகு சாரம்

ராகு - உத்திரட்டாதி 1ம் பாதம் - சனி சாரம்

கேது - உத்திரம் 3ம் பாதம் - சூரியன் சாரம்

செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற எண் 2025

இந்த வருடத்தின் கூட்டு எண்: 2 + 0 + 2 + 5 = 9. ஒன்பது என்பது செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற எண். முருகனுக்கும் மஹாவிஷ்ணுவிற்கும் உகந்த எண் ஒன்பதாகும். ஆண்டுப் பிறக்கும் நேரத்தில் லக்னாதிபதி புதன் தைர்ய ஸ்தானத்தில் சுய சாரம் பெற்று அமர்ந்திருக்கிறார். லக்னாதிபதியை குரு பார்க்கிறார். குருவின் சஞ்சாரத்தால் கன்னியர்களுக்கு தகுந்த மணமாகும்.

பொதுப்பலன்கள்

மாலை வாய்ப்புகளும் - மழலை பாக்கியமும் - வேலைவாய்ப்புகளும் வியக்கும் விதத்தில் இருக்கும். பத்திரிகைத்துறை - எழுத்துதுறை - ஆசிரியர் துறை - கணிதம் - ரசாயணம் - ஆன்மிகம் - ஜோதிடம் - வழக்குரைஞர் துறை - புத்தகத்துறை போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சுக்ரன் தனது சஞ்சாரத்தை யோக ஸ்தானத்தில் இருப்பதால் கலைத்துறை செழிக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் கலைஞர்கள் கௌரவப்படுத்தப்படுவார். வண்ணத்திரை சின்னதிரை இரண்டுமே மக்களுக்குப் பயனளிக்கும். உணவிற்கு எந்த விதமான பங்கமும் இராது.

உணவு உற்பத்தியாளர்களுக்குத் தகுந்த விலை நிர்ணயமாகும். மக்களுக்குப் பொருளாதார நிலை உயரும். பெட்ரோல் - டீசல் - கச்சா எண்ணை - சமையல் எண்ணை விலை அதிகமாக உயரும். புத்தாண்டு பிறக்கும் போது உள்ள புதனின் இருப்பால் இந்திய ரூபாயின் மதிப்பில் சலனம் இருக்கும். தங்கம் - வெள்ளி விலையும் உயரும்.

நிறையச் சிவாலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். அரசாங்கத்தில் சிறு சிறு ஊசல்கள் இருக்கும். மழைப்பொழிவு நன்றாக இருக்கும். சராசரி வெயில் அளவை இந்த வருடம் வெப்பம் அதிகரிக்கும். அண்டார்டிகா - அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகள் - சுமத்ரா தீவு - ஜப்பான் போன்ற இடங்களில் பூகம்பம் வர வாய்ப்புள்ளது.

யாராலும் சரியான முறையில் வானிலையைக் கணித்துக் கூற முடியாத நிலை ஏற்படலாம். அணு ஆயுதத்தால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். தண்ணீர் தேவை அதிகமாகும். காடுகளை அழிப்பது அதிகமாகும். கடவுளுக்கு எதிராக பேசும் நபர்கள் அதிகமாவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com