திருச்செந்தூர் கோயில் மூலவர் முருகப்பெருமானுக்கு நாளை முதல் தாராபிஷேகம்

கடும் வெப்பத்தை தணிக்கும் வகையில் திருச்செந்தூர் மூலவர் முருகப்பெருமானுக்கு நாளை முதல் தாராபிஷேகம் நடைபெற உள்ளது.
திருச்செந்தூர் கோயில் மூலவர் முருகப்பெருமானுக்கு நாளை முதல் தாராபிஷேகம்
Published on
Updated on
1 min read

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பட்டு, தொடர்ந்து காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், காலை 10.30 மணி மற்றும் இரவு 7.15 மணி என 3 வேளைகளில் சுவாமிக்கு அபிஷேகம் நடந்து வருகிறது.

இந்த அபிஷேகங்களில் பக்தர்கள் பணம் செலுத்தி சிறப்பு தரிசனத்திலும், இலவசமாக பொது தரிசனப் பாதையிலும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருச்செந்தூர் கோயில் மூலவர் முருகப்பெருமானுக்கு நாளை முதல் தாராபிஷேகம்
திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம்

நாளை முதல் தாராபிஷேகம்:

இது குறித்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கருவறையில் மூலவருக்கு ஏற்படும் கடும் வெப்பத்தை தணிக்கும் பொருட்டு தாராபிஷேகம் எனும் பூஜை செய்யப்படும்.

இந்நிலையில் தாராபிஷேகம் கடந்த 2018 ஆம் ஆண்டிலே நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது நாளை முதல் (பிப். 28) உபயதாரர்களால் சுமார் 100 லிட்டர் பால் கொண்டு தினசரி காலை தாராபிஷேகம் நடைபெறும் என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com