இந்த வாரம் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: வாரப் பலன்கள்

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜன.26 - பிப்.1) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
வாரப் பலன்கள்
வாரப் பலன்கள்

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜன.26 - பிப்.1) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பேச்சினால் சாதனை புரிவீர்கள்.  இல்லத்தில் சுபகாரியங்கள் நடக்கும்.  புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.  குடும்ப உறுப்பினர்களால் குதூகலம் நிறையும்.  உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் ஒதுங்கியிருப்பது நல்லது.

வியாபாரிகள் சரியாகத் திட்டமிட்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் புதிய கால்நடைகளை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் கடினமாக உழைப்பீர்கள்.  கலைத்துறையினர் ஆலோசித்து செயல்படவும். பெண்கள் குழந்தைகளால் பெருமையடைவீர்கள். மாணவர்கள் உடற்பயிற்சிகளைச் செய்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

உங்களுக்குக் கீழ்பணிபுரிவோர் இணக்கமாகப் பழகுவார்கள். செல்வாக்கு உயரும்.  முயற்சிகளை வெளிப்படுத்துவீர்கள்.  உற்சாக மனநிலையில் இருப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கவனத்தைக் கவருவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளின் பேச்சை கேட்பீர்கள். விவசாயிகள் கையிருப்புப் பொருள்களின் மீது கவனம் செலுத்துவீர்கள்.  

அரசியல்வாதிகள் தொண்டர்களுடன் இணக்கமாவீர்கள். கலைத் துறையினருக்கு நல்ல பலன் உண்டு. பெண்களுக்கு குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும்.  மாணவர்களின் சிந்தனை அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

திறமையும் ஆற்றலும் அதிகரிக்கும். நிதானத்துடன் நடப்பீர்கள். புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் நம்பிக்கைக்குப் பாத்திரமாவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் } வாங்கலில் லாபம் காண்பீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் வரத் தொடங்கும்.

அரசியல்வாதிகளின் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். கலைத் துறையினர் நல்ல முறையில் செயல்படுவீர்கள்.

பெண்கள் புதிய ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்கள் கல்வியில் மேம்பாடு அடைவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

காரியங்களின் தன்மைக்கேற்ப செயல்படுவீர்கள்.  உங்கள் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும்.  உடனிருப்போரின் விருப்பங்களைப் பூர்த்தி 
செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் இலக்குகளை நிர்ணயித்து பணியாற்றுவீர்கள்.  வியாபாரிகளுக்கு கடன் வசூலாகும். விவசாயிகளின் பிரச்னைகள் குறையும். அரசியல்வாதிகள்  கவனமாக இருக்கவும்.  

கலைத் துறையினர் ஒப்பந்தங்களை விரைந்து முடிப்பீர்கள். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்கள் படிப்புக்காகப் புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. கொடுத்த வாக்கை 
நிறைவேற்றுவீர்கள்.  மனதிலும் உடலிலும் உற்சாகம் உருவாகும். 

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு உண்டு. வியாபாரிகளுக்கு வெளியூர் வியாபாரம் ஆக்கம் தரும். விவசாயிகளுக்கு பாசன வசதிகளை மேம்படுத்துவீர்கள்.  

அரசியல்வாதிகள் உள்கட்சி விவகாரத்தில் தலையிடாதீர்கள். கலைத் துறை
யினர் மௌனமாக இருந்து காரியமாற்றவும். பெண்களுக்கு பலம், பலவீனத்தை அறியும் வாய்ப்பு உருவாகும். மாணவர்கள் மேற்படிப்பு விஷயங்களை எவரிடமும் பகிர வேண்டாம்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பொருளாதாரம் சிறக்கும்.  தர்ம காரியங்களுக்குச் செலவழிப்பீர்கள்.  உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள். பொதுக் காரியங்களில் 
ஈடுபடுத்திக் கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களை மேலதிகாரிகள் புகழ்வார்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களுடன் நல்லுறவை மேம்படுத்துவார்கள்.  விவசாயிகள் புதிய நிலங்களைக் குத்தகை எடுப்பார்கள். கலைத் துறையினர் கலைப் பயணங்களை மேற்கொள்வார்கள். 

பெண்கள் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளை சமாளிப்பார்கள். மாணவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். 

சந்திராஷ்டமம் - ல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். பொருளாதார வளம் பெருகும்.  உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் வேலைகளைத் திறம்பட செய்வார்கள். 

வியாபாரிகள் பொறுமையுடன் வியாபாரம் செய்வீர்கள். விவசாயிகள் புது உபகரணங்களை வாங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்குப் புதிய பதவிகள் கிடைக்கும்.

கலைத் துறையினருக்கு மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு கணவர் வழி உறவினர்களோடு உறவு மேம்படும். மாணவர்கள் தடைகளைக் கடந்து படிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  புத்திசாலித்தனம் வெளிப்படும். பெற்றோர் வழியில் ஆதரவு மேம்படும். மனதில் புதிய தெளிவு உருவாகும்.

உத்தியோகஸ்தர்கள் பிறரை அரவணைத்துச் செல்வீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் - வாங்கலில் உயர்வைக் காண்பீர்கள். விவசாயிகள் பாசன வசதிகளில் கவனம் செலுத்துவீர்கள்.

அரசியல்வாதிகள் தீவிர கட்சிப் பணியாற்றுவீர்கள்.  கலைத் துறையினர் ரசிகர்களுக்குச் செலவழிப்பீர்கள். பெண்கள் புதிய ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.  விலகியிருந்த உறவினர்கள் திரும்பி வருவார்கள்.  தொழிலில் மாற்றங்கள் உண்டாகும்.  

உத்தியோகஸ்தர்கள் தங்களது வேலைகளை முன்யோசனையோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் கடைகளைச் சீரமைப்பீர்கள். விவசாயிகளுக்கு சுமுக நிலை உருவாகும்.

அரசியல்வாதிகளுக்கு புகழ் உருவாகும். கலைத் துறையினர் தங்களது முயற்சிகளைத் தீவிரப்படுத்துவீர்கள். பெண்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.

மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜன. 26,27.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

மனதில் தெளிவு பிறக்கும்.  புதிய நட்பு கிடைக்கும். அரசு உதவிகள் சாதகமாக அமையும். பொதுச் சேவையாளர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் பிறரிடம் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் இணக்கமாக இருப்பீர்கள். விவசாயிகள் சிறுதானியங்களைப் பயிரிடுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு மரியாதை உயரும். கலைத் துறையினர் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். பெண்கள் உடன்பிறந்தோரை அனுசரித்து நடப்பீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜன. 28,29.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பொருளாதாரம் சீராக இருக்கும்.  சேமிப்பு உயரும். வழக்குகளில் 
நிம்மதி உண்டாகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள்  பிறரிடம் பாராமுகத்தைக் கையாளுவீர்கள். வியாபாரிகள் சிறிய முதலீடுகளைச் செய்வீர்கள். விவசாயிகள் தானிய விற்பனையில் லாபம் பெறுவீர்கள்.  

அரசியல்வாதிகள் பிற கட்சியினரை அனுசரித்து நடப்பீர்கள்.  கலைத் துறையினரின் செயல்கள் மக்களைக் கவரும். பெண்கள் குடும்ப உறுப்பினர்களிடம் நன் மதிப்பைப் பெறுவீர்கள்.

மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜன. 30,31,1

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

திட்டங்கள் சரியான இலக்குகளை எட்டும். எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். கடன்களை திரும்ப அடைப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் தங்களது வேலைகளைத் திறமையாக முடிப்பீர்கள். வியாபாரிகள் பொறுப்புடன் வியாபாரம் செய்வீர்கள். விவசாயிகள் விவசாய உபகரணங்களுக்குச் செலவு செய்ய நேரிடும்.

அரசியல்வாதிகள் புதிய பதவிகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினர்  மகிழ்ச்சியால் திளைப்பீர்கள். பெண்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள். மாணவர்கள் தடைகளைத் தாண்டி விடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com