இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

இந்த வாரம் எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலன்கள்....வாங்க தெரிஞ்சிக்கலாம்.
இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (மே 3 - 9) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

தொழிலில் முற்றுப் பெறாமல் இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். உடல் உபாதைகள் தீரும். மனக் குழப்பங்கள் நீங்கும். முகத்தில் பொலிவும் நடையில் மிடுக்கும் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் புதிய வேலைகளைக் கற்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல்} வாங்கல் சிறக்கும். விவசாயிகள் தரமான விதைகளை வாங்கிப் பயிரிடுவீர்கள்.

அரசியல்வாதிகளின் புகழ் உயரும். கலைத் துறையினர் தங்களது கடமைகளில் முழு ஈடுபாடு காட்டுவீர்கள்.

பெண்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

சிந்தனைகளைச் செயலாக்கி வெற்றி பெறுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். இல்லத்துக்குத் தேவையான பொருள்களை வாங்குவீர்கள். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகள் விற்பனையில் புதிய முறைகளைச் செயல்படுத்துவீர்கள். விவசாயிகள் பிறருக்கு உதவுவீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்துடன் இணக்கமாகப் பழகுவீர்கள். கலைத் துறையினருக்கு பண வரவு உண்டு.

பெண்கள் பெற்றோருக்கு உதவுவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் சொல் கேட்டு நடப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் உயர்வைக் காண்பீர்கள். தெளிவாகச் சிந்திப்பீர்கள். வழக்கு விவகாரம் சாதகமாகும். போட்டிகளை எதிர்கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். வியாபாரிகள் புதிய இலக்கை எட்டுவீர்கள். விவசாயிகளுக்கு புழு பூச்சி தொல்லைகள் எதுவும் ஏற்படாது.

அரசியல்வாதிகள் எவரிடமும் விரோதம் பாராட்டாமல் அனுசரித்து நடப்பீர்கள். கலைத் துறையினர் புதிய கலைகளைக் கற்பீர்கள். பெண்கள் புதிய நண்பர்களைப் பெறுவீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறுவீர்கள். தீயவர்களின் நட்பை விலக்குவீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். செயலில் உறுதியும் தன்னம்பிக்கையும் கூடும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் நண்பர்களுடன் சேர்ந்து முடிவெடுப்பீர்கள். விவசாயிகள் புதிய கால்நடைகளை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு அனுபவம் கைகொடுக்கும். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களை எடுப்

பீர்கள். பெண்களுக்கு கவலைகள் நீங்கும். மாணவர்கள் படிப்பில் முழுமையாக ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - மே 3, 4

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

தொழில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். பெரியோரின் ஆசிகளைப் பெறுவீர்கள். முடங்கிய காரியங்களைச் செயல்படுத்துவீர்கள். பிறருக்கு உதவுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் குறித்த வேலைகளை முடிப்பீர்கள். வியாபாரிகள் போட்டியாளர்களிடம் கவனம் தேவை. விவசாயிகளின் முயற்சிக்கேற்ப லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் புதிய யுக்திகளை செயல்படுத்துவீர்கள். கலைத் துறையினர் தங்களது வேலைகளை மாற்றிக் கொள்வீர்கள்.

பெண்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். மாணவர்கள் நண்பர்களை அரவணைத்துச் செல்வீர்கள்.

சந்திராஷ்டமம் - மே 5, 6

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

புதிய மன வலிமையைப் பெறுவீர்கள். அந்தஸ்தும் கௌரவமும் உயரும். அரசு சலுகைகள், உதவிகள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக ரீதியான பயணங்களில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரிகள் சிறிய அளவில் முதலீடுகளைச் செய்வீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைகளாலும் பால் வியாபாரத்திலும் நன்மை உண்டாகும்.

அரசியல்வாதிகளிடம் கட்சி மேலிடம் கருணையுடன் நடக்கும். கலைத் துறையினர் மீதான தவறான விமர்சனம் நீங்கும்.

பெண்கள் மனதை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவர்கள் உடற்பயிற்சிகைல மேற்கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - மே 7, 8

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். சுமுகமான உறவை மேற்கொள்வீர்கள். சொத்துகளில் பாகப் பிரிவினை நடக்கும். சுப காரியங்கள் நடந்தேறும்.

உத்தியோகஸ்தர்கள் வேலைநுணுக்கங்களைக் கற்பீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பீர்கள். விவசாயிகள் மானிய விலையில் உரங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். பெண்கள் வருமானம் உயரக் காண்பீர்கள். மாணவர்கள் தங்களது குறைகளைத் திருத்திக் கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - மே 9.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

வருமானம் சீராகும். குடும்பத்தில் மழலை பாக்கியம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். தொழிலில் செயல்முறைகளை மாற்றுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் நற்பெயரை எடுப்பீர்கள். வியாபாரிகளுக்கு போட்டியாளர்களின் தொல்லை ஏற்படாது. விவசாயிகள் வரப்புச் சண்டைகளில் தீர்வைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களிடம் அக்கறை காட்டுவீர்கள். கலைத் துறையினர் புதிய விஷயங்களை மேற்கொள்வீர்கள்.

பெண்கள் குடும்பத்தாருடன் பாசத்துடன் இருப்பீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

தொழிலில் லாபம் வரத் தொடங்கும். எளியோருக்கு உதவுவீர்கள். சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள்.

குழந்தைகளுக்கு எதிர்காலத்துக்கு உதவுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளின் வியாபாரம் மேன்மையடையும். விவசாயிகள் கூடுதல் வருவாயைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகளின் புகழும் கௌரவமும் உயரும். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.

பெண்கள் புதிய ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்கள் பெற்றோருக்கு உதவிக்கரமாக இருப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

வருமானம் நன்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறக்கும். அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். தொழிலில் ஈடுபாட்டைக் காண்பீர்கள். உடன்பிறந்தோரும் ஆதரவாய் இருப்பார்கள்.

உத்தியோகஸ்தர்களின் காரியங்களில் வெற்றி கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல்} வாங்கலில் சிறப்பைக் காண்பீர்கள். விவசாயிகள் பயிர்விளைச்சலில் லாபம் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் சாதுர்யமாகப் பேசுவீர்கள். கலைத் துறையினர் புதிய யுக்திகளைக் கற்பீர்கள்.

பெண்கள் நிம்மதியைக் காண்பீர்கள். மாணவர்கள் பிறரிடம் கவனமாகப் பழகுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

தொழிலில் போட்டிகள் குறையும். நண்பர்களுடன் இருந்த பிரச்னைகள் மறையும். பணப்புழக்கம் படிப்

படியாக உயரும். வெளிநாடுகளுக்குச் சென்றுவருவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் ஓய்வில்லாமல் உழைப்பீர்கள். வியாபாரிகளின் திறமை பளிச்சிடும். விவசாயிகள் கால்நடைகளால் லாபம் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் எதிர்ப்புகளைப் புத்திசாலித்தனமாய் எதிர்கொள்வீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.

பெண்கள் உடன்பிறந்தோருக்கு உதவுவீர்கள். மாணவர்கள் கடின உழைப்பால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

தொழிலில் லாபம் அதிகரிக்கும். கௌரவமாக நடத்தப்படுவீர்கள். இல்லத்துக்கு நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடிச் செல்வீர்கள். விவசாயிகளுக்கு விவசாயப் பணிகள் சிறக்கும்.

அரசியல்வாதிகள் முக்கிய பிரச்னைகளில் தன்னிச்சையாகச் செயல்பட மாட்டீர்கள். கலைத் துறை

யினரின் வருமானம் பெருகும்.

பெண்களுக்கு குடும்பத்தில் சாதகமான நிலை தென்படும். மாணவர்கள் படிப்பில் சிறப்பிடம் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.