தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (நவம்பர் 22 - 28) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
தன்னம்பிக்கை கூடும். பெற்றோரின் உடல் ஆரோக்கியம் சீரடையும். போட்டிகளைச் சமாளிப்பீர்கள். தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய பொருள்களை விற்பனை செய்வீர்கள். விவசாயிகள் தரமான விதைகளை வாங்கி விதைப்பீர்கள்.
அரசியல்வாதிகளின் எண்ணங்கள் ஈடேறும். கலைத் துறையினர் வருமானம் உயரக் காண்பீர்கள். பெண்கள் உடன்பிறந்தோருக்கு உதவுவீர்கள். மாணவர்கள் பெற்றோர், ஆசிரியர்களிடம்
நற்பெயரை எடுப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - நவம்பர் 30, டிசம்பர் 1, 2.
பொருளாதாரம் மேன்மையடையும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். புதிய நண்பர்களைப் பெறுவீர்கள். ஆக்கபூர்வமான முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் தைரியமாகப் பணியாற்றுவீர்கள். வியாபாரிகள் சாதகமான சூழலைக் காண்பீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பீர்கள்.
அரசியல்வாதிகள் கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவீர்கள். கலைத் துறையினர் புதிய நுணுக்கங்களைக் கற்பீர்கள்.
பெண்கள் வெளியூரில் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் நன்கு படிக்கத் தொடங்குவீர்கள்.
சந்திராஷ்டமம் - டிசம்பர் 3, 4.
மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் சுமுகமான பாகப் பிரிவினை நடந்தேறும். கற்பனைச் சக்தி அதிகரிக்கும். தெளிந்த மனதுடன் பணியாற்றுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் வேலைகளைப் பங்கிட்டுக் கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிடுவீர்கள்.
அரசியல்வாதிகள் மேலிடத்தை அனுசரித்து நடக்கவும். கலைத் துறையினர் சேமிப்பு விஷயங்களில் கவனத்துடன் இருப்பீர்கள்.
பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் புதிய விளையாட்டுகளைக் கற்பீர்கள்.
சந்திராஷ்டமம்} டிசம்பர் 5.
தொழில் சிறப்பாக வளர்ச்சி அடையும். திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பொருளாதாரக் குளறுபடிகள் நீங்கி, நிதிநிலை சீரடையும். குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் இறுக்கமான சூழ்நிலைகள் மாறும். வியாபாரிகள் லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் படிப்படியாக நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு உயர்பதவிகள் தேடி வரும். கலைத் துறையினருக்கு ரசிகர்களின் ஆதரவு கூடும். பெண்களுக்கு மனக்குழப்பங்கள்ஏற்பட்டு பின்னர் விலகும். மாணவர்கள் கல்வியில் சாதிப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
உதவிகள் தேடி வரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடந்தேறும். உங்களுக்கு கீழ்பணிபுரிவோர் குறைகளை ஏற்றுக்கொள்வார்கள். உடல் ஆரோக்கியம் சிறக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல யோகம் உண்டாகும். வியாபாரிகள் புதிய பொருள்களை விற்பீர்கள். விவசாயிகள் புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சியில் ஆற்றலுடன் செயல்படுவீர்கள். கலைத் துறையினர் புகழைத் தக்கவைப்பீர்கள். பெண்கள் கணவர் வழி உறவினர்களிடம் நற்பெயரை எடுப்பீர்கள். மாணவர்கள் வெளியூர் சென்று படிக்கும் வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தொழிலில் புதிய இலக்குகளை எட்டுவீர்கள். லாபம் இருமடங்காகும். புகழும் அந்தஸ்தும் கௌரவமும் உயரும். குழந்தைகளின் வளர்ச்சி சிறக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கடன் கிடைக்கும். வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடிச் செல்வீர்கள். விவசாயிகளுக்கு சக விவசாயிகளிடம் மதிப்பும் மரியாதையும் உயரும்.
அரசியல்வாதிகள் மாற்றுக் கட்சியினரை மதிப்பீர்கள். கலைத் துறையினர் கடினமாக உழைப்பீர்கள். பெண்கள் நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். மாணவர்களுக்கு ஆதரவு பெருகும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தன்னம்பிக்கை கூடும். குடும்பத்தில் நிம்மதி நிறையும். உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள். கேளிக்கைகளில் பங்கேற்பீர்கள். மருத்துவச் செலவுகள் ஏற்படாது.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரிகள் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். விவசாயிகளுக்கு புதிய குத்தகைகள் தேடி வரும்.
அரசியல்வாதிகள் பாராட்டப்படுவார்கள். கலைத் துறையினர் நல்ல வருமானத்தைப் பெறுவீர்கள். பெண்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
உங்கள் செல்வாக்கு உயரும். உங்களை பிறர் மதிப்பார்கள். ஆன்மிகத்தில் பங்கேற்பீர்கள். சொத்துகள் விற்பனையாகும். உத்தியோகஸ்தர்களின் வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரிகள் யாருக்கும் கடன் தர வேண்டாம்.
விவசாயிகள் நல்ல விலைக்கு பொருள்களை விற்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு மேலிடம் உதவியாக இருக்கும். கலைத் துறையினர் பழைய ஒப்பந்தங்களை முடிக்கச் சிரமப்படுவீர்கள். பெண்கள் மன வலிமையைக் குறைக்கும் யோசனைகளை குறைக்கவும். மாணவர்கள் நினைத்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
அரசு உதவிகளும் ஆதரவும் கிடைக்கும். பெரிய பொறுப்புகளை ஏற்று நடத்துவீர்கள். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். மனதை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். வியாபாரிகள் நல்ல வருமானத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் ஊடுபயிர்களைப் பயிரிடுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு நல்ல யோகம் உண்டு. கலைத் துறையினர் புதிய நுணுக்கங்களை கற்பீர்கள். பெண்களின் ஆரோக்கியம் மேம்படும். மாணவர்களின் சந்தேகங்களை ஆசிரியர்கள் தீர்த்து வைப்பார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
திறமையானவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பயணங்களை மேற்கொள்வீர்கள். கடன் வசூலாகும்.
உத்தியோகஸ்தர்களின் திறமைகள் கூடும். வேலைகளை நினைத்தபடியே முடிப்பீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். விவசாயிகள் பாசன வசதிக்குச் செலவழிப்பீர்கள்.
அரசியல்வாதிக்கு சாதகமான சூழல் உருவாகும். கலைத் துறையினருக்கு வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். பெண்கள் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றுவீர்கள். மாணவர்
களுக்கு பெற்றோரின் ஆதரவு சிறக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தொழிலில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். காரியங்களை முடிப்பீர்கள். பிறருக்கு உதவிகளைச் செய்வீர்கள். வழக்குகளில் சாதகமான சூழல் நிலவும்.
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வும் போனஸýம் கிடைக்கும். வியாபாரிகள் கடையை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் கால்நடைகளால் லாபம் காண்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு கட்சியில் வரவேற்பு உண்டு. கலைத் துறையினர் பாராட்டப்படுவார்கள். பெண்கள் குடும்பப் பிரச்னைகளில் இருந்து விலகி இருப்பீர்கள். மாணவர்கள் யோகா கற்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
முகத்தில் பொலிவும் நடையில் மிடுக்கும் உண்டாகும். உடல்நலம், மனவளம் சிறக்கும். குடும்பத்தில் அன்னியோன்யம் அதிகரிக்கும். ரகசியங்களை யாரிடமும் வெளிப்படுத்த வேண்டாம்.
உத்தியோகஸ்தர்களின் கருத்துக்கு அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். விவசாயிகளுக்கு மானிய உதவிகள் கிடைக்கும்.
அரசியல்வாதிகளின் சுற்றுலாப் பயணம் சிறக்கும். கலைத் துறையினரின் திறமைகள் வெளிப்படும். பெண்கள் புதிய ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
சந்திராஷ்டமம் - நவம்பர் 29