புரட்டாசி 3வது வாரம்: வரதராஜ பெருமாள் கோயிலில் திரளானோர் தரிசனம்!

புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வரதராஜ பெருமாள் கோயில் வரிசையில்..பக்தர்கள்
வரதராஜ பெருமாள் கோயில் வரிசையில்..பக்தர்கள்
Published on
Updated on
1 min read

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான, உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோயில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மாதம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இன்று புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

108 திவ்ய ஸ்தலங்களில்...

அத்திகிரி மலையில் உள்ள மூலவர், உற்சவர், வரதராஜ பெருமாளுக்கு மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்து தீப ஆராதனைகள் செய்து நெய் தீப விளக்கு வெளிச்சத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

சுவாமி தரிசனம் செய்வதற்காக உள்ளூர் வெளியூர் வெளிமாநிலம் என பல்வேறு பகுதியிலிருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து வரதராஜ பெருமாளையும் பெருந்தேவி தாயாரையும் சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டனர்.

கோயில் வளாகத்தில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னதி, அத்திவரதர் துயில் கொள்ளும் அனந்த சரஸ் திருக்குளத்தையும் பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு மகிழ்ச்சியுடன் சென்றனர்.

இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு

மேலும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புரட்டாசி மாதத்தை ஒட்டி வைணவ தேசங்களைத் தரிசிக்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்த சுற்றுலாப் பேருந்தில் வந்த 50க்கும் மேற்பட்ட பக்தர்களும் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

அவர்களுக்கு இந்து சமய அறநிலையை துறை இணை ஆணையர் குமரதுரை ஏற்பாட்டின் பேரில் செயல் அலுவலர்கள் செந்தில்குமார், சீனுவாசன், நடராஜன் ஆகியோர் திருக்கோயில் பிரசாதங்களை வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com