வரம் தரும் வாரம்!

இந்த வாரம் 12 ராசிக்கும் என்னென்ன பலன்கள் என்று தெரிந்துகொள்ளலாம்...
வார பலன்கள்
வார பலன்கள்

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஆகஸ்ட் 6 - 12) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

1. மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

மன உறுதியைக் கைவிடாமல் முயற்சிப்பீர்கள். வேலைகளைத் தொடர்ந்து சுறுசுறுப்புடன் செய்வீர்கள். குடும்பத்தினரை ஆலோசித்து முடிவு எடுப்பீர்கள். வழக்குகள் சாதகமாகும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளுடன் இணக்கமாக இருப்பீர்கள். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விவசாயிகளுக்கு விளைச்சலில் உயர்வு உண்டு. அரசியல்வாதிகள் அந்தஸ்தில் மேன்மை அடைவீர்கள். கலைத் துறையினர் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். பெண்கள் பிள்ளைகளால் மகிழ்வை அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

2. ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

நடைமுறைக்கு உள்பட்ட விஷயங்களைச் செயல்படுத்துவீர்கள். வருவாய் குறையும். தொழிலைச் சீராக நடத்துவீர்கள். தீயவர்களை விலக்கிவிடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அதிக உழைப்பைக் கண்டு மனச் சோர்வுக்கு ஆளாகுவீர்கள். வியாபாரிகள் கோபத்தைக் குறைக்கவும். விவசாயிகள் கால்நடைகளை நன்கு பராமரிப்பீர்கள்.

அரசியல்வாதிகள் முயற்சிகளைக் கூட்டிக் கொள்ளுங்கள். கலைத் துறையினர் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பெண்கள் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் சிரமங்களுக்கு இடையே படிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

3. மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

தடைபட்ட காரியங்கள் நடக்கும். குடும்பப் பொறுப்புகளை ஏற்று நடத்துவீர்கள். தெய்வப் பலத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். பெற்றோரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வுடன், பணியிட மாற்றத்தை எதிர்பார்ப்பீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். விவசாயிகளுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும்.

அரசியல்வாதிகள் கட்சியில் மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். கலைத் துறையினர் நிதானத்துடன் இருக்கவும். பெண்கள் மனம் தளர வேண்டாம். மாணவர்கள் நம்பிக்கையுடன் படியுங்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

4. கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

உழைப்புக்கேற்ற பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தினரை அனுசரித்து நடப்பீர்கள். உடன்பிறந்தோர் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு வயிற்று உபாதைகள் வந்து நீங்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் உள்பூசல் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல்} வாங்கல் விஷயங்கள் சீராகும். விவசாயிகள் பிறருக்கு உதவுவீர்கள்.

அரசியல்வாதிகள் நன்மை அடைவீர்கள். கலைத் துறையினருக்குத் திருப்திகரமாக இருக்கும். பெண்கள் கணவர்வழி உறவினர்களிடம் பாராட்டைப் பெறுவர். மாணவர்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

5. சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

உங்கள் முயற்சிகள் வெற்றி அடையும். நம்பிக்கை வீண் போகாது. இல்லத்துக்கு நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். அரசு கௌரவங்கள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளோடு சுமுகமாக நடப்பீர்கள். வியாபாரிகளுக்கு கூட்டுத் தொழிலில் ஒற்றுமை கூடும். விவசாயிகள் புதிய நிலங்களைக் குத்தகைக்கு எடுப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். கலைத் துறையினர் நினைத்ததை முடிப்பீர்கள். பெண்களுக்கு பொருளாதார அபிவிருத்தி ஏற்படும். மாணவர்களுக்கு மதிப்பெண்கள் உயரும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

6. கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

தொழிலை விரிவுபடுத்த முனைவீர்கள். உடன்பிறந்தோருடன் செயல்படத் தொடங்குவீர்கள். தொல்லை அளித்தவர்கள் விலகிவிடுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறக்கும். உத்தியோகஸ்தர்கள் பாராட்டப்படுவீர்கள்.

வியாபாரிகள் உயர்நிலையை அடைவீர்கள். விவசாயிகள் விளைநிலத்தைச் சிறப்பாகப் பராமரிப்பீர்கள். அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறன் பிறரால் மதிக்கப்படும்.

கலைத் துறையினர் பிறரை ஆலோசித்து முடிவெடுப்பீர்கள். பெண்கள் வீண்வம்புகளில் விலகிவிடுவீர்கள். மாணவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.

சந்திராஷ்டமம் - செப்டம்பர் 20, 21.

7. துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

மருத்துவச் செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தோருடன் சுமுகமாகப் பழகி, காரியங்களை நிறைவேற்றுவீர்கள். நல்லவர்களைச் சந்திப்பீர்கள். அலைச்சலையும் பதற்றத்தையும் தவிர்த்திடுங்கள்.

உத்தியோகஸ்தர்கள் மனதைக் கட்டுப்படுத்தவும். வியாபாரிகளுக்குச் செலவுகள் கூடும். விவசாயிகளுக்கு மகசூல் சுமாராக இருக்கும்.

அரசியல்வாதிகள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். கலைத் துறையினர் பொறுமையாக இருக்கவும். பெண்கள் கணவரின் உடல்நலத்தில் அக்கறை கொள்வீர்கள். மாணவர்கள் கடுமையாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - செப்டம்பர் 22, 23.

8. விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

வீண் செலவுகளைத் தவிர்ப்பீர்கள். வருமானம் சிறப்பாகவே தொடரும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களைச் சந்திப்பீர்கள். பெரியோரின் அறிவுரைகளுக்குச் செவி சாய்க்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுக்கான அறிகுறிகள் தென்படும். வியாபாரிகள் சிறிய முதலீடுகளில் ஈடுபடுவீர்கள். விவசாயிகள் நல்ல லாபத்தை அடைவீர்கள்.

அரசியல்வாதிகள் காரியத்தைச் சிறப்பாக முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு யோகம் உண்டாகும். பெண்கள் சிறுபூசல்களைப் பெரிதுபடுத்த மாட்டீர்கள். மாணவர்கள் மனதை ஒருநிலைப்படுத்தி வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - செப்டம்பர் 24, 25, 26.

9. தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

உயர்பதவிகளில் உள்ளோருடன் அறிமுகம் கிடைக்கும். தந்தையுடனான கருத்து வேறுபாடுகள் குறையும். தொழிலில் மந்த நிலை நீங்கும். சுப காரிய எண்ணங்கள் ஈடேறும்.

உத்தியோகஸ்தர்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களுக்கு உதவுவீர்கள். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு உதவுவீர்கள். கலைத் துறையினர் பணவரவைப் பெற தாமதம் ஏற்படும். பெண்களுக்கு மௌனமாக இருக்கவும். மாணவர்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

10. மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

தோற்றத்தில் பொலிவும் நடையில் மிடுக்கும் உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நேர்வழியில் சிந்திப்பீர்கள். ஆன்மிகத்திலும், தர்மக் காரியங்களிலும் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும். வியாபாரிகளின் எண்ணங்கள் ஈடேறும். விவசாயிகள் இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். கலைத் துறையினருக்கு உதவிகள் கிடைக்கும். பெண்கள் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். மாணவர்களின் முயற்சிகள் ஈடேறும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

11. கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவருவீர்கள். யோகா கற்பீர்கள். தர்மக் காரியங்களில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் பழைய பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் - வாங்கல் நல்லபடியாக அமையும். விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களை அரவணைத்துச் செல்வீர்கள். கலைத் துறையினர் பணவரவைப் பெறுவதில் தாமதத்தைக் காண்பீர்கள். பெண்களுக்கு கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

12. மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். ரகசியங்களைப் பகிர வேண்டாம். மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் சீராகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வழக்கு சார்ந்த பணிகளில் தாமதமான சூழ்நிலை ஏற்படும். வியாபாரிகள் நிதானத்துடன் செயல்படவும். விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு சில உதவிகள் சாதகமாக அமையும். கலைத் துறையினரின் சிந்தனைகள் மேம்படும். பெண்கள் விரும்பிய பொருள்களை வாங்குவீர்கள். மாணவர்கள் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.