திடீர் செலவு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

இன்றைய நாள் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டத்தைத் தரும் எனத் தெரிந்துகொள்வோம்.
தினப்பலன்கள்
தினப்பலன்கள்
Published on
Updated on
4 min read

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

மேஷம்:

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் ராஹூ - ரண, ருண ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனி , கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று ஒரு நல்ல நாள். தொழிலில் மகிழ்ச்சி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் இல்லாமல் போகாது. பணவரத்து அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

ரிஷபம்:

கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன், புதன் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு, சனி, கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று குடும்பத்தில் உறவினருடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. பெண்களுக்கு எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். மனதில் வீண்குழப்பம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 5

மிதுனம்:

கிரகநிலை:

ராசியில் ராஹூ - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - ரண, ருண ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு, சனி , கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று மனதில் இருக்கும் கவலைகளை வெளிக்காட்டாமல் சிரித்த முகத்துடன் அனைவரிடமும் பழகுவீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர்கள் - நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பிரச்சினைகள் அகலும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6

கடகம்:

கிரகநிலை:

தைரிய, வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண, ருண ஸ்தானத்தில் குரு, சனி , கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். பெண்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடக்கும். புதிதாக ஆடை ஆபரணங்கள் சேர்க்கை நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

சிம்மம்:

கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் குரு, சனி , கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு துணிச்சல் அதிகரிக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் வேலையில் வேகம் காட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9

கன்னி:

கிரகநிலை:

ராசியில் செவ்வாய் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு, சனி , கேது - ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண அனுபவ பூர்வமான அறிவு கைகொடுக்கும். தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற நன்கு படிக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

துலாம்:

கிரகநிலை:

ராசியில் புதன் , சூர்யன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில் குரு, சனி , கேது - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - அயன, சயன, போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். உத்தியோகம் தொடர்பான பிரச்சனை தீரும். தொழில் ரீதியிலான காரியங்கள் கை கொடுக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். சுப காரியம் நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 6

விருச்சிகம்:

கிரகநிலை:

ராசியில் சுக்ரன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு, சனி , கேது - சுக ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் ராஹு- லாப ஸ்தானத்தில் செவ்வாய் - அயன, சயன, போக ஸ்தானத்தில் - சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பொருள் சேர்க்கை உண்டாகும். சிற்றின்ப செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். பெண்களுக்கு தடைபட்ட காரியங்களில் இருந்த தடைகள் நீங்கி சாதகமாக நடந்து முடியும். நண்பர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். பணவரத்து திருப்திதரும். வீண்பழி ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

தனுசு:

கிரகநிலை:

ராசியில் குரு, சனி , கேது - தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் ராஹு - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று தொழில் வியாபாரம் மெத்தனமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதல் தரும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் கூடுதல் கவனம் தேவை. அலுவலகத்தில் யாரைப் பற்றியும் புறம் கூறாமல் இருப்பது நன்மை தரும். மாணவர்கள் உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7 ங்

மகரம்:

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - ரண, ருண , ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பணவரத்தும், எதிர்பார்த்த படி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

கும்பம்:

கிரகநிலை:

ராசியில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் , குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். பிள்ளைகளை தட்டி கொடுத்து எதையும் செய்ய சொல்வது நல்லது. உங்கள் கருத்துகளுக்கு மதிப்பில்லாமல் போகலாம். பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். வீண் பேச்சை குறைப்பது நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

மீனம்:

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு, சனி , கேது - அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது. மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com