தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2025 (மேஷம்)

மேஷ ராசிக்கு இந்த தமிழ்ப் புத்தாண்டு எப்படி இருக்கும்?
மேஷ ராசி
மேஷ ராசி
Published on
Updated on
3 min read

தமிழ்ப் புத்தாண்டு பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதம்)

பலன்

அன்பு நிறைந்த மனமும் ஆன்மிகப் பணி செய்வதில் ஆர்வம் நிறைந்த மேஷராசி அன்பர்களே!

உங்கள் பேச்சில் வசீகரமும் இனிமையும் வேதாந்த ரகசியங்களும் கலந்து இருக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்கள் மத்தியில் புதியதொரு மரியாதையும் வரவேற்பும் உங்களுக்கு கிடைக்கப்பெறும். தாயின் உடல்நலத்தில்  சிறு சிறு தொந்தரவுகள் உண்டாகி நல்ல பராமரிப்பின் காரணமாய் உடல் நலம் பெறும்.

பூர்வ புண்ணி சொத்துக்களும் அதனால் வரக்கூடிய தனலாபங்களும் உங்கள் தகுதியை உயர்த்தும் கடன் வழக்கு போன்ற இனங்களிலிருந்து உங்களுக்கு தொந்தரவுகள் ஏதும் அதிகம் வராத வண்ணம் நல்ல பலன்கள் நடக்கும். வெகுகாலம் தீராத பிரச்னைகள் மனதுக்கு சந்தோஷம் தரும் தீர்வை தரும்.

கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் சீரான நிலையே காணப்படும். ஆயுள் அபிவிருத்தி பெறுவதற்கான வகையில் சனியின் நற்செயல்கள் இருக்கும். தந்தை வழி சார்ந்த உறவினர்களால் உங்கள் முன்னேற்றத்தை கண்டு உங்களிடம் உதவி கேட்டு பெற வருவார்கள். நடைமுறை செயல்பாடுகளை அறிந்து அதற்கேற்ப உதவலாம். திருமண வாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு உறவினர் சார்ந்த வகையில் சில தடைகள் வந்து விலகும். வெளிநாடு சென்று திரும்பும் யோகம் அதிகம் உண்டு.

உத்தியோகஸ்தர்கள் அரசு தனியார் துறைகளில் உள்ளவர்களும் இதுவரை இருந்த ஆடம்பர செலவினங்களை தவிர்த்து தங்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சிகாக சுபமங்களச் செலவுகளை செய்யும் வாய்ப்புகள் உருவாகும். உங்களுக்கு தேவையான பொருளாதாரம் நிறைந்த வகையில் கிடைக்கும். நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மற்றவர்களால் வேதவாக்காக கருதப்படும். உங்களது நற்செயல்களால் நிலைத்த புகழும் ஊழியர்களால் அதிகம் நேசிக்கப்படும் சூழ்நிலையும் உருவாகும். வீடு மனை வாகன வகைகளில் நல்ல லாபம் ஏற்படும். புத்திரர்கள் அதிகப்படியாக பணம் செலவழிக்கும் வாய்ப்புகளும் அதனால் தந்தை மகன் உறவு முறையில் சிறிது மனக்குறைவுகளும் உண்டாகி விலகும்.

எதிர்களால் இருந்த இன்னல்கள் மாறி மனம் நிம்மதி பெறும். உடல் ஆரோக்கியமும் உயர்ந்திருக்கும். கணவன் மனைவி ஒற்றுமையில் வாக்குவாதங்கள் உருவாகி தாமாக பிரச்னைகளை புரிந்துகொண்டு பின்னர் நல் அன்புடன் செயல்படுவார்கள். தந்தை வழியில் உள்ள சொத்துக்கள் ஆதாய பலன்களைத் தரும். பார்க்கும் உத்தியோகத்தில் முழு தன்னிறைவும் பாராட்டுகளும் கிடைக்கும்.

தொழிலதிபர்கள் உணவுப்பொருள் உற்பத்தி செய்பவர்கள் நிறைவான விளைச்சல் காரணமாக புதிய சந்தை வசதிகளையும் அதிக பொருளாதார வரவுகளையும் பெறுவார்கள் ஆடம்ப பர்னிச்சர் பொருள்களை உற்பத்தியாளர்கள் ஊழியர்களின் மிகுந்த ஒத்துழைப்பை பெற்று உற்பத்தியிலும் விற்பனையிலும் தகுந்த மேன்மை பெறுவார்கள். உணவுப்பொருள்கள் ஏற்றுமதியாளர் ஓட்டல் தொழில் நடத்துவோர் தொழில் மேன்மைக்காக நிறுவன இட விஸ்தரிப்பு, புதிய கிளை துவக்கம் போன்ற நற்பலன்களைப் பெறுபார்கள் வீடு மனை விற்பவர்கள் அபிவிருத்தி அடைவர். எதிரிகளாலும் வழக்கு தொடர்பானவைகளினாலும் இருந்த மனக்கவலைகள் நீங்கி விடும். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் மறையும் உடல் நலமும் ஆரோக்கியமும் அபிவிருத்தி அடையும் தந்தை வழி உறவினர்களால் மனம் மகிழும் வண்ணம் சுப காரிய நிகழ்வுகள் நடக்கும்.

வியாபாரிகள் வாகன உதிரிபாகங்களை விற்பனை செய்பவர்கள் ரெடிமேட் வியாபாரிகள் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செயவர்கள் தங்கள் தொழிலில் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். கட்டட பணிகளுக்கு தேவையான பொருள்களை விற்பனை செய்பவர்கள் உயர்வான தொழில் வாய்ப்புகளை பெறுவார்கள். காலம் தாழ்ந்து உணவு உண்ணும் வகையில் வேலைப்பளு இருக்கும். பொருளாதார உயர்வுகளும் சமூகத்தில் நல்ல அந்தஸ்தும் உருவாகும். வீடு மனை வாகன யோகங்கள் நிறைவான பலன்களைத் தரும்.

புத்திரர்கள் சார்ந்த வகையில் வீண் செலவுகளை செய்யும் நிலை உருவாகி பின்னர் புத்திரர்களின் புரிந்த மனநிலையினால் துன்பங்கள் நீங்கி விடும். குடும்ப ஒற்றுமையில் குழப்பங்கள் ஏற்பட்டு பின்னர் சரியாகும்

உடல்நலமும் உள்ளநலமும்  ஆரோக்கியமாக இருக்கும். தந்தை வழிசார்ந்த உறினர்கள் சூது மதிக்காரர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகி உங்களிடம் மனவேற்றுமை காட்டுவார்கள். பின்னர் கெடுதல் எண்ணம் மாறி விலகிப்போவார்கள். தொழில் மூலம் கிடைத்த வருவாயை நல்ல வழியில் சேர்க்கும் மார்க்கம் நிறையவே உண்டு.

மாணவர்கள்: கட்டடக்கலை,  விவசாயம்,  இயந்திரங்களை இயக்கவும் பழுது நீக்கவும் தொழில் நுட்ப பயிற்சி பெறும் மாணவர்கள்,  காவல்துறை மற்றும் நாட்டின் பாதுகாப்பு துறை பணிகளில் ஈடுபட்டு மேலும் பணிகளைச் செய்ய தகுமதி படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள், தங்களது படிப்பினால் உயர்ந்த மார்க் பெற்று தகுதியான பணிகளைச் செய்யும் சிறந்த வாய்ப்புகளை பெறுவார்கள். தேவையான பொருளாதார வசதிகள் தன்னிறைவாய் கிடைக்கும். மற்றவர்கள் பாராட்டும் வண்ணம் உங்கள் கெயல்பாடுகள் இருக்கும்.

ஆயுள் ஸ்தானம் சோதனைக்கு உள்ளாவதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மேற்படிப்புக்காக வெளிநாடு சென்று திரும்பும் வாய்ப்புகளும் நிரம்ப உண்டு.

பெண்கள் கைதொழில் ஒன்றை கற்றுக்கொண்டு பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள் தொழில் மேன்மை பெறுவார்கள். குறிப்பாக ஆடை வடிவமைப்பவர் உணவு பண்டங்களை தயாரிப்பவர்கள் அழகு பொருட்களை கை வேலைப்பாட்டினால் உருவாக்கும் பணி செய்பவர்கள் அதிக வேலை வாய்ப்புகளை பெற்று நிறைவான பொருளாதாரம் பெறுவார்கள். திருமண வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் பெண்களுக்கு சரியான வரன் அமையும் நேரத்தில் தடைகள் வந்து விடும்.  திருமணம் ஆன பெண்கள் கணவனுடன் மன பேதங்கள் உருவாகி பெரியவர்களின் சமரசத்தால் நல்வழியில் செயல்படுவார்கள்.

கலைஞர்கள் சினிமா நாடகம் சின்னத்திரை ஆடல் பாடல் போன்றவற்றில் ஈடுபாடு உள்ளவர்கள் தங்கள் தொழிலில் மிகுற்த அக்கறையுடன் செயல்பட்டு நிறைவான பொருளாதாரமும் அதிகமான புகழும் பெறுவார்கள்.

சமையல் கலைஞர்கள் நிறைய வேலை வாய்ப்பு பெறுவார்கள். மரத்தில் சிறபங்களை வடிவமைக்கும் கலைஞர்கள் புதிய முயற்சிகளினால் வரவேற்பு பெறுவர்.

அரசியல்வாதிகள் எதிரிகளின் சூழ்ச்சியால் அவப்பெயர் பெற்று நீங்கள் அவர்களது பலம் குறைந்து நற்செயல்களின் வெளிப்பாடுகள் உயர்வைப்பெற்று புகழ் பெறுவீர்கள் அரசியலுடன் இணைந்த வகையில் தங்களது தொழில் வாய்ப்பை பயன்படுத்துபவர்கள் அரசு சார்ந்த அதிகாரிகளிடம் தகுந்த அனுசரணையுடன் அடைந்து ஏற்றம் பெறுவார்கள்.

அரசியலில் புதிய பிரவேசம் நிகழ்த்த இருப்பவர்கள் சனிபகவானின் நல்லருளைப் பலமாகப் பெற்று மக்களிடம் நற்பெயர் பெறுவார்கள்

அஸ்வினி

இந்த ஆண்டு காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும். வாழ்க்கையில் முன்னேற வேகம் காட்டுவது நல்லது. மன குழப்பம் நீங்கும். தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனகவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். சற்று கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது நல்லது.  திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நன்மை தரும்.

பரணி

எல்லா காரியங்களிலும் அதிக கவனம் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது.  கணவன், மனைவி ஒருவருக் கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும்.

கார்த்திகை 1

பிள்ளைகள்  நலனுக்காக செலவுகள்  செய்ய வேண்டி இருக்கும். எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். அதனால் வெளியூர் பயணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. கணவனின் உடல்நலத்தில் கவனம் தேவை. உங்கள் புத்திக்கூர்மை உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்னைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள்.

பரிகாரம்

அறுபடை முருகன் கோயிலுக்கு ஏதேனும் ஒன்றுக்கு அடிக்கடி தரிசனம் செய்து விட்டு வரவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: “சுப்பிரமணிய புஜங்கம்” பாராயணம் செய்யவும்.

மலர் பரிகாரம்: “செவ்வரளி மலரை” அம்மனுக்கு படைத்துவர துன்பங்கள் யாவும் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com