
நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவிலில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் 1008 பெண்கள் பங்கேற்ற சுமங்கலி பூஜை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆடி மாதம் வளர்பிறையில் முழுநிலவு வருவதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில், சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடு இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் வரலட்சுமி நோன்பை கடைபிடிக்கின்றனர்.
இந்த நிகழ்வினை ஒட்டி நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் சார்பில் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் 1008 பேர் பங்கேற்ற சுமங்கலி பூஜை நடைபெற்றது. இதற்காக ஆயிரம் கால் மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
அங்கு அமைக்கப்பட்டிருந்த மகாலட்சுமி விக்கிரகத்திற்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் 1008 பெண்கள் வரிசையாக அமர்ந்து தங்கள் முன்னால் கலசத்தில் அம்பாளை பிரார்த்தனை செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.
தொடர்ந்து குங்கும அர்ச்சனை செய்யப்பட்டு சுவாமி நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் மற்றும் மகாலட்சுமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.