பிரம்மசிரக் கண்டீஸ்வரர் கோயிலில் பந்தக்கால் முகூர்த்தம்: செப்.4ல் குடமுழுக்கு!

ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயிலில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு திருகுடமுழுக்கு..
பிரம்மசிரக் கண்டீஸ்வரர் கோயிலில் பந்தல்கால்
பிரம்மசிரக் கண்டீஸ்வரர் கோயிலில் பந்தல்கால்
Published on
Updated on
1 min read

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்ம சிரக்கண்டீஸ்வரர் திருக்கோயிலில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு திருகுடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த கண்டியூரில் மங்களாம்பிகா உடனுறை பிரம்மசிரக் கண்டீஸ்வரர் மற்றும் ஸ்ரீ பிரம்மா சரஸ்வதி ஆலயம் அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு சுமார் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டது.

பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, வருகிற 4 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இந்த குடமுழுக்கு விழாவை முன்னிட்டு இன்று பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

முன்னதாக பந்தல் காலுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் கரும்புச்சாறு, இளநீர், திரவிய பொடி உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Summary

Thirukudamuzhuku after 22 years in a thousand-year-old temple..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com