

கோவையில் உள்ள குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கோவை மாவட்டம் மத்வராயபுரம் கூடுதுறை அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு யாக குண்டம் அமைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீரை விநாயகர், குழந்தை வேலாயுத சாமி, துர்க்கை அம்மன், சப்த கன்னிமார்கள், கருப்பண்ணசாமி, இடும்பன் சுவாமி, அகத்தியர், நவகிரக மூர்த்திகளுக்கு கும்பத்திலும் மற்றும் விமான கோபுரத்திலும் புனித நீர் ஊற்றப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் மோட்டார் பம்ப் மூலமாக புனித நீர் தெளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் கோயில் நிர்வாகிகள் சோமசுந்தரம், மோகன்குமார், ஆனந்தகுமார், கதிர்வேல், ராமசாமி, நடராஜன், பிரபு, கதிர்வேல்,ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.