

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அருள்மிகு திாிபுராந்தீஸ்வரா்- கோமதி அம்பாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
கடன் நிவா்த்தி ஸ்தலமாக விளங்கும் இத்திருக்கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அதன்படி மஹாதேவ அஷ்டமி விழா இன்று சிவபெருமானுக்கு உகந்த அன்னாபிஷேகத்துடன் சிறப்பாக நடைபெற்றது.
கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி ஸ்ரீமகாதேவருக்கு உகந்ததாகும். அன்று நடக்கும் அன்னதானத்தில் சிவபெருமான் அடியாருடன் அமா்ந்து அன்னம் அருந்தியிருப்பார் என்பது நம்பிக்கை.
சிறப்பு வாய்ந்த இந்த நாளில் பாளையங்கோட்டையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ திரிபுராந்தீசுவரா் உடனுறை ஸ்ரீ கோமதியம்பாள் திருக்கோவிலில் மஹாதேவ அஷ்டமி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதற்காக அதிகாலை திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு காலை சந்திகள் நடைபெற்றன. தொடா்ந்து கலங்கள் வைத்து கணபதி ஹோமத்துடன் பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு பூா்ணாகுதி நடைபெற்றது.
ஆறுமுகநயினாா் சன்னதி பின்புறம் அமைந்திருக்கும் ஸ்ரீமஹாதேவருக்கு மாபொடி, மஞ்சள்பொடி, வாசனைபொடி பால், தயிா், பஞ்சாமிருதம் தேன் இளநீா் வீபூதி, சந்தணம் என சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. சிறப்பான அன்னாபிஷேகம் விஷேசமாக நடைபெற்றது.
நிறைவாக கும்ப நீா் அபிஷேகம் நடைபெற்றதும் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீமகாதேவா் காட்சி கொடுத்தாா். பஞ்சபுராணம் பாடியதும் மஹாகற்பூர ஆரத்தி நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.