ஆத்தூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் திரளானோர் வழிபாடு!

ஆத்தூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் பக்தர்கள் பெரும் திரளில் தரிசனம் செய்தது பற்றி..
கோயிலில் திரளானோர் வழிபாடு
கோயிலில் திரளானோர் வழிபாடு
Updated on
1 min read

ஆத்தூர் அருகே கோட்டையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் மார்கழி மாத முதல் நாளை முன்னிட்டு அதிக காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கோட்டை பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் மார்கழி மாதம் இன்று பிறந்ததை முன்னிட்டு அதிகாலை  நடை திறக்கப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. 

வண்ண மலர்களால் பிரசன்ன வெங்கடேச பெருமாள் அலங்கரிக்கப்பட்டுச் சிறப்புத் தீபாராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது . மார்கழி முதல் நாளில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கோவிந்தா கோவிந்தா என கோஷசமிட்டு வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர். 

பெருமாள் ஆலயத்தில் திருப்பாவை பாடலை பாடியும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Summary

Regarding the large number of devotees who visited the Athoor Prasanna Venkatesa Perumal temple for darshan...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com