

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் திருக்கோயில் பத்தாம் ஆண்டு பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கோவை பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் எட்டிமடை பகுதியில் அமைந்திருக்கும் 100 ஆண்டு பழமையான எல்லை மாகாளியம்மன் திருக்கோயில் பத்தாம் ஆண்டு பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் அதிகாலை முதல் ஓமம் குண்டம் அமைத்து வேள்விப் பணியை சிவத்திரு குமரலிங்கம் தொடங்கி வைத்து எல்லை மாகாளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து எல்லை மாகாளியம்மன் சிலையை வேள்வி குண்டத்தில் இருந்து எடுத்து கோயில் கருவறைக்கு எடுத்துச் சென்று சிறப்பு அபிஷேகம், பூஜைகள் மற்றும் எல்லை மாகாளியம்மன் அலங்காரம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்கெனவே இந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த கோயிலை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் பணியின்போது இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்பொழுது 2015-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு தொடர்ச்சியாக திருவிழாக்கள் மற்றும் பூஜைகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.