திருமால் அர்ச்சாவதார ரூபியாய் ஸ்ரீநிவாஸன் என்ற திருநாமத்தைக் கொண்டு அருள் புரியும் திருத்தலங்கள் விசேஷமாகக் கருதப்படுகிறது.
திருமகளை திருமார்பில் தரித்த காரணத்தால் அமைந்த திவ்யமான திருநாமம் ஸ்ரீநிவாஸன் என்பதாகும். அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட வந்தவாசி அருகேயுள்ள ஓசூர் கிராமத்தில் 800 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீநிவாஸப் பெருமாள் கோயில் உள்ளது.
இந்தக் கிராமம் முன்பு பிரம்மபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது. க்ருத யுகத்தில் படைப்புக் கடவுளான நான்முகன் இத்திருத்தலத்துக்கு வந்து பெரிய வேள்விகள் நடத்தியதால் "பிரம்மபுரம்' என பெயர் அமைந்திருக்கலாம் என்கின்றது கர்ண பரம்பரையாகக் கூறப்பட்டுவரும் தல வரலாற்று தகவல்.
இந்தப் பகுதியைஆண்டுவந்த சம்புவராய மன்னர் ஒருவர் இத்தலத்துக்கு வந்து பெருமாளின் அழகில் மனம் பறிகொடுத்து இந்த ஊரை அந்தணர்களுக்குத் தானம் அளித்து நித்திய பூஜைகள் குறைவற நடத்திட உதவியதாகத் தெரிய வருகிறது.
இவ்வூர் கோயிலுக்கு அருகில் காணப்படும் பாறையில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு காலிங்கராயன் என்பவர், ஆடி மாதத்தில் சிறப்பு வழிபாட்டுக்காகத் தானம் அளித்த செய்தியை குறிப்பிடுகிறது.
விஜயநகர காலத்து கோயில் கட்டட அமைப்பு, சன்னதி தெரு, வீதிகளின் தோற்றம், நடைபெற்றுவந்த பாரம்பரிய விழாக்கள் போன்றவை இத்தலத்தின் பழைமையை பறைசாற்றுகின்றன.
இத்தலத்து பெருமாளின் திருமேனி அழகை பார்த்து ரசித்து கண்களால் பருக வேண்டும். அபயவரத ஹஸ்தத்துடன் சங்கு சக்கராதாரியாய் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவிமார்களுடன் காட்சியளிக்கும் எம்பெருமானின் திருமேனி அவ்வளவு செளந்தர்யம் வாய்ந்தது நினைவில் வைத்தால் கனவில் காட்சி தரும் ஸ்ரீநிவாஸப் பெருமாள் என்ற பெருமையுடன் பேசப்படும் வழக்கம் அக்காலத்தில் உண்டு. மூலவருக்கு இணையாக உத்ஸவ விக்கிரகங்களும் அழகுற அமைந்துள்ளன.
அலர்மேல்மங்கை தாயாருக்கு தனி சன்னதி உள்ளது. உத்ஸவ மூர்த்திகளாக தாயார், விஷ்வக்úஸனர், சக்கரத்தாழ்வார், ஸ்ரீராமானுஜர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், சுவாமி வேதாந்த தேசிகர், அகோபில மடம்பட்டத்து முதல் அழகிய சிங்கர் ஸ்ரீஆதிவண் சடகோப ஜீயர் ஆகியோர்கள் சன்னதி கொண்டு அருளுவது சிறப்பு. இந்தப் பெருமாளை நினைத்தாலே நமக்கு அருள் கிடைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குப்பையில் கண்டெடுக்கப்பட் பழைமையான கல்வெட்டு

கரூா் அருகே சுமாா் 3,000 ஆண்டுகள் பழைமையான கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு

கடலாடி அருகே 600 ஆண்டுகள் பழைமையான 2 அங்குல கழுகு சிற்பம் கண்டெடுப்பு!
சீா்காழி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான சேதமடைந்த கோயில் சீரமைக்கப்படுமா ?
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



