3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

சபரிமலை மண்டல பூஜை வருவாய் ரூ. 332 கோடியைக் கடந்தது! கடந்த ஆண்டைவிட அதிகம்!

சபரிமலை மண்டல பூஜை வருவாய் ரூ. 332 கோடியைக் கடந்தது!

News image

Center-Center-Bangalore

Updated On :27 டிசம்பர் 2025, 7:23 pm IST

சபரிமலை மண்டல பூஜை வருவாய் ரூ. 332 கோடியைக் கடந்தது :

பத்தனம்திட்டா : சபரிமலை மண்டல பூஜை காலத்தில் வருவாய் ரூ. 332 கோடியைக் கடந்தது. நிகழாண்டு மண்டல பூஜையில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மற்றும் இதர வருவாய் மூலம் சபரிமலை தேவஸ்தானத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை(டிச. 27) மாலை நிலவரப்படி, ரூ. 332.77 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, கடந்தாண்டு மண்டல பூஜை காலத்தில் பெறப்பட்ட வருவாய் ரூ. 297.06 கோடியைவிட ரூ. 35 லட்சத்துக்கும் மேல் கூடுதலாகும். 2025-ஆம் ஆண்டு மண்டல பூஜை காலத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் எண்ணிக்கை 30.56 லட்சத்தைக் கடந்திருப்பதாக திருவிதாங்கூர் தேவஸ்தான வாரிய (டிடிபி) தலைவர் கே. ஜெயகுமார் தெரிவித்தார்.

முன்னதாக, சுவாமி ஐயப்பனுக்கு வெள்ளிக்கிழமை புனிதமான தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. சபரிமலையில் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை சனிக்கிழமை (டிச.27) நடைபெற்ற பின், அதனைத்தொடர்ந்து, இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டு, மகர விளக்கு பூஜைக்காக டிச. 30-இல் திருநடை திறக்கப்பட உள்ளது.

Summary

A total of 30.56 lakh devotees have visited the famed Lord Ayyappa temple here so far during the Mandala Pooja season, generating a revenue of Rs 332.77 crore in the period, Travancore Devaswom Board (TDB) president K Jayakumar said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.